Published:Updated:

விஜய், அஜித், சூர்யா, தனுஷ்... மாஸ் ஹீரோக்களை மாற்றிய மேக் ஓவர் படங்கள்!

Tamil Heros
Tamil Heros

விஜய் முதல் சிம்பு வரை ஹீரோக்களை மாற்றிய மேக் ஓவர் படங்களின் லிஸ்ட் இது!

எந்த ஒரு நடிகரும் லைம்லைட்டில் இருப்பதற்கு, பல மேக் ஓவர்கள் தேவைப்படும். அப்படி விஜய் முதல் சிம்பு வரை எப்போதெல்லாம் எந்தெந்த மேக் ஓவர்களில் மாறினார்கள் என்பதைச் சொல்வதே இந்தக் கட்டுரை.

ராம், அபர்ணா, மைதிலி மற்றும் பியானோ... 2019-ல் `ஹே ராம்' அனுபவம் எப்படி இருக்கிறது?

விஜய் - ’திருமலை’

thirumalai vijay
thirumalai vijay

விஜய் ஹீரோவாக அறிமுகமான ’நாளைய தீர்ப்பு’ படத்தில் இருந்தே ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து வந்தாலும், அவரை பக்கா கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியப்படம், ‘திருமலை’. படம் முழுக்க ஆக்‌ஷன் என்பதைத் தாண்டி, ’திருமலை’ படத்தில் தன்னுடைய டெம்ப்ளேட் விஷயங்களாகக் கண்ணாடி, கட்டை மீசை, க்ளீன் ஷேவ் என எதையும் பயன்படுத்தியிருக்க மாட்டார். தூக்கிவாரி சீவிய முடி, ட்ரிம் செய்த தாடி, டெனிம் ஷர்ட் என கெட்டப்பையும் டயலாக் பேசும் மாடுலேஷனையும் மாற்றியிருப்பார். இந்த லுக் அவருக்கு செட்டான பிறகு, தொடர்ந்து பல படங்களில் இதே ஃபார்முலாவை ஃபாலோ செய்தார். அதன்பிறகு, ’துப்பாக்கி’ படத்திலிருந்து வேறு ஒரு மேக் ஓவருக்கு மாறினார். 

அஜித் - ’அமர்க்களம்’

அமர்க்களம்
அமர்க்களம்

அஜித்தை சாஃப்ட் லுக்கில் இருந்து ரஃப் அண்டு டஃப் லுக்கிற்கு மாற்றியது ’அமர்க்களம்’. அதுவரைக்கும் நேர்த்தியான காஸ்ட்யூம், க்ளீன் ஷேவ் என ஐ.டி இளைஞராக இருந்தவரிடம், கழுத்தில் பெரிய செயினை மாட்டிவிட்டு, கையில் சைக்கிள் செயினைக் கொடுத்து ரெளடியாக மாற்றிவிட்டார்கள். க்ளீன் ஷேவ் லுக்கைவிட க்ளீன் செய்யாத தாடியைப் பலரும் லைக் செய்ய, அதே லுக்கில் பல படங்களில் நடித்தார் அஜித். அதில், ’தீனா’ வேற லெவல் ரகம். பிறகு, உடல் எடையைக் குறைத்து, லாங் ஹேர் வைத்து ’பரமசிவன்’ படத்தில் வேறு ஒரு லுக்கிற்கு மாறிய அஜித், ’பில்லா’ படத்திலிருந்து ஸ்டைலிஷ் லுக்கில் வலம் வந்தார். ’மங்காத்தா’ படத்திலிருந்து ’நேர்கொண்ட பார்வை’ படம் வரைக்கும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்தான்.

சூர்யா - ’கஜினி’

`வாரணம் ஆயிரம்'
`வாரணம் ஆயிரம்'

’நேருக்கு நேர்’ படத்திலிருந்து ’ஃப்ரெண்ட்ஸ்’ படம் வரைக்கும் கட்டை மீசை, க்ளீன் ஷேவ் என ஸ்மார்ட் பாய் லுக்கிலேயே இருந்த சூர்யாவை, ’நந்தா’ படம் மூலம் வேறு ஓர் ஆளாக மாற்றினார், இயக்குநர் பாலா. ’நந்தா’ கெட்டப்பில் இருந்து தாடியை மட்டும் எடுத்துக்கொண்ட சூர்யா, ’ஸ்ரீ’, ’மெளனம் பேசியதே’ என இரண்டு படங்களிலும் தாடியோடு நடித்தார். பிறகு, ’காக்க காக்க’ படத்திற்காக போலீஸ் கெட்டப் போட்ட சூர்யா, ’கஜினி’ சஞ்சய் ராமசாமி கேரக்டர் மூலமாக பல ரசிகைகளைச் சம்பாதித்தார். அதே லுக்கில், ’சில்லுனு ஒரு காதல்’, ’வாரணம் ஆயிரம்’, ’அயன்’, ’ஆதவன்’ எனத் தொடர்ந்தவர், ’சிங்கம்’ படம் மூலம், ’ஜாக்கி பேட்’ தாடி ஸ்டைலை டிரெண்ட் ஆக்கினார். 

விக்ரம் - ’சேது’

Aariro - Deivathirumagal
Aariro - Deivathirumagal

’சேது’ படத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், விக்ரமுக்கு பெரிய ப்ரேக் கொடுத்த படம், ’சேது’. இந்தப் படத்திலிருந்து ஒரே லுக்கில் நடித்துவந்தவர், ’தில்’, ’காசி’, ’தூள்’, ’பிதாமகன்’ என கெட்டப்பில் வெரைட்டி காட்ட ஆரம்பித்தார். தமிழ் சினிமாவின் இரண்டாவது கமல் எனப் பெயர் எடுக்கும் அளவுக்கு, பல கெட்டப்களையும் அதற்கான மெனக்கெடல்களையும் செய்தார். ’அந்நியன்’, ’பீமா’, ’தெய்வதிருமகள்’, ’ஐ’, ’இருமுகன்’ எனத் தனக்கான கெட்டப் இதுதான் என எதையும் ஃபிக்ஸ் செய்யாமலே ஓடிக்கொண்டிருக்கிறார் விக்ரம். இவர், பல கெட்டப்களுக்கு மாறினாலும், அவரைப் பலருக்கும் அடையாளப்படுத்திய ’சேது’ கெட்டப்பே அவருக்கான மேக் ஓவரைக் கொடுத்தது என்று சொல்லலாம். துருவ் விக்ரம் நடித்திருக்கும் ’ஆதித்ய வர்மா’ பட டிரெய்லரில், அவரின் தோற்றம் விக்ரமின் ’சேது’ கெட்டப்பை ஞாபகப்படுத்துவது கூடுதல் சிறப்பு.

தனுஷ் - ’ஆடுகளம்’

ஆடுகளம்
ஆடுகளம்
screenshot taken from sunNXT
வெறிபிடித்தாடிய வினோத்; அசுர வேட்டை நிகழ்த்திய சிவசாமி... தமிழ் சினிமாவின் தங்க மகன் தனுஷ்!

முதல் படத்திலிருந்தே நடிப்பில் வெரைட்டி காட்ட ஆரம்பித்த தனுஷுக்கு, ’ஆடுகளம்’ தேசிய விருதை வாங்கிக்கொடுத்தது. ’ஆடுகளம்’ மூலம் நடிப்பில் உச்சம் தொட்ட தனுஷ், அடுத்தடுத்த படங்களிலும் அதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். ’ஆடுகள’த்தில் நடிப்பு மட்டுமில்லாது கெட்டப்பிலும் வித்தியாசம் காட்டியிருந்தார், தனுஷ். பல நடிகர்களின் கெட்டப் ஒரு டிரெண்டை உருவாக்கியிருக்கிறது. அப்படி தனுஷின் ’மாரி’ கெட்டப், பல இளைஞர்களை ’மாரி’யாகவே மாற்றியது. கிர்தா, மீசை, குறுந்தாடி, கண்ணாடி, சிலுக்கு சட்டை, வேட்டி என ’மாரி’ கெட்டப்பும், காஸ்ட்யூமும் அவ்வளவு பிரபலம்.

சிம்பு -  ’விண்ணைத்தாண்டி வருவாயா’

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா

சிம்பு என்றால் டிரெண்டு. புருவத்தில் வளையம் மாட்டுவது, விரலில் துணி மோதிரம் போடுவது, கையில் வயரை கட்டிக்கொள்வது என அவர் எது செய்தாலும், இளைஞர்கள் மத்தியில் அது பற்றிக்கொள்ளும். ஆனால், இது எதையுமே செய்யாமல் சிம்பிள் சிம்புவாக வலம்வந்த படம், ’விண்ணைத்தாண்டி வருவாயா’. க்ளீன் ஷேவ், ஜெல் போட்டு செட் செய்த ஹேர் ஸ்டைல் எனத் தனது கெட்டப்பை செட் செய்த சிம்பு, ’வானம்’, ’ஒஸ்தி’, ‘போடா போடி’, ’வாலு’ எனத் தொடர்ந்து அதே கெட்டப்பில் நடித்துவந்தார். ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் போலவே ’அச்சம் என்பது மடமையடா’ படத்திலும் சிம்புவை அடுத்த கெட்டப்புக்கு மாற்றிவிட்டார், கெளதம் மேனன். அடுத்து எந்த கெட்டப்பில் சிம்பு வருவார் என எதிர்பார்த்த ரசிகர்கள், தற்போது சிம்பு வருவாரா என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘வரணும்... பழைய சிம்புவா திரும்ப வரணும்...!’

அடுத்த கட்டுரைக்கு