Published:Updated:

What to watch on Theatre & OTT: பதான், அயலி, பிகினிங் - இந்த வீக்கெண்டில் என்னென்ன பார்க்கலாம்?

January Republic Day Releases

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படங்கள் இவைதாம்.

Published:Updated:

What to watch on Theatre & OTT: பதான், அயலி, பிகினிங் - இந்த வீக்கெண்டில் என்னென்ன பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படங்கள் இவைதாம்.

January Republic Day Releases

Pathaan (இந்தி)

Pathaan | பதான்
Pathaan | பதான்

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளத் திரைப்படம் 'பதான்'. இத்திரைப்படம் இந்தி, தமிழ் உட்படப் பல மொழிகளில் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நண்பகல் நேரத்து மயக்கம் (மலையாளம்/தமிழ்)

நண்பகல் நேரத்து மயக்கம்
நண்பகல் நேரத்து மயக்கம்

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்மூட்டி தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. தமிழ், மலையாளம் என இருமொழியும் கலந்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. ரம்யா பாண்டியன், பூ ராமு, அசோக் குமார் எனப் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இது கடந்த வாரம் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் வெளியான நிலையில், இந்த ஜனவரி 26ம் தேதி, குடியரசு தினத்தன்று தமிழ்நாட்டிலும் வெளியாகியுள்ளது.

Beginning (தமிழ்)

Beginning
Beginning

வினோத் கிஷன், கௌரி ஜி.கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜெகன் விஜயா இயக்கத்தில் உருவாகியுள்ளத் திரைப்படம் 'Beginning'. ஒரே திரையில் இரண்டு கதைகள் என ஒரு ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் சினிமாவாக இது உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Hunt (தெலுங்கு)

Hunt
Hunt

மகேஷ் சூரபனேனி இயக்கத்தில் சுதீர் பாபு, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் 'Hunt'. இத்திரைப்படம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Alone (மலையாளம்)

Alone
Alone

ராஜேஷ் ஜெயராமன் எழுத்தில் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் 'Alone'. இத்திரைப்படம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் முழுக்க மோகன்லால் மட்டுமே திரையில் தோன்றி நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பாகும்.

Thankam (மலையாளம்)

Thankam
Thankam

சஹீத் அராபத் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் 'Thankam'. வினீத் ஸ்ரீனிவாசன், பிஜு மேனன், அபர்ணா பாலமுரளி, கிரிஷ் குல்கர்னி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Kranti (கன்னடம்)

Kranti
Kranti

இயக்குநர் ஹரிகிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கும் கன்னட மொழித் திரைப்படம் 'Kranti'. இத்திரைப்படத்தில் தர்ஷன் தூகுதீபா, ரசிதா ராம், வி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Gandhi Godse Ek Yudh (இந்தி)

Gandhi Godse Ek Yudh
Gandhi Godse Ek Yudh

ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் 'Gandhi Godse Ek Yudh'. தீபக் ஆண்டனி, சின்மய் மாண்ட்லேகர், தனிஷா சந்தோஷி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஓடிடி ரிலீஸ்கள்

அயலி (தமிழ்) - Zee5

Ayali Review
Ayali Review

இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் வெப்சீரிஸ் 'அயலி'. அபி நட்சத்திரா, அனுமோல், மதன், லிங்கா, சிங்கம்புலி, டி.எஸ்.ஆர் தர்மராஜ், லவ்லின் சந்திரசேகர், காயத்ரி தாரா, பிரகதீஸ்வரன், ஜென்சன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இது ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று 'Zee5' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

எங்க ஹாஸ்டல் (தமிழ்) - Prime Video

எங்க ஹாஸ்டல்
எங்க ஹாஸ்டல்

இந்தியில் வெளியான ‘ஹாஸ்டல் டேஸ்’-ன் தமிழ் ரீமேக்காக ’எங்க ஹாஸ்டல்’ என்ற வெப்சீரிஸ் 'Prime Video' தளத்தில் ஜனவரி 27ம் தேதி வெளியாகியுள்ளது. சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸில் சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஷ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், கெளதம் ராஜ் மற்றும் டிராவிட் செல்வம்  உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Charming the Hearts of Men (ஆங்கிலம்) - Amazon Prime

Charming the Hearts of Men
Charming the Hearts of Men

எஸ்.இ.டிரோஸ் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் 'Charming the Hearts of Men'. அன்னா ஃப்ரீல், கெல்சி கிராமர், ஸ்டார்லெட் டுபோயிஸ் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 'Prime Video' தளத்தில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியாகியுள்ளது.

Detective Knight: Independence (ஆங்கிலம்)

Detective Knight: Independence
Detective Knight: Independence

எட்வர்ட் டிரேக் இயக்கியிருக்கும் திரைப்படம் 'Detective Knight: Independence'. ப்ரூஸ் வில்லிஸ், லோரென்சோ அன்டோனுசி, டாக்ஸ் காம்ப்பெல், கலேப் கிளிப்டன் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். 'Lionsgate' நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஜனவரி 24ம் தேதி முதல் 'Video on Demand' வழிமுறையில் 'YouTube', 'Apple TV' போன்ற தளங்களில் நேரடியாகக் கட்டணம் செலுத்தி பார்த்துக்கொள்ளலாம்.

The Price of Family (ஆங்கிலம்) - Netflix

The Price of Family
The Price of Family

இயக்குநர் ஜியோவானி போக்னெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ளத் திரைப்படம் 'The Price of Family'. கிறிஸ்டியன் டி சிகா, ஏஞ்சலா பினோச்சியாரோ, தர்மா மங்கியா வூட்ஸ் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 'Netflix' தளத்தில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியாகியுள்ளது.

ShotGun Wedding (ஆங்கிலம்) - Prime Video

ShotGun Wedding
ShotGun Wedding

மார்க் ஹேமர் எழுத்தில் ஜேசன் மூர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ShotGun Wedding'. ஜெனிபர் லோபஸ், ஜோஷ் டுஹாமெல், ஜெனிபர் கூலிட்ஜ், ஸ்டீவ் கூல்டர் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 'Prime Video' தளத்தில் ஜனவரி 27ம் தேதி வெளியாகியுள்ளது.

You People (ஆங்கிலம்) - Netflix

You People
You People

கென்யா பாரிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'You People'. ஜோனா ஹில், லாரன் லண்டன், எடி மர்பி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 'Netflix' தளத்தில் ஜனவரி 27ம் தேதி வெளியாகியுள்ளது.

Jaanbaaz Hindustan Ke (தெலுங்கு) - Zee5

Jaanbaaz Hindustan Ke
Jaanbaaz Hindustan Ke

ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு வெப்சீரிஸ் 'Jaanbaaz Hindustan Ke'. ரெஜினா கசாண்ட்ரா, சுனீத் போரா, ஷர்தா நந்த் சிங் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இது குடியரசு தினத்தையொட்டி 'Zee5' ஓடிடி தளத்தில் ஜனவரி 26ம் தேதி வெளியாகியுள்ளது.

Accused (ஆங்கிலம்) - SonyLiv

Accused
Accused

மார்லி மாட்லின், லீ ரோஸ், மைக்கேல் கியூஸ்டா, மிலன் செய்லோவ் உள்ளிட்டப் பல இயக்குநர்கள் இணைந்து இந்த ஆந்தாலஜியை இயக்கியுள்ளனர். ஸ்டெபானி நோகுராஸ், ஜீன்-மைக்கேல் லீ கால், பீட்ரிஸ் யூஸ்டே, ட்ரெவர் லேயன்ஹார்ஸ்ட் உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இது 'SonyLiv' ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 23ம் தேதி வெளியாகியுள்ளது.

திரையரங்கு டு ஓடிடி

Dhamaka (தெலுங்கு) - Netflix

Dhamaka
Dhamaka

திரிநாதராவ் நக்கினா இயக்கத்தில் ரவி தேஜா மற்றும் ஸ்ரீ லீலா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த தெலுங்குத் திரைப்படமான 'Dhamaka' தற்போது 'Netflix' தளத்தில் கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியாகியுள்ளது.

18 Pages (தெலுங்கு) - Netflix

18 Pages
18 Pages

நிகில் சித்தார்த்தா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் பல்நதி சூர்ய பிரதாப் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த தெலுங்குத் திரைப்படமான '18 Pages' தற்போது 'Netflix' தளத்தில் கடந்த ஜனவரி 27ம் தேதி வெளியாகியுள்ளது.

Saturday Night (மலையாளம்) - Disney Plus Hotstar

Saturday Night
Saturday Night

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி, அஜு வர்கீஸ், சைஜு குருப், சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த மலையாள மொழித் திரைப்படமான 'Saturday Night' தற்போது 'Disney Plus Hotstar' தளத்தில் கடந்த ஜனவரி 27ம் தேதி வெளியாகியுள்ளது.

The Invitation (ஆங்கிலம்) - Netflix

The Invitation
The Invitation
Photo Credit: Marcell Piti

ஜெசிகா எம். தாம்சன் இயக்கத்தில் நதாலி இம்மானுவேல், தாமஸ் டோஹெர்டி, சீன் பெர்ட்வீ, ஹக் ஸ்கின்னே நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படமான 'The Invitation', இன்று (ஜனவரி 28) 'Netflix' தளத்தில் வெளியாகியுள்ளது.