Published:Updated:

What to watch on Theatre & OTT: வாத்தி, Ant-Man, Christy - இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?!

What to watch on Theatre & OTT

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

Published:Updated:

What to watch on Theatre & OTT: வாத்தி, Ant-Man, Christy - இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

What to watch on Theatre & OTT

வாத்தி (தமிழ்)

வாத்தி
வாத்தி

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. தெலுங்கு - தமிழ் என பைலிங்குவல் திரைப்படமாக இது ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் நேற்று (பிப்ரவரி 17ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பகாசூரன் (தமிழ்)

பகாசூரன்
பகாசூரன்

பழைய வண்ணாரப் பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், படங்களை இயக்கிய மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பகாசூரன்'. செல்வராகவன், நட்டி, மன்சூர் அலிக்கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று (பிப்ரவரி 17ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Enkilum Chandrike (மலையாளம்)

Enkilum Chandrike
Enkilum Chandrike

ஆதித்தன் சந்திரசேகர் இயக்கத்தில் சூரஜ் வெஞ்சரமூடு, பேசில் ஜோசப், தன்வி ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Enkilum Chandrike'. மலையாள மொழித் திரைப்படமான இது, நேற்று (பிப்ரவரி 17ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Dear Vaappi (மலையாளம்)

Dear Vaappi
Dear Vaappi

ஷான் துளசிதரன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'Dear Vaappi'. லால், அனகா நாராயணன், நிரஞ்ச் மணியன்பிள்ளை ராஜு உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாள மொழித் திரைப்படமான இது, நேற்று (பிப்ரவரி 17ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Christy (மலையாளம்)

Christy
Christy

ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் மேத்யூ தாமஸ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Christy'. மலையாள மொழித் திரைப்படமான இது, நேற்று (பிப்ரவரி 17ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Vinaro Bhagyamu Vishnu Katha (VBVK) - தெலுங்கு

Vinaro Bhagyamu Vishnu Katha (VBVK)
Vinaro Bhagyamu Vishnu Katha (VBVK)

முரளி கிஷோர் அப்புரு இயக்கத்தில் கிரண் அப்பாவரம், காஷ்மீரா, முரளி சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Vinaro Bhagyamu Vishnu Katha'. தெலுங்கு மொழித் திரைப்படமான இது, நேற்று (பிப்ரவரி 17ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Shehzada (இந்தி)

Shehzada
Shehzada

ரோஹித் தவான் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், கிருத்தி சனோன், மனிஷா கொய்ராலா, பரேஷ் ராவல், ரோனித் ராய், சச்சின் கெடேகர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Shehzada'. இது அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட்டடித்த 'Ala Vaikunthapurramuloo' படத்தின் இந்தி ரீமோக். இந்தப் படம் நேற்று (பிப்ரவரி 17ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Ant-Man and The Wasp: Quantumania (ஆங்கிலம்)

Ant-Man and The Wasp: Quantumania
Ant-Man and The Wasp: Quantumania

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பெய்டன் ரீட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ant-Man and The Wasp: Quantumania'. ஜெஃப் லவ்னஸ், ஜாக் கிர்பி ஆகியோர் இதை எழுதியுள்ளனர். பால் ரட், இவாஞ்சலின் லில்லி, ஜோனதன் மேஜர்ஸ், மைக்கேல் டக்ளஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் நேற்று (பிப்ரவரி 17ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இது MCU-வின் Phase 5-ன் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வார ஓ.டி.டி ரிலீஸ்கள்...

LOST (இந்தி) - Zee5

LOST
LOST

'பிங்க்' இயக்குநர் அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கத்தில் யாமி கௌதம், பியா பாஜ்பாய், ரோஹித் பாஸ்போர் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'LOST'. இந்தி மொழித் திரைப்படமான இது 'Zee5' தளத்தில் பிப்ரவரி 16ம் தேதி வெளியாகியுள்ளது.

Ten Little Mistresses (ஆங்கிலம்) - Prime Video

Ten Little Mistresses
Ten Little Mistresses

ஜுன் லானா இயக்கத்தில் யூஜின் டொமிங்கோ, ஜான் ஆர்சில்லா, போக்வாங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ten Little Mistresses'. ஆங்கில மொழித் திரைப்படமான இது 'Prime Video' தளத்தில் பிப்ரவரி 15ம் தேதி வெளியாகியுள்ளது.

Red Rose (ஆங்கிலம்) - Netflix

Red Rose
Red Rose

மைக்கேல் கிளார்க்சன், பால் கிளார்க்சன் இயக்கத்தில் அமெலியா கிளார்க்சன், நடாலி பிளேயர், எல்லிஸ் ஹோவர்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Red Rose'. ஆங்கில மொழி ஹாரர் வெப்சீரிஸான இது 'Netflix' தளத்தில் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகியுள்ளது.

African Queens: Njinga (ஆங்கிலம்) - Netflix

African Queens: Njinga
African Queens: Njinga

டினா கராவி, எதோஷியா ஹில்டன், சுசன்னா வார்டு, விக்டோரியா அடியோலா தாமஸ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் 'African Queens: Njinga'. அடேசுவா ஓனி, எஷே அசந்தே, மர்லின் உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் 'Netflix' தளத்தில் பிப்ரவரி 15ம் தேதி வெளியாகியுள்ளது.

The Upshaws (Season 3) (ஆங்கிலம்) - Netflix

The Upshaws
The Upshaws

ரெஜினா ஒய்.ஹிக்ஸ், வாண்டா சைக்ஸ் ஆகியோர் இயக்கத்தில் வாண்டா சைக்ஸ், மைக் எப்ஸ், கிம் ஃபீல்ட்ஸ், டயமண்ட் லியான்ஸ், காளி ஸ்ப்ராக்கின்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் 'The Upshaws'. இது அந்தத் தொடரின் 3வது சீசன் என்று குறிப்பிடத்தக்கது. இது 'Netflix' தளத்தில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி வெளியாகியுள்ளது.

The Night Manager (இந்தி) - Disney Plus Hotstar

The Night Manager
The Night Manager

சந்தீப் மோடி இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், அனில் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் 'The Night Manager'. இந்த வெப்சீரிஸ் 'Disney Plus Hotstar' தளத்தில் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகியுள்ளது.

A Girl and an Astronaut (Polish) - Netflix

A Girl and an Astronaut
A Girl and an Astronaut

பார்டோஸ் ப்ரோகோபோவிச் இயக்கத்தில் வனேசா அலெக்சாண்டர், ஜெட்ரெஜ் ஹைக்னர், ஜக்குப் சசாக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள போலாந்து நாட்டு வெப்சீரிஸ் 'A Girl and an Astronaut'. இது 'Netflix' தளத்தில் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகியுள்ளது. ஆங்கில டப்பிங்கிலும் பார்க்கலாம்.

தியேட்டர் டு ஓ.டி.டி

Malikappuram (மலையாளம்) - Disney Plus Hotstar

மாளிகப்புறம் சினிமா காட்சி
மாளிகப்புறம் சினிமா காட்சி

விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உன்னி முகுந்தன், சைஜு குரூப், தேவ நந்தா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குளில் வெளியாகியிருந்த மலையாள திரைப்படமான 'Malikappuram', தற்போது 'Disney Plus Hotstar' தளத்தில் வெளியாகியுள்ளது.

Kalyanam Kamaneeyam (தெலுங்கு) - Aha

Kalyanam Kamaneeyam
Kalyanam Kamaneeyam

அனில் குமார் அல்லாகர் இயக்கத்தில் சந்தோஷ் சோபன், பிரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குளில் வெளியாகியிருந்த தெலுங்கு மொழித் திரைப்படமான 'Kalyanam Kamaneeyam', தற்போது 'Aha' தளத்தில் வெளியாகியுள்ளது.

Veekam (மலையாளம்) - Zee5

Veekam
Veekam

சாகர் இயக்கத்தில் அஜு வர்கீஸ், தயானா ஹமீத், சித்திக் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குளில் வெளியாகியிருந்த தெலுங்கு மொழித் திரைப்படமான 'Veekam', தற்போது 'Zee5' தளத்தில் வெளியாகியுள்ளது.

Sadha Nannu Nadipe (தெலுங்கு) - Disney Plus Hotstar

Sadha Nannu Nadipe
Sadha Nannu Nadipe

லங்கா பிரதீக் பிரேம் கரன் இயக்கத்தில் முகமது அலி, லங்கா பிரதீக் பிரேம் கரன், நாகேந்திர பாபு உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குளில் வெளியாகியிருந்த தெலுங்கு மொழித் திரைப்படமான 'Sadha Nannu Nadipe', தற்போது 'Disney Plus Hotstar' தளத்தில் வெளியாகியுள்ளது.

Gaalodu (தெலுங்கு) - Aha

Gaalodu
Gaalodu

ராஜசேகர் ரெட்டி புலிச்சர்லா இயக்கத்தில் பூசுபள்ளி, அங்கிரெட்டி, ராஜ் பாலா, பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குளில் வெளியாகியிருந்த தெலுங்கு மொழித் திரைப்படமான 'Gaalodu', தற்போது 'Aha' தளத்தில் வெளியாகியுள்ளது.

Lucky Lakshman (தெலுங்கு) - Aha

Lucky Lakshman
Lucky Lakshman

அபி அர் இயக்கத்தில் அமீன், அனுராக், காதம்பரி கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குளில் வெளியாகியிருந்த தெலுங்கு மொழித் திரைப்படமான 'Lucky Lakshman', தற்போது 'Aha' தளத்தில் வெளியாகியுள்ளது.

Cirkus (இந்தி) - Netflix

Cirkus
Cirkus

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இந்தி மொழித் திரைப்படமான 'Cirkus', தற்போது 'Netflix' தளத்தில் வெளியாகியுள்ளது.