Published:Updated:

What to watch on Theatre & OTT: இந்தப் புத்தாண்டு வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

What to watch on Theatre & OTT; December

இந்தப் புத்தாண்டு வார இறுதிக்காக தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம். இதில் எது உங்கள் சாய்ஸ்?

Published:Updated:

What to watch on Theatre & OTT: இந்தப் புத்தாண்டு வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

இந்தப் புத்தாண்டு வார இறுதிக்காக தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம். இதில் எது உங்கள் சாய்ஸ்?

What to watch on Theatre & OTT; December

தியேட்டர் ரிலீஸ்

செம்பி (தமிழ்)

செம்பி
செம்பி

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடித்துள்ள ‘செம்பி’ திரைப்படம் நேற்று (டிசம்பர் 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோவை சரளா, சிறுமி நிலா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, ஞானசம்பந்தம், உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டிரைவர் ஜமுனா (தமிழ்)

டிரைவர் ஜமுனா
டிரைவர் ஜமுனா

'வத்திக்குச்சி' கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நேற்று (டிசம்பர் 30) திரையரங்குகளில் வெளியானகியுள்ள திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. ஆடுகளம் நரேன், பாண்டியன், ஸ்ரீரஞ்சினி, கவிதா பாரதி, அபிஷேக் குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராங்கி (தமிழ்)

ராங்கி
ராங்கி

எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ளத் திரைப்படம் 'ராங்கி'. இதில் த்ரிஷா துணிச்சலான பத்திரிகையாளராக முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதற்கு கதை எழுதியுள்ளார்.

OMG (தமிழ்)

OMG
OMG

இயக்குநர் யுவன் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் நடிப்பில் நேற்று (டிசம்பர் 30) திரையரங்குகளில் வெளியானகியுள்ள திரைப்படம். இதில் நகைச்சுவை நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், பாலா, தங்கதுரை, தர்ஷா குப்தா, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Djinn (மலையாளம்)

Djinn
Djinn

சித்தார்த் பரதன் இயக்கத்தில் ஷைன் டாம் சாக்கோ, சௌபின் ஷாஹிர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழித் திரைப்படம் 'Djinn'. இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Top Gear (தெலுங்கு)

Top Gear
Top Gear

சசிகாந்த் இயக்கத்தில் ஆதிசசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Top Gear'. ரியா சுமன், மிர்ச்சி ஹேமந்த், பிரம்மாஜி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழித் திரைப்படமான இது நேற்று (டிசம்பர் 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Ved (மராத்தி)

Ved
Ved

ரித்தேஷ் தேஷ்முக் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'Ved'. ஜெனிலியா தேஷ்முக், ஜியா சங்கர், அசோக் சரஃப் உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மராத்தி மொழித் திரைப்படமான இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 30) திரையரங்குகளில் வெளியானகியுள்ளது. இது தெலுங்கில் நாகசைதன்யா, சமந்தா நடிப்பில் வெளியான 'Majili' படத்தின் ரீமேக்.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

உடன்பால் (தமிழ்) - Aha

உடன்பால்
உடன்பால்

கார்த்திக் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, காயத்ரி, அபர்நதி, சார்லி மற்றும் தீனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'உடன்பால்'. இத்திரைப்படம் 'Aha' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 30) வெளியாகியுள்ளது.

Butterfly (தெலுங்கு) - Hotstar

Butterfly
Butterfly

காந்தா சதீஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித் திரைப்படம் 'Butterfly'. அனுபமா, பூமிகா சாவ்லா, நிஹால் கோதாட்டி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 'Disney Plus Hotstar' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 30) வெளியாகியுள்ளது.

White Noise (ஆங்கிலம்) - Disney Plus Hotstar

White Noise
White Noise

நோவா பாம்பாக் இயக்கத்தில் ஆடம் டிரைவர், கிரேட்டா கெர்விக், ராஃபி கேசிடி, டான் சீடில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'White Noise'. இத்திரைப்படம் 'Disney Plus Hotstar' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 30) வெளியாகியுள்ளது.

Encanto at the Hollywood Bowl (ஆங்கிலம்) - Disney Plus Hotstar

Encanto at the Hollywood Bowl
Encanto at the Hollywood Bowl

இயக்குநர்கள் கிறிஸ் ஹோவ், ஜமால் சிம்ஸ், லிண்ட்சே கிரிஸ்டல் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Encanto at the Hollywood Bowl'. இத்திரைப்படம் 'Disney Plus Hotstar' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 30) வெளியாகியுள்ளது.

The Witcher Blood Origin (English) - Netflix

The Witcher Blood Origin
The Witcher Blood Origin

இயக்குநர் டெக்லான் டி பார்ரா உருவாக்கத்தில் சோபியா பிரவுன், லாரன்ஸ் ஓ'ஃபுரைன், மிர்ரன் மேக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப் சீரீஸ் 'The Witcher Blood Origin'. இது கடந்த டிசம்பர் 25ம் தேதி 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது ஹிட்டடித்த 'The Witcher' வெப் சீரிஸின் முன்கதை (Prequel).

Treason (ஆங்கிலம்) - Netflix

Treason
Treason

லூயிஸ் ஹூப்பர், சாரா ஓ'கோர்மன் இயக்கத்தில் சார்லி காக்ஸ், ஓனா சாப்ளின், ஓல்கா குரிலென்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப் சீரீஸ். இது 'Netflix' ஓடிடி தளத்தில் டிசம்பர் 26ம் தேதி வெளியாகியுள்ளது.

The Glory (கொரியன்) - Netflix

The Glory
The Glory

கிம் யூன்-சூக் எழுத்தில் அஹ்ன் கில்-ஹோ இயக்கத்தில் உருவாகியுள்ள கொரிய மொழி வெப் சீரீஸ் 'The Glory'. ஹை-கியோ, லீ டோ-ஹியூன், லிம் ஜி-யோன் உள்ளிட்ட நடிகர்கள் இதில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 'Netflix' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 30ம் தேதி) வெளியாகியுள்ளது.

தியேட்டர் டூ ஓடிடி

பட்டத்து அரசன் (தமிழ்) - Netflix

பட்டத்து அரசன்
பட்டத்து அரசன்

நடிகர் அதர்வா நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் கடந்த நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, பால சரவணன் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கபடி விளையாட்டைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

DSP (தமிழ்) - Sun NXT

DSP
DSP

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், புகழ், தீபா, இளவரசு, ஞானசம்பந்தம், ஷிவானி ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் 'DSP'. இத்திரைப்படம் தற்போது 'Sun NXT' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

GOLD (மலையாளம்) - Amazon Prime video

GOLD
GOLD

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த 'GOLD' திரைப்படம், தற்போது 'Amazon Prime video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், ஜோஷி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். மொபைல் ஷாப் ஓனரான ஜோஷின் வீட்டு வாசலில் திடீரென்று ஒரு நாள் இரவு மர்மமான ஒரு பொலீரோ லோட் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த காரில் என்ன இருக்கிறது, அது ஜோஷியின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதுதான் இதன் கதைக்களம்.

Double XL (இந்தி) - Netflix

Double XL
Double XL

சத்திரம் ரமணி இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா, சாய்ரா கண்ணா, ஹுமா குரேஷி, ராஜ்ஸ்ரீ திரிவேதி, மகத் ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'Double XL'. இத்திரைப்படம் தற்போது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Top Gun: Maverick (ஆங்கிலம்/தமிழ்) - Amazon Prime video

Top Gun Maverick
Top Gun Maverick

ஜோசப் கோசின்ஸ்கி இயக்கத்தில் டாம் குரூஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகிருந்த 'Top Gun: Maverick' திரைப்படம் தற்போது 'Amazon Prime video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வருடம் ஹாலிவுட்டில் பெரும் சாதனையைப் படைத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.