Published:Updated:

தினம் ஒரு பிரச்னை... மொபைல் வீடியோவில் யூ டியூப்பில் ஹிட் அடிக்கும் மதன் கெளரி!

தினம் ஒரு பிரச்னை... மொபைல் வீடியோவில் யூ டியூப்பில் ஹிட் அடிக்கும் மதன் கெளரி!
தினம் ஒரு பிரச்னை... மொபைல் வீடியோவில் யூ டியூப்பில் ஹிட் அடிக்கும் மதன் கெளரி!

தினம் ஒரு பிரச்னை... மொபைல் வீடியோவில் யூ டியூப்பில் ஹிட் அடிக்கும் மதன் கெளரி!

`` `பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேன் என நினைத்தாயோ!' என்பதுதான் என்னோட ஃபேவரைட் quote" என்று தொடங்கினார், அந்த மதுரை இளைஞர். ராஜராஜ சோழன் முதல் அசோகர் வரை அரசர்களின் வீரச் செயல்கள், ஹிட்லர் முதல் பட்லர் வரை தனிநபரின் வாழ்க்கைப் பதிவுகள், அரசியல், ஆரோக்கியம், ஆன்மிகம் போன்ற பொது விஷயங்கள், பேய்கள், `டாவின்சி கோட்', `பத்மாவதி' போன்ற சர்ச்சைகள் நிரம்பிய மர்மங்கள், மாதவிடாய், சுயஇன்பம் போன்ற ஒதுக்கப்பட்ட விஷயங்கள் என எந்தத் தலைப்பாக இருந்தாலும் ஒரே ஒரு மொபைல் போன் வைத்தே அனைத்துத் தகவல்களையும் தெளிவான தமிழில் விளக்கமளிக்கிறார், 24 வயதான மதன் கௌரி. மிகக் குறுகிய காலத்தில், தனி ஒருவனாக நின்று யூ-ட்யூபில் அதிக பார்வையாளர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்ட அவருடன் சிறு உரையாடல்...

``இப்படி காணொலி பண்ணணும்கிற ஐடியா எப்படி வந்தது?''

``பொதுவாவே எனக்கு நிறைய பேசப் பிடிக்கும். எனக்குத் தெரிஞ்ச சில விஷயங்களை மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு நினைப்பேன். காலேஜ்ல இருந்தப்போ, நான் பேசுறதை யாருமே கேட்க மாட்டாங்க. அதுக்காக ஆள் தேடிட்டு இருந்தப்போ, சும்மா என் பேர்லயே ஸ்டார்ட் பண்ணினதுதான் `மதன் கௌரி யூ-ட்யூப் பேஜ்'. அந்த சமயத்துல டீமானிடைசேஷன், ஸ்வாதி மர்டர்னு நிறைய பிரச்னைகள் பேசப்பட்டன. ஏதோ ஒரு வேகத்துல ஆரம்பிச்சேன். இந்தளவுக்கு ரீச்சாகும்னு நினைக்கலை.''

``ஒரே ஒரு மொபைல் மட்டும் வெச்சு இவ்ளோ மக்களை ஈர்த்திருக்கும் உங்களோட வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?''

``2013-ல ட்ரை பண்ணிப்பாப்போம்னு ஆரம்பிச்சேன். ஆரம்பிச்ச புதுசுல 9 Subscribersதான் இருந்தாங்க. `சிங்கிள் டிஜிட், எப்படா டபுள் டிஜிட்டா மாறும்!'னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். கொஞ்ச காலத்துக்கு அப்புறம் தொடர்ந்து வெயிட் பண்ண முடியாம, நானே ஒரு Fake அக்கவுன்ட் க்ரியேட் பண்ணி, Subscribe செஞ்சேன். இப்படியெல்லாம் பண்ண காலம் போய், இப்போ சுமார் 1,75,000 பேர் என் வீடியோவைப் பார்க்கிறாங்கனு நினைக்கிறப்போ, ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு சொசைட்டிக்கு educate பண்ணணும்னு நினைச்சேன். ஓரளவுக்கு வெற்றியும் அடைஞ்சிருக்கேன். முன்னாடியெல்லாம் அப்பப்போ வீடியோ அப்லோடு பண்ணுவேன். இப்போ தினமும் ஒரு வீடியோ அப்லோடு பண்ணிடுறேன். பெரிய கூட்டணி வெச்சு பிரமாண்டமா விஷுவல் எஃபெக்ட்ஸ் எல்லாம் போடாம, சாதாரண ஒரு பையன் சாதாரண மொபைல்ல எடுக்கிற வீடியோவுக்கு ஆதரவு அளித்த எல்லாருக்கும் என்னோட நன்றி.''

``விதவிதமான, வித்தியாசமான பல தலைப்புகளை எப்படி எடுக்கிறீங்க?''

``நான் எடுக்கிற டாப்பிக்ஸ் எல்லாமே பொதுமக்கள் பரிந்துரைக்கிறதுதான். பொதுவாவே ஒரு வீடியோ எடுக்கிறப்போ அவங்ககிட்ட நான் அடுத்தது என்ன டாப்பிக்ல பேசணும்னு நினைக்கிறீங்கன்னு கேட்ருவேன். அவங்களும் நிறைய டாப்பிக்ஸ் சஜ்ஜஸ்ட் பண்ணுவாங்க. விதவிதமா டாப்பிக்ஸ் கிடைக்கும். நிறையா டாப்பிக்ஸ் ரொம்பவே புதுசா, இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். இப்படி பலவிதமா சஜ்ஜஷன் வர்றதுனால எனக்கும் அது பற்றித் தெரிஞ்சுக்க ஆர்வம் ஜாஸ்தியாகுது. புவியியல், அறிவியல், மர்மம்னு வித்தியாசமான ஏகப்பட்ட டாப்பிக்ஸ் தினமும் மக்கள் கேட்பாங்க. ஸோ... நான் எதுமே புதுசா பண்ணலை. எல்லாமே மக்கள் கையிலதான் இருக்கு. சுவாரஸ்யமான சில விஷயங்கள் ஏதாவது கேள்விப்பட்டா, நானே அதை வீடியோ எடுத்து போஸ்ட் பண்ணுவேன். இப்படியும் சிலநேரம் நடக்கும்.''

``நீங்க கொடுக்கிற தகவல்கள் நூறு சதவிகிதம் உண்மைனு எப்படி நம்புறீங்க?''

``என்னால முடிஞ்ச அளவுக்கு நிரூபிக்கப்பட்ட தகவல்களைத்தான் கொடுக்கிறேன். ஒரு டாப்பிக் எடுத்து அது பற்றிய தகவல்களை நல்லா படிச்சு, அதுக்கான ரிசர்ச் வேலைகளையும் செஞ்சுட்டுதான் வீடியோ எடுப்பேன். சொல்றதெல்லாம் சின்னத் துரும்புதான். சொன்னதுக்கு அப்புறம், நிச்சயமா அது பற்றி மக்களும் ரிசர்ச் பண்ணாம இருக்க மாட்டாங்க. தவறு செய்றது மனுஷங்களோட இயல்பு. ஒருவேளை தப்பா சொல்லிட்டேன்னா,  நிச்சயமா அத rectify பண்ணிப்பேன்.''

``மறக்க முடியாத பாராட்டு, ஏதாவது இருக்கா?''

நிறைய இருக்கு. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாம மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கானு எல்லா நாட்டுல இருக்கிற தமிழ் மக்களும் என் வீடியோவைப் பார்க்குறாங்க; விஷ் பண்றாங்க. அதுல மறக்க முடியாதது, பாகிஸ்தான் சுதந்திர நாள் பற்றிய வீடியோவைப் பார்த்துட்டு, ஒரு பாகிஸ்தான் பொண்ணு விஷ் பண்ணதுதான்.''

``சாதி பற்றிய உங்க கருத்து?''

``சாதி, மதம் எல்லாமே நாம உருவாக்கினதுதான். தனி ஒரு மனுஷன், எப்போ இதெல்லாம் விட்டு வெளியே வருகிறானோ, அப்போதான் இந்த சிஸ்டம் ஒழியும்.''

அடுத்த கட்டுரைக்கு