சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

SHAREபட்டா பரம்பரை: தெருவோரக் கடைகளின் காதலர்கள்!

பாலாஜி,  பிரவீனா
பிரீமியம் ஸ்டோரி
News
பாலாஜி, பிரவீனா

ஆறு மாசம் ஃபுட் டெலிவரி, யூடியூப்னு ரெண்டையும் பார்த்துட்டு இருந்தேன். பிறகு, முழு நேர யூடியூபராகிட்டேன்.

‘எந்தெந்த ஊரில் என்னென்ன தெருவோரக் கடைகள் பெஸ்டாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு ‘Rolling Sirrr' யூடியூப் தளம் உதவியாக இருக்கும். இதை நடத்தும் பாலாஜியின் காதல் மனைவி பிரவீனாவும் யூடியூபர். இருவரும் ஜீரோ டு சக்சஸ் ஃபுல் யூடியூபரான வெற்றிக்கதை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். முதலில் பாலாஜி தொடங்கினார்.

“பத்து வருஷமா ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்துட்டு இருந்தேன். என் அக்கா வெளிநாட்டில் இருந்தாங்க. அவங்க மூலமா வேலை கிடைச்சு மஸ்கட் போனோம். நானும், பிரவீனாவும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவங்க. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகிட்டோம். பிரவீனா தனியார் கல்லூரியில் பேராசிரியரா வேலை பார்த்துட்டு இருந்தாங்க. வெளிநாடு போனதுக்குப் பிறகு அங்கேயும் ஆசிரியரா வேலை பார்த்தாங்க. திடீர்னு ஒருநாள் நான் வேலை பார்த்த கம்பெனியை மூடப் போகிறதா சொல்லிட்டாங்க. அங்கே வேற எந்த வேலையும் கிடைக்காததனால சென்னைக்கே திரும்பி வந்துட்டோம்.

SHAREபட்டா பரம்பரை: தெருவோரக் கடைகளின் காதலர்கள்!

சென்னை வரும்போது கையில சுத்தமா பணம் கிடையாது. போட்டிருந்த செயினை அடகு வச்சுதான் அந்த மாசம் சமாளிச்சோம். பணத்தேவையைப் பூர்த்தி பண்ணணும்னு வேலை தேடும்போது பள்ளியில் ஆசிரியர் வேலை என் மனைவிக்குக் கிடைச்சது. அவங்க காலேஜ்ல ஒர்க் பண்ணியிருந்தாலும் இந்தச் சூழலில் நமக்கு வேலை ரொம்பவே முக்கியம்னு வேலைக்குச் சேர்ந்தாங்க. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். வெளிநாட்டில் வேலை போய் சும்மா இருந்தப்போ பல யூடியூப் சேனல்களைப் பார்த்தேன். அதை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு 2018-ல் சேனல் ஆரம்பிச்சேன். அருவி படத்தில் வருகிற ‘Rolling Sirrr’ என்கிற டயலாக் ரொம்பவே பவர்ஃபுல்லா இருக்கும். அந்த டயலாக் ரொம்ப பிடிச்சதனால அதையே சேனலுக்குப் பெயரா வச்சிட்டேன். நாங்க குடியிருந்த மஸ்கட்டில் வெளியே போய் கேமராவில் ஷூட்டெல்லாம் பண்ண முடியாது. அதனால வீட்டிலேயே ஒரு குக்கிங் வீடியோ எடுத்துப் பதிவிட்டேன். அதுதான் என் முதல் வீடியோ. நம்ம ஊர்ல நிறைய தெருவோரக் கடைகள் இருக்கு. அதுதொடர்பாக நாம ஏன் வீடியோ பண்ணக் கூடாதுன்னு அதையே முழுவதுமா பண்ணலாம்னு முடிவெடுத்தேன்” என்றதும் பிரவீனா தொடர்ந்தார்.

SHAREபட்டா பரம்பரை: தெருவோரக் கடைகளின் காதலர்கள்!


“அவரால் வேலை பார்த்துட்டே யூடியூப்பிற்கான விஷயங்களைப் பண்ண முடியலைங்கிறதை என்கிட்ட சொன்னார். எனக்குத் தமிழ் படிக்கணும்னு ஆசை. ஆனா, எங்க வீட்ல எல்லாரும் இன்ஜினீயரிங் படிச்சதால என்னையும் அதையே படிக்க வச்சிட்டாங்க. தமிழ் படிக்கணுங்கிற என் ஆசை நிறைவேறவேயில்லை. அதனால, இவரோட ஆசை இதுங்கிறதைப் புரிஞ்சுகிட்டதால நாம அவருக்கு சப்போர்ட் பண்ணலாம்னு நினைச்சேன். வெளிநாட்டில் இருந்தப்போ அவரோட பிறந்தநாளுக்கு ஐபோன் கிஃப்ட் பண்ணினேன். அந்த போனிலேயே அவர் வீடியோ எடுத்து எடிட் பண்ண ஆரம்பிச்சார். அவரோட சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி பண்றதுக்காக ஃபுட் டெலிவரி பண்ண ஆரம்பிச்சார். அந்த டெலிவரி மூலமா கிடைக்கிற பணத்துல வீடியோ செலவைப் பார்த்துப்பார். தினமும் வேலைக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி அவரோட பர்ஸை செக் பண்ணுவேன். பணம் இல்லாம இருந்தா என் கையில் இருக்கிற பணத்தை அவரோட பர்ஸ்ல வச்சிட்டுப் போயிடுவேன். அவர் என்கிட்ட காசு கேட்கிற சூழலை நான் எப்பவுமே அவருக்குக் கொடுத்ததில்லை” என்றவரின் கரம் பற்றி பாலாஜி தொடர்ந்தார்.

“ஆறு மாசம் ஃபுட் டெலிவரி, யூடியூப்னு ரெண்டையும் பார்த்துட்டு இருந்தேன். பிறகு, முழு நேர யூடியூபராகிட்டேன். தெருத்தெருவா அலைஞ்சு சின்னச் சின்னக் கடைகளை அழகாக் காட்சிப்படுத்த ஆரம்பிச்சேன். நான் எடுக்கிற வீடியோவில் என் முகம் இருக்காது. எளிய மனிதர்களின் முகங்கள்தான் இருக்கும்.

SHAREபட்டா பரம்பரை: தெருவோரக் கடைகளின் காதலர்கள்!

நங்கநல்லூரில் 95 வயதான பாட்டியும், அவங்க பொண்ணும் ரோட்டோர டிபன் கடை நடத்திட்டிருந்தாங்க. அவங்க கடையை வீடியோ எடுத்து என் சேனலில் பதிவிட்டேன். அந்த வீடியோ பார்த்துட்டு வியூவர்ஸ் பலரும் உதவி பண்ணினாங்க. அவங்க தனியா கடையே திறந்திட்டதா போன் பண்ணி நன்றி சொன்னாங்க. இப்ப அந்தப் பாட்டி இறந்திட்டாங்க. ஆனாலும், அவங்க மனசார நன்றி சொன்னப்போ வார்த்தையே வரலைங்க” என்று நெகிழ்ந்து சில விநாடிகள் நிதானித்து, “ஊர் ஊரா டிராவல் பண்ணி ரோட்டுக்கடைகளை ஆடியன்ஸுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சிருக்கேன். இதுவரை 300க்கும் மேற்பட்ட கடைகளை அறிமுகப் படுத்தியிருப்பேன். ஹோட்டல்களில் பணம் வாங்கிட்டு புரமோட் பண்றதில்லை. சமீபத்தில் பிரபல தனியார் ஹோட்டலுக்காக புரொமோஷன் பண்ணினேன். அதே ஹோட்டலில் ஃபுட் பாயாக இருந்தப்போ மணிக்கணக்கா வாசலில் நின்னு பார்சல் வாங்கியிருக்கேன். இப்ப இந்த அளவுக்கு வளர்ந்திருக்கோம்னு ரொம்பவே பெருமையா இருக்கு” என்று மீண்டும் நெகிழ்கிறார்.

SHAREபட்டா பரம்பரை: தெருவோரக் கடைகளின் காதலர்கள்!

பிரவீனாவும் தன் பங்களிப்பு குறித்துப் பேச ஆரம்பித்தார்.

“நான் நல்லாப் பேசுவேன் என்பதால் அவர் என்னை ஆங்கரிங் பண்ணி வீடியோ பண்ணச் சொன்னார். அவருக்காக டிரை பண்ணலாம்னு நினைச்சேன். அவர் கேமரா பின்னாடி நின்னுட்டு இப்படிப் பேசு, அப்படிப் பேசுன்னு சொல்லுவார். எனக்கு ஆரம்பத்தில் ரொம்பவே கூச்சமா இருந்துச்சு. எடுத்ததும் பேச வரலை. இவர் சேனல் ஆரம்பிக்கும்போதே பலரும், ‘உனக்கெல்லாம் இது தேவையா... பொழப்பைப் போய்ப் பாரு’ன்னெல்லாம் சொன்னாங்க. இப்ப நாமளும் யூடியூப் தளத்துக்குள் வந்தா நிச்சயம் ஏதாவது சொல்லுவாங்கன்னெல்லாம் யோசிச்சேன். ஆனா, என் வீடியோ பார்த்துட்டு சூப்பரா பண்றன்னு என்கரேஜ் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு மினியேச்சர் கடைக்குப் போய் அங்கிருக்கும் பொருள்களைப் பற்றியும், அவற்றின் விலைப் பட்டியல் பற்றியும் வீடியோ பண்ணினோம். அந்த வீடியோ பண்ணி முடிச்சதும், ‘எனக்கு இதெல்லாம் செட் ஆகாதுப்பா... வேண்டாம்’னு சொன்னேன். அவர் எதுவும் சொல்லாம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டார். பிறகு, அந்த வீடியோவை எடிட் பண்ணி என்கிட்ட காட்டினார். எனக்கே அந்த வீடியோ பிடிச்சிருந்தது. தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சிட்டேன். என்கிட்ட படிக்கிற பசங்க என் வீடியோஸ் பார்க்கிறாங்க. ஸ்கூல் பசங்க இந்த வீடியோக்களைப் பார்க்கிறாங்க என்பதால் கன்டென்ட் விஷயத்தில் ரொம்பவே கவனமா இருக்கேன்” என்கிறார் கறாராக.