Published:Updated:

27 வருடங்களுக்குப் பிறகு இயக்குநராகும் `ரமணா' யூகி!

யூகி சேது ( ப.பிரியங்கா )

யூகி சேது என்ற பெயரைச் சொன்னாலே `ரமணா' படத்தில் அவர் நடித்த போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரம்தான் ஞாபகத்திற்கு வரும். எத்தனையோ படங்கள் அவர் நடித்திருந்தாலும் இந்த கேரக்டரில் அவருடைய யதார்த்த நடிப்பு அனைவரையும் கவனிக்கச் செய்தது.

`வில்லன்', `அசல்' ஆகிய இரு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் இயக்கத்தில் உருவான `கவிதை பாட நேரமில்லை' 1987-ல் வெளியானது. இதைத் தொடர்ந்து `மாதங்கள் ஏழு' என்ற படத்தை இயக்கினார்.

யூகி சேது - கணேஷ் வெங்கட்ராம்
யூகி சேது - கணேஷ் வெங்கட்ராம்

அதன்பின் இவர் படங்கள் இயக்காமல் நடிப்பதில் கவனம் செதுத்தி வந்தார். அதில் பல படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இவர் நடித்த 'ரமணா', இவர் திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றிய 'வில்லன்' ஆகிய இரு படங்களும் வெளியாகி பதினைந்து வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 4, 2017 அன்று யூகி சேதுவைப் பேட்டி எடுத்திருந்தோம். அப்போது உங்களைத் திரையில் பார்க்க முடிவதில்லையே என்ற கேள்விக்கு 'சீக்கிரம் வர்றேன்...' என்றபடி சிரித்தார். இந்நிலையில் 27 வருடங்களுக்குப் பிறகு, படம் ஒன்றை இயக்கவிருக்கிறார், யூகி சேது.

இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார். அதன் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், கணேஷ் வெங்கட்ராம். இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.