Published:Updated:

What to watch on Theatre & OTT: கண்ணை நம்பாதே, Ghosty, Kabzaa - இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?!

What to watch on Theatre & OTT: March 3rd week

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ...

Published:Updated:

What to watch on Theatre & OTT: கண்ணை நம்பாதே, Ghosty, Kabzaa - இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ...

What to watch on Theatre & OTT: March 3rd week

கண்ணை நம்பாதே (தமிழ்)

கண்ணை நம்பாதே படத்தில்...
கண்ணை நம்பாதே படத்தில்...

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்பட இயக்குநர் மு.மாறன்   இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஆத்மிகா, பூமிகா, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. இத்திரைப்படம் மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கோஸ்டி (தமிழ்)

கோஸ்டி
கோஸ்டி

கல்யாண் இயக்கத்தில் யோகி பாபு, காஜல் அகர்வால், கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோஸ்டி (Ghosty)'. இத்திரைப்படம் மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

D3 (தமிழ்)

D3
D3

பிரஜின், வித்யா பிரதீப், சார்லி நடிப்பில் பாலாஜியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் த்ரில்லர் திரைப்படம் 'D3'. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

குடிமகான் (தமிழ்)

குடிமகான்
குடிமகான்

விஜய் சிவன், சாந்தினி, சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணா நடிப்பில் பிரகாஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் காமெடி டிராமா திரைப்படம் 'குடிமகான்'. குடி தொடர்பான பிரச்னைகளை காமெடியாகப் பேசும் இந்தப் படம் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Phalana Abbayi Phalana Ammayi (தெலுங்கு)

Phalana Abbayi Phalana Ammayi
Phalana Abbayi Phalana Ammayi

ஸ்ரீனிவாஸ் அவசராலா, எச். மான்சிங் இயக்கத்தில் நாக சௌர்யா, ஜேமி-லீ பீச்சர், ஸ்ரீனிவாஸ் அவசராலா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித் திரைப்படம் 'Phalana Abbayi Phalana Ammayi'. இத்திரைப்படம் மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Kabzaa (கன்னடம்)

Kabzaa
Kabzaa

ஆர். சந்துரு இயக்கத்தில் உபேந்திரா, சுதீப், ஸ்ரேயா சரண், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள கன்னட மொழித் திரைப்படம் 'Kabzaa'. இத்திரைப்படம் மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Mrs. Chatterjee vs. Norway (இந்தி)

Mrs. Chatterjee vs. Norway
Mrs. Chatterjee vs. Norway

ஆஷிமா சிப்பர் இயக்கத்தில் ராணி முகர்ஜி, நீனா குப்தா, ஜிம் சர்ப் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி டிராமா திரைப்படம் 'Mrs. Chatterjee vs. Norway'. இத்திரைப்படம் மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Zwigato (இந்தி)

Zwigato
Zwigato

நடிகை நந்திதா தாஸ் இயக்கத்தில் கபில் சர்மா, ஷஹானா கோஸ்வாமி, துஷார் ஆச்சார்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் 'Zwigato'. இத்திரைப்படம் மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Shazam! Fury of the Gods (ஆங்கிலம்)

Shazam! Fury of the Gods
Shazam! Fury of the Gods

டேவிட் எஃப். சாண்ட்பெர்க் இயக்கத்தில் சக்கரி லெவி, ஆஷர் ஏஞ்சல், ஜாக் டிலான் கிரேசர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி சூப்பர்ஹீரோ திரைப்படம் 'Shazam! Fury of the Gods'. DCEU-வின் 12வது படமான இது, மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓ.டி.டி ரிலீஸ்கள்...

Satthi Gaani Rendu Yekaralu (தெலுங்கு) - Aha

Satthi Gaani Rendu Yekaralu
Satthi Gaani Rendu Yekaralu

அபினவ் தண்டா இயக்கத்தில் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, அனீஷா தாமா, வம்ஷிதர் கவுட் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித் திரைப்படம் 'Satthi Gaani Rendu Yekaralu'. இத்திரைப்படம் 'Aha' ஓடிடி தளத்தில் மார்ச் 17ம் தேதி வெளியாகியுள்ளது.

Am I Next (இந்தி) - Zee5

Am I Next
Am I Next

ரஹத் காஸ்மி இயக்கத்தில் அனுஷ்கா சென், நீலு டோக்ரா, தாரிக் கான் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் 'Am I Next'. இத்திரைப்படம் 'Zee5' ஓடிடி தளத்தில் மார்ச் 17ம் தேதி வெளியாகியுள்ளது.

In His Shadow (French) - Netflix

In His Shadow
In His Shadow

மார்க் ஃபூச்சார்ட் இயக்கத்தில் காரிஸ், அலசானே டியோங், கார்ல் மலாபா நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்ச் மொழித் திரைப்படம் 'In His Shadow'. இத்திரைப்படம் 'Netflix' ஓடிடி தளத்தில் மார்ச் 17ம் தேதி வெளியாகியுள்ளது.

Noise (Dutch) - Netflix

Noise
Noise

ஸ்டெஃபென் கீபென்ஸ் இயக்கத்தில் சைமன் டி'ஹூவெட்டர், கேடலிஜ்னே டேமன், டோனி டி கோய் நடிப்பில் உருவாகியுள்ள டச்சு மொழித் திரைப்படம் 'Noise'. இத்திரைப்படம் 'Netflix' ஓடிடி தளத்தில் மார்ச் 17ம் தேதி வெளியாகியுள்ளது.

Locked (தெலுங்கு) - Aha

Locked
Locked

பிரதீப் தேவ குமார் இயக்கத்தில் சத்யதேவ், சம்யுக்தா, ஸ்ரீ லக்ஷ்மி, அபேராம் வர்மா, கேசவ் தீபக் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழி வெப்சீரிஸ் 'Locked'. இது 'Aha' ஓடிடி தளத்தில் மார்ச் 17ம் தேதி வெளியாகியுள்ளது.

Pop Kaun (இந்தி) - Disney Plus Hotstar

Pop Kaun
Pop Kaun

ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் குணால் கெம்மு, சவுரப் சுக்லா, ஜானி லீவர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் 'Pop Kaun'. இது 'Disney Plus Hotstar' ஓடிடி தளத்தில் மார்ச் 17ம் தேதி வெளியாகியுள்ளது.

Rocket Boys 2 (இந்தி) - SonyLiv

Rocket Boys 2
Rocket Boys 2

ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் ஜிம் சர்ப், இஷ்வாக் சிங், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் 'Rocket Boys'. ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் 'SonyLiv' ஓடிடி தளத்தில் மார்ச் 16ம் தேதி வெளியாகியுள்ளது.

Shadow and Bone: Season 2 (ஆங்கிலம்) - Netflix

Shadow and Bone: Season 2
Shadow and Bone: Season 2

எரிக் ஹெய்ஸரர் இயக்கத்தில் ஜெஸ்ஸி மெய் லி, பென் பார்ன்ஸ், ஆர்ச்சி ரெனாக்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் 'Shadow and Bone'. இதன் சீசன் 2 'Netflix' ஓடிடி தளத்தில் மார்ச் 16ம் தேதி வெளியாகியுள்ளது.

Class of '07 (ஆங்கிலம்) - Prime Video

Class of '07
Class of '07

Kacie Anning இயக்கத்தில் எமிலி பிரவுனிங், மேகன் ஸ்மார்ட், கெய்ட்லின் ஸ்டேசி நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் 'Class of '07 '. இது 'Prime Video' ஓடிடி தளத்தில் மார்ச் 16ம் தேதி வெளியாகியுள்ளது.

Dom - Temporada 2 (ஆங்கிலம்) - Prime video

Dom - Temporada 2
Dom - Temporada 2

Breno Silveira-வின் படைப்பாக்கத்தில் டோனி பெல்லோட்டோ, ஹிகியா இகேடா, ஃபேபியோ மென்டிஸ், கரோலினா நெவ்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் 'Dom - Temporada 2'. 'Dom' தொடரின் இரண்டாவது சீசனான இது 'Prime Video' ஓடிடி தளத்தில் மார்ச் 17ம் தேதி வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓ.டி.டி...

வாத்தி (தமிழ்/ தெலுங்கு) - Netflix

வாத்தி
வாத்தி

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. தெலுங்கு - தமிழ் என பைலிங்குவல் திரைப்படமாக இது ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Netflix' ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Writer Padmabhushan (தெலுங்கு) - Zee5

Writer Padma Bhushan
Writer Padma Bhushan

சண்முக பிரசாந்த் இயக்கத்தில் டினா ஷில்பராஜ், ரோகினி, ஆஷிஷ் வித்யார்த்தி, ஸ்ரீ கௌரி பிரியா, கோபராஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Writer Padma Bhushan'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Zee5' ஓ..டிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

கந்தடா குடி - Amazon Prime video

Gandhada Gudi
Gandhada Gudi

இயக்குநர் அமோகவர்ஷா இயக்கத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கந்தடா குடி'. ஆவணத்திரைப்படம் போல உருவாகியுள்ள இது தற்போது 'Prime Video' தளத்தில் வெளியாகியுள்ளது.

Kuttey (இந்தி) - Netflix

Kuttey
Kuttey

ஆஸ்மான் பரத்வாஜ் இயக்கத்தில் தபு, அர்ஜுன் கபூர், நசிருதீன் ஷா நடித்துள்ள கேங்ஸ்டர் க்ரைம் த்ரில்லர் படம் 'குத்தே'. இத்திரைப்படம் தற்போது 'Netflix' ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Whale (ஆங்கிலம்) - SonyLiv

Brendan Fraser - The Whale
Brendan Fraser - The Whale

டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்கத்தில் 'மம்மி' புகழ் பிரெண்டன் ஃப்ரேசர், சாடி சிங்க், ஹாங் சாவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் 'The Whale'. இத்திரைப்படம் தற்போது 'SonyLiv' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரெண்டன் ஃப்ரேசர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.