Published:Updated:

What to watch on Theatre & OTT: அகிலன், கொன்றால் பாவம் - இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

March Second Week Movie Releases

இந்த மார்ச் இரண்டாம் வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

Published:Updated:

What to watch on Theatre & OTT: அகிலன், கொன்றால் பாவம் - இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

இந்த மார்ச் இரண்டாம் வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

March Second Week Movie Releases

அகிலன் (தமிழ்)

அகிலன்
அகிலன்

என்.கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அகிலன்'. தான்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பேரடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கொன்றால் பாவம் (தமிழ்)

கொன்றால் பாவம்
கொன்றால் பாவம்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கொன்றால் பாவம்'. இது ஏற்கெனவே கன்னடத்தில் ஹிட்டான படத்தின் ரீமேக். இத்திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மெமரீஸ் (தமிழ்)

மெமரீஸ்
மெமரீஸ்

சியாம் மற்றும் பிரவீன் இயக்கத்தில் வெற்றி, பார்வதி, தய்யனா, ரமேஷ் திலக், ஆர்.என்.ஆர்.மனோகர், ஹரீஷ் பேரடி, சஜில், ஸ்ரீகுமார், சலில்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெமரீஸ்'. இத்திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Thuramukham (மலையாளம்)

Thuramukham
Thuramukham

ராஜீவ் ரவி இயக்கத்தில் நிவின் பாலி, இந்திரஜித் சுகுமாரன், ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன் அசோகன், சுதேவ் நாயர், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, செந்தில் கிருஷ்ணா, நிமிஷா சஜயன், பூர்ணிமா இந்திரஜித் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Thuramukham'. இத்திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Tu Jhoothi Main Makkaar (இந்தி)

Tu Jhoothi Main Makkaar
Tu Jhoothi Main Makkaar

இயக்குநர் லவ் ரஞ்சன் இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர், அனுபவ் சிங் பாசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் 'Tu Jhoothi Main Makkaar'. இத்திரைப்படம் மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Scream VI (ஆங்கிலம்)

Scream VI
Scream VI

டைலர் கில்லட், மாட் பெட்டினெல்லி - ஓல்பின் இயக்கத்தில் மெலிசா பாரெரா, கோர்டனி காக்ஸ், ஜென்னா ஒர்டேகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'Scream VI'. இத்திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Tár (ஆங்கிலம்)

Tár
Tár

டாட் ஃபீல்ட் எழுதி இயக்கியிருக்கும் ஆங்கில மொழி மியூசிக்கல் திரைப்படம் 'Tár'. கேட் பிளான்செட், நோமி மெர்லான்ட், நினா ஹோஸ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

65 (ஆங்கிலம்)

65
65

ஸ்காட் பெக் மற்றும் பிரையன் வூட்ஸ் இயக்கியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் '65'. ஆடம் டிரைவர், அரியானா கிரீன்ப்ளாட், சோலி கோல்மன் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வாரா ஓ.டி.டி ரிலீஸ்கள்...

Accidental Farmer & Co (தமிழ்) - SonyLiv

Accidental Farmer & Co
Accidental Farmer & Co

சுகன் ஜெய் இயக்கத்தில் வைபவ், ரம்யா பாண்டியன், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் வெப்சீரிஸ் 'Accidental Farmer & Co'. இந்த வெப்சீரிஸ் 'SonyLiv' தளத்தில் மார்ச் 10ம் தேதி வெளியாகியுள்ளது.

Anger Tales (தெலுங்கு) - Disney Plus Hotstar

Anger Tales
Anger Tales

பிரபாலா திலக் இயக்கத்தில் மடோனா செபாஸ்டியன், பிந்து மாதவி, சுஹாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு வெப்சீரிஸ் 'Anger Tales'. இந்த வெப்சீரிஸ் 'Disney Plus Hotstar' தளத்தில் மார்ச் 9ம் தேதி வெளியாகியுள்ளது.

Bad Trip (தெலுங்கு) - SonyLiv

Bad Trip
Bad Trip

கிருஷ்ண காந்த் மமிடாலா இயக்கத்தில் ரவிவர்மா, வஜ்ஜா வெங்கட கிரிதர், சைதன்ய கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழி வெப்சீரிஸ் 'Bad Trip'. இந்த வெப்சீரிஸ் 'SonyLiv' தளத்தில் மார்ச் 10ம் தேதி வெளியாகியுள்ளது.

Rana Naidu (தெலுங்கு, இந்தி) - Netflix

Rana Naidu
Rana Naidu

சுபர்ன் வர்மா மற்றும் கரண் அன்ஷுமான் இயக்கத்தில் வெங்கடேஷ் டக்குபதி, ராணா டக்குபதி, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மற்றும் இந்தி மொழி வெப்சீரிஸ் 'Rana Naidu'. இந்த வெப்சீரிஸ் 'Netflix' ஓடிடி தளத்தில் மார்ச் 10ம் தேதி வெளியாகியுள்ளது. இது 'Ray Donovan' என்ற ஆங்கில படைப்பில் இந்திய ரீமேக்காகும்.

College Detectives (இந்தி) - Amazon Prime Video

College Detectives
College Detectives

கபூர் கௌரவ் இயக்கத்தில் முகதா அகர்வால், ஹர்ஷ்பால் சிங், கர்பூர் கௌரவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் 'College Detectives'. இந்த வெப்சீரிஸ் 'Prime Video' தளத்தில் மார்ச் 8ம் தேதி வெளியாகியுள்ளது.

Chang Can Dunk (ஆங்கிலம்) - Disney Plus Hotstar

Chang Can Dunk
Chang Can Dunk

Jingyi Shao இயக்கத்தில் ப்ளூம் லி, பென் வாங், ஜோ ரெனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'Chang Can Dunk'. இத்திரைப்படம் 'Disney Plus Hotstar' ஓடிடி தளத்தில் மார்ச் 10ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது

Luther: The Fallen Sun (ஆங்கிலம்) -Netflix

Luther: The Fallen Sun
Luther: The Fallen Sun

ஜேமி பெய்ன் இயக்கத்தில் இட்ரிஸ் எல்பா, சிந்தியா எரிவோ, ஆண்டி செர்கிஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'Luther: The Fallen Sun'. இத்திரைப்படம் 'Netflix' ஓடிடி தளத்தில் மார்ச் 10ம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஏற்கெனவே வெளியான 'Luther' என்ற டிவி தொடரின் தொடர்ச்சி.

Faraway (ஆங்கிலம்/ஜெர்மன்) - Netflix

Faraway
Faraway

வனேசா ஜோப் இயக்கத்தில் நவோமி க்ராஸ், கோரன் போக்டன், அட்னான் மாரல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Faraway'. இத்திரைப்படம் 'Netflix' தளத்தில் மார்ச் 8ம் தேதி வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓ.டி.டி

டாடா (தமிழ்) - Prime Video

Dada Review | டாடா விமர்சனம்
Dada Review | டாடா விமர்சனம்

கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாடா'. பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Prime Video' தளத்தில் வெளியாகியுள்ளது.

ரன் பேபி ரன் (தமிழ்) - Disney Plus Hotstar

ரன் பேபி ரன் - சினிமா விமர்சனம்
ரன் பேபி ரன் - சினிமா விமர்சனம்

ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரன் பேபி ரன்'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Disney Plus Hotstar' தளத்தில் வெளியாகியுள்ளது.

பொம்மை நாயகி (தமிழ்) - Zee5

பொம்மை நாயகி படத்தில்...
பொம்மை நாயகி படத்தில்...

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்த படம் 'பொம்மை நாயகி'. அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தற்போது 'Zee5' தளத்தில் வெளியாகியுள்ளது.

கிறிஸ்டோபர் (மலையாளம்) - Prime Video

Christopher
Christopher

இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்மூட்டி, சினேகா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் 'கிறிஸ்டோபர்'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Prime Video' தளத்தில் வெளியாகியுள்ளது.

Christy (மலையாளம்) - Zee5

Christy
Christy

ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் மேத்யூ தாமஸ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Christy'. மலையாள மொழித் திரைப்படமான இது தற்போது 'Zee5' தளத்தில் வெளியாகியுள்ளது.

Rekha (மலையாளம்) - Netflix

Rekha
Rekha

ஜித்தின் ஐசக் தாமஸ் இயக்கத்தில் வின்சி அலோஷியஸ், உன்னி லாலு, விஷ்ணு கோவிந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Rekha'. மலையாள மொழித் திரைப்படமான இது தற்போது 'Netflix' தளத்தில் வெளியாகியுள்ளது.

Varayan (மலையாளம்) - Prime Video

Varayan
Varayan

Jijo Joseph இயக்கத்தில் சிஜு வில்சன், மணியன்பிள்ளை ராஜு, ஜெயசங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Varayan'. மலையாள மொழித் திரைப்படமான இது தற்போது 'Prime Video' தளத்தில் வெளியாகியுள்ளது.

Raymo (கன்னடம்) - Zee5

Raymo
Raymo

பவன் இயக்கத்தில் ராஜேஷ் நடரங்க, இஷான், அச்யுத் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Raymo'. கன்னட மொழித் திரைப்படமான இது தற்போது 'Zee5' தளத்தில் வெளியாகியுள்ளது.

Ela Veezha Poonchira (மலையாளம்) - Prime Video

Ela Veezha Poonchira
Ela Veezha Poonchira

சௌபின் சாஹிர், சுதி கொப்பா, ஜுட் ஆண்டனி ஜோசப் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடன் வெளியான மலையாளப் படம் 'Ela Veezha Poonchira'. ஒரு மலை கிராமத்தில் நடக்கும் கொலையைத் துப்பறியும் படமாக இதை இயக்கியிருந்தார் ஷாஹி கபீர். இந்தப் படம் தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது.