Published:Updated:

திடீரென குறைந்தது சர்க்குலேசன்... கைமாறியது `டைம்' இதழ்!

திடீரென குறைந்தது சர்க்குலேசன்... கைமாறியது `டைம்' இதழ்!
திடீரென குறைந்தது சர்க்குலேசன்... கைமாறியது `டைம்' இதழ்!

மெரிக்காவின் முக்கிய மீடியா நிறுவனங்களை புதிய தலைமுறை பணக்காரர்கள் கைப்பற்றிவருகின்றனர். அமேசான் அதிபர் ஜெஃப் பெஸோஸ், கடந்த 2013 -ம் ஆண்டு புகழ்பெற்ற 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையை வாங்கினார். பாஸ்டன் ரெட் ஃபோக்ஸ் அதிபர் ஜான் ஹென்றி 'பாஸ்டன் குளோப்' பத்திரிகையை சொந்தமாக்கினார். பயோடெக்னாலஜி  துறையில் கொடிக்கட்டிப்பறக்கும்  பேட்ரிக் சூன் சியாங், 'லாஸ்ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' பத்திரிகை நிறுவனத்தைக் கைப்பற்றினார்.  பெரும் பணக்காரர்  வாரன் பப்பட்கூட மீடியாத் துறையில் முதலீடுசெய்துள்ளார். அந்த வரிசையில், புகழ்பெற்ற 'டைம்' இதழும்  கைமாறியுள்ளது. சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் நிறுவன அதிபர் மார்க் பெனியாஃப், அவரின் மனைவி லின்னி  மெர்டித் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து 'டைம்' இதழை 190 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளனர். 

'தற்போதைய நிர்வாகக்குழுதான் எடிட்டோரியல் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும். எடிட்டோரியல் மற்றும் டைம் இதழின் பிற பணிகளில் மார்க் பெனியாஃப் தலையிட மாட்டார்'' என்று 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம் இதழின் எடிட்டர் இன் சீஃப் எட்வர்ட் ஃபெல்ஸென்டல், ''எங்களுக்கு இது முக்கிய காலகட்டம்.  புதிய உரிமையாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வு எங்களுக்கு பக்கபலமாக  இருக்கும். எங்கள்மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை புதிய பாதைக்கு அழைத்துச்செல்லும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

1923- ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி, 'டைம்' முதல் இதழ் வெளியானது. உலகம் முழுக்க வெளியாகும் இந்த இதழின் மொத்த சர்க்குலேஷன் 30 லட்சம். 2.6 கோடி வாசகர்கள் இருக்கிறார்கள். நியூயார்க் நகரில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. விளம்பர வருவாய் குறைந்ததும் சர்க்குலேஷன் 30 லட்சத்தில் இருந்து 23 லட்சமாகக் குறைந்ததும், டைம் இதழ் விற்கப்பட காரணம் என்று சொல்லப்படுகிறது.  

மெர்டித் கார்ப்பரேஷன் நிறுவனம், டைம் இதழ் தவிர ஃபார்ச்சூன், மணி, ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் ஆகிய இதழ்களை நடத்துகிறது. இதழை தகுதியானவர் கையில் ஒப்படைத்திருப்பதாக மெர்டித் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது  உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களை ஒவ்வோர் ஆண்டும் தேர்வுசெய்து, இந்த இதழ் அறிவிக்கும்.