சினிமா
Published:Updated:

Shareபட்டா பரம்பரை: “பிரசவத்திலும் பார்வையாளர்கள் உடனிருந்தார்கள்!”

சதீஷ் - சண்முகப்பிரியா
பிரீமியம் ஸ்டோரி
News
சதீஷ் - சண்முகப்பிரியா

2021 நவம்பர் மாதத்தில் இருந்துதான் சேனல் ஹிட் அடிக்க ஆரம்பிச்சது. ‘Before Marriage uruttugal'ன்னு எதார்த்தமா ஒரு கான்செப்ட் வீடியோ பண்ணினோம்.

“காதலிக்கும் போது ரெண்டு பேரும் சேர்ந்து யூடியூப் தளத்தில் ஏதாவது பண்ணணும்னு அடிக்கடி பேசிட்டிருப்போம். திருமணத்துக்குப் பிறகு, ஜோடியா சேர்ந்து vlog பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒன்றரை வருட போராட்டத்துக்குப் பிறகு, இப்ப எங்க சேனல் பயங்கரமா ரீச் ஆகிட்டு இருக்கு!'’ என உற்சாகமாய்ப் பேச ஆரம்பித்தார் சதீஷ்.

நம் குடும்பத்தில் நடக்கும் இயல்பான விஷயங்களை அதே எதார்த்தத்துடன் கான்செப்ட் வீடியோக்களாகப் பார்க்க நினைப்பவர்களுக்கு ‘Spread Love - Satheesh Shanmu' யூடியூப் தளம் நிச்சயம் பிடிக்கும்.

“என் சொந்த ஊர் மதுரை. சின்ன வயசில இருந்தே நடிகனாகணும்னு ரொம்ப ஆசை. படிப்பு முடிஞ்சு ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனாலும், நடிப்பின் மீதுள்ள காதல் குறையவே இல்லை. அந்தச் சமயம் யூடியூப் மிகப்பெரிய பிளாட்பார்மா இருந்துச்சு. யூடியூப் தளம் மூலமா சினிமாவிற்குள் என்ட்ரியாக முடியும் என்கிற நம்பிக்கை என்னையும் தொற்றிக்கொள்ள, அதற்கான முயற்சிகளைச் செய்ய ஆரம்பிச்சேன்.

Shareபட்டா பரம்பரை: “பிரசவத்திலும் பார்வையாளர்கள் உடனிருந்தார்கள்!”

2019-ல் ரெண்டு, மூணு சேனல் ஆரம்பிச்சேன். எதுவுமே ஒர்க் அவுட் ஆகலை. அந்த சேனல் எல்லாத்தையும் மூடுனேனே தவிர, யூடியூபர் ஆகணும் என்கிற எண்ணத்தைக் கைவிடலை” என்றதும், சதீஷ் மனைவி சண்முகப்பிரியா தொடர்ந்தார்.

“காதலிக்கும்போதே ரெண்டு பேரும் யூடியூப்பில் என்னெல்லாம் பண்ண முடியும்னு நிறைய பேசியிருக்கோம். எங்களுக்கு 2020-ல் கல்யாணம் ஆச்சு. கல்யாணம் ஆனதும் கிட்டத்தட்ட ஆறு மாசம் சேனலுக்காக ஒர்க் பண்ணினோம். என்ன மாதிரியான கான்செப்ட் பண்ணலாம், எப்படியெல்லாம் பண்ணினா ஆடியன்ஸுக்குப் பிடிக்கும்னு ரொம்பவே மெனக்கெட்டோம். கிட்டத்தட்ட ஆறு மாசம் கழிச்சு, ‘Spread Love - Satheesh Shanmu' என்கிற பெயரில் சேனல் ஆரம்பிச்சோம்.

2021 நவம்பர் மாதத்தில் இருந்துதான் சேனல் ஹிட் அடிக்க ஆரம்பிச்சது. ‘Before Marriage uruttugal'ன்னு எதார்த்தமா ஒரு கான்செப்ட் வீடியோ பண்ணினோம். கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கும்போது எதை எதையோ சொல்லியிருப்போம். ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு அதில் எதுவுமே நிச்சயமா நடந்திருக்காது. அதை கான்செப்டா வச்சு ஒரு வீடியோ பண்ணினோம். எனக்கு மீம் கிரியேட் பண்ண ரொம்பப் பிடிக்கும். அதனால, நிறைய மீம் சம்பந்தமான பேஜ்களை ஃபாலோ பண்ணுவேன். அப்படிப் பார்க்கும்போது ‘உருட்டு' என்கிற வார்த்தை டிரெண்டிங்காகவும், கேட்சிங் ஆகவும் இருக்குன்னு ஃபீல் பண்ணினோம். அதையே நம்மளுடைய அடையாளமா பயன்படுத்திப்போம்னு தோணுச்சு. அதனால, உருட்டுகள் என்கிற அடையாளத்துடன் கான்செப்ட் வீடியோக்கள் பண்ண ஆரம்பிச்சோம். வீடியோ தவிர்த்து, யூடியூப் ஷார்ட்ஸும் பண்ண ஆரம்பிச்சோம். அந்த கான்செப்ட் வீடியோக்கள் எல்லாமே மில்லியன் வியூஸ் போக ஆரம்பிச்சது” என்பவரைத் தொடர்கிறார் சதீஷ்.

Shareபட்டா பரம்பரை: “பிரசவத்திலும் பார்வையாளர்கள் உடனிருந்தார்கள்!”

“இவங்க கர்ப்பமான உடனேயே சப்ஸ்கிரைபர்ஸ்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டோம். எங்களுடைய கர்ப்பகால டிராவல் முழுவதிலும் சப்ஸ்கிரைபர்ஸும் கூடவே இருந்திருக்காங்க. அதனால, கண்டிப்பா டெலிவரியையும் vlog பண்ணுவோம்னு வியூவர்ஸ்கிட்ட சொல்லியிருந்தோம். ஆனா, எதிர்பார்க்காத நேரத்தில் உடனடியா ஹாஸ்பிட்டலில் என் மனைவியை அட்மிட் பண்ண வேண்டியாகிடுச்சு. அந்த நேரத்திலும், வியூவர்ஸுக்கு விஷயத்தைச் சொல்லணும்னு வீடியோ எடுத்தேன். இந்த நேரத்திலும் வீடியோ தேவையான்னு நெகட்டிவ் கமெண்ட்ஸ் நிறைய வரும்னு நினைச்சேன். ஆனா, எல்லாரும் அவ்வளவு பாசிட்டிவிட்டியையும், அன்பையும் பிரார்த்தனைகளையும் கொடுத்தாங்க. எங்க குழந்தை பிறந்த தருணம் எங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷலா இருந்துச்சோ அதே மாதிரி எங்க சப்ஸ்கிரைபர்ஸுக்கும் ஸ்பெஷலா இருந்துச்சு” என்று சதீஷ் நெகிழ, அதே நெகிழ்ச்சியுடன் சண்முகப்பிரியா பேசினார்.

“முதன்முறையா 100k சப்ஸ்கிரைபர்ஸ் சேனலுக்கு வந்தப்ப நானும் சரி, இவரும் சரி எமோஷனலாகி அழுதுட்டோம். சேனல் வளர, வளர பொறுப்புணர்வும் அதிகமாகியிருக்கு. சின்னப் பசங்களில் இருந்து ஃபேமிலி ஆடியன்ஸ் வரை பலரும் எங்க சேனலைப் பார்க்கிறாங்க. தவறான கருத்தையும், மத்தவங்களைக் காயப்படுத்துற மாதிரியான விஷயங்களையும் பண்ணக் கூடாதுங்கிறதில் உறுதியா இருக்கிறோம்.

Shareபட்டா பரம்பரை: “பிரசவத்திலும் பார்வையாளர்கள் உடனிருந்தார்கள்!”

என் அப்பாதான் எங்க வீடியோவுடைய முதல் விமர்சகர். இதுவரை பெரிய அளவில் அவர்கிட்ட இருந்து பாராட்டு வாங்கியதில்லை. அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எங்க ஃபேமிலி போட்டோவில் எங்க தாத்தா, பாட்டி புகைப்படத்தை வரைந்து கொடுத்தேன். அதை vlog-உம் எடுத்தோம். அந்த வீடியோவில் அப்பா ரொம்ப எமோஷனலாகி அழுதிருப்பார். அந்த வீடியோ எடுத்து முடிச்ச பிறகு, ஆஃப் ஸ்கிரீனில் `உன்னை என் பையன்னு சொல்லிக்க எனக்குப் பெருமையா இருக்குடா!'ன்னு சொன்னார்.

இப்பவரை அப்பா சொன்னதை மதிச்சு, ஐ.டி வேலையை விடாம யூடியூபையும் சேர்த்து கவனிச்சிட்டு இருக்கேன். சில சமயங்களில் முழு நேர யூடியூபராகிடலாம்னு தோணும். ஆனா, இந்தத் தளமும்கூட நிரந்தரமானதல்ல. இப்ப எனக்கு ஒரு குழந்தை வேற இருக்கு. குடும்பத்துக்காகச் செய்ய வேண்டிய கடமைகளை நிச்சயம் செய்யணும். அதனால, ரெண்டையும் பேலன்ஸ் பண்ணிட்டு இருக்கேன்” என்கிறார் சதீஷ்.