தரையில் மெல்லிய அதிர்வுடன் கேட்ட சத்தத்தில் கண் விழித்தான் தினேஷ். அருகில் இருந்த செல்போனை எடுத்துப் பொத்தானை அழுத்தினான். நேரம் 4.10.

பத்தாம் வகுப்பு படிக்கும் தினேஷின் வீடு, ரயில்வே டிராக்கை ஒட்டியிருக்கிறது.குழந்தைப் பருவத்திலிருந்து பல ஆயிரம் ரயில்களைத் தினேஷ் பார்த்துவிட்டான். எந்த நேரத்தில் எந்த ரயில் வரும், எத்தனை பெட்டிகள் இருக்கும் எல்லாமே அவனுக்கு மனப்பாடம். ஆனால், தினேஷ் இதுவரை ரயிலில் ஏறி வெளியூருக்குச் சென்றதில்லை. முதல்முறையாக அடுத்த வாரம் பெங்களூருக்குச் செல்லப்போகிறான். அதை நினைக்கும்போதே அவனுக்கு உற்சாகமாக இருந்தது.

பெங்களூருவில் கிரிக்கெட் டோர்னமென்ட். அதில், தினேஷின் பள்ளி அணி தேர்வாகியிருக்கிறது. தினேஷ்தான் டீமின் கேப்டன். சிறுவயதிலிருந்தே அவனுக்கு கிரிக்கெட் மீது அவ்வளவு ஆர்வம். குச்சி, கட்டைகளை வைத்து விளையாடியவன். பள்ளி கிரிக்கெட் டீமில் ஏழாவது பேட்ஸ்மேனாக ஆரம்பித்து, இப்போது கேப்டனாக உயர்ந்திருக்கிறான்.

‘முழிப்பு வந்துருச்சு... போய் பிராக்டிஸ் பண்ணுவோம்’ என நினைத்தவாறே எழுந்து, பந்து மற்றும் மட்டையை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தான். சத்தம் கேட்டுப் புரண்ட அம்மா, ‘தினேஷ் எங்கே போற?’ எனக் கேட்டார்.
‘பிராக்டிஸ் பண்றேம்மா. அடுத்த வாரம் டோர்னோமென்ட் போகணுமில்லே’ என்றான் தினேஷ்.

‘இருட்டா இருக்கு. பார்த்துடா’’ என்றார் அம்மா.

இருட்டு எல்லாம் தினேஷுக்குப் பழகிவிட்டது. தெருவிளக்கு வெளிச்சத்தில் ரயில்வே டிராக்கை ஒட்டியிருந்த சுவரில் பந்தைத் தூக்கிப்போட்டு, அது திரும்பி வந்தபோது மட்டையால் அடித்தான். அடிக்கடி ரயில்கள் கடக்கும் தடக் தடக் சத்தம்.
சற்று நேரத்தில் வெளிச்சம் வரத்தொடங்க, நடமாட்டம் ஆரம்பித்தது. குறிப்பாக, பெண்கள் வரிசையாகச் சற்றுத் தொலைவில் இருந்தபொது கழிப்பறையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். அங்கிருக்கும் நாற்பது குடும்பங்களுக்கும் அந்த ஒரு பொது கழிப்பறைதான். அதிலும், பெண்கள் பகுதி கழிப்பறைதான் ஓரளவுக்குச் சரியாக இருக்கும். ஆண்கள் கழிப்பறை மிக மோசமாக உடைந்துள்ளது. எனவே, ஆண்களும் சிறுவர்களும் ரயிலே டிராக்கை ஒட்டிப் புதர்ப் பகுதிக்குத்தான் சென்று காலைக் கடனைக் கழிப்பார்கள்.

‘`என்னடா தினேஷ், காலையிலே வந்துட்டியா! எப்போ டோர்னமெட்டுக்குப் போற?’’ என்றபடி வந்தான் அவன் நண்பன் முருகன். அவன் வேறு பள்ளியில் படிக்கிறான்.

‘`அடுத்த புதன் கிழமை. அங்கே ஒருநாள் பிராக்டிஸ். அடுத்த நாளிலிருந்து மேட்ச். சண்டே நடக்கும் ஃபைனல் வரைக்கும் போனால், திங்கள் கிழமைதான் திரும்பிவருவோம். இல்லைன்னா, முன்னாடியே வந்துடுவோம்’’ என்றான்.

‘`உங்க டீம்தான் ஃபைனலில் வின் பண்ணும் தினேஷ். கெத்தா விளையாடுங்க’’ என்றான் முருகன்.

‘`தேங்க்ஸ். வந்து பந்து போடறியா கொஞ்ச நேரம் விளையாடலாம்’’ என்றான் தினேஷ்.

‘`அட போடா எனக்கு அவசரமா வருது’’ என்று சிரித்துவிட்டு முருகன் செல்ல, தினேஷுக்கும் சிரிப்பு வந்தது. அதேநேரம் வருத்தமாகவும் இருந்தது.

ரொம்பச் சின்ன வயதாக இருந்தபோது வெட்டவெளியில் அரட்டை அடித்தவாறே மலம் கழித்திருக்கிறார்கள். வயது ஏற ஏற கூச்சம் வந்துவிட்டது. வெட்டவெளியில் மலம் கழிக்காதீர்கள் என்று அரசு சொல்கிறது. ஆனால், கழிவறையைப் புதுப்பிக்கக் கேட்டு பல வருடங்களாக முயன்றும் பயனில்லை.

சற்று நேரம் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த தினேஷ், ஓலையால் மறைக்கப்பட்ட பகுதியில் குளித்துவிட்டு வந்தான். இட்லியைச் சாப்பிட்டவாறு, “அம்மா, ஊருக்குப்போகப் புது டிரஸ் கேட்டேனே...’’ என்றான்.

‘`அப்பாகிட்டே சொல்லி யிருக்கேன் தினேஷ்’’ என்றார் அம்மா.

‘`கடைசி நேரத்துல பணம் இல்லேனு சொல்லிடாதேம்மா. பெங்களூருல வெளியே கூட்டிட்டுப்போறதா பி.இ.டி சார் சொல்லியிருக்கார். அங்கே போட்டுட்டுப் போக என்கிட்டே கிழியாத டிரஸ் ஒண்ணுகூட இல்லே’’ என்றான்.

தினேஷின் அப்பா, மார்கெட்டில் மூட்டைகளைத் தூக்கும் கூலி. அம்மாவும் மார்கெட்டில் சின்னதாகக் காய்கறி வியாபாரம் செய்கிறார். இதில் வரும் வருமானத்தில்தான் குடும்பம் நடக்கிறது. தினேஷின் நிலை தெரிந்து அவனுக்கான ஸ்போர்ட்ஸ் டிரெஸ், கிரிக்கெட் பேட் என எல்லாவற்றையும் உடற்பயிற்சி ஆசிரியரே வாங்கிக்கொடுத்திருக்கிறார். பள்ளிச் சீருடையைத் தவிர, அவனிடம் நன்றாக இருக்கும் சட்டையே இல்லை.

அடுத்த வாரம் பெங்களூருக்குப் புறப்படும் நாள். தினேஷின் அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு அவனுக்கு ஒரு புதுச் சட்டையும் பேன்ட்டும் வாங்கிவந்து கொடுத்திருந்தார். அந்த உற்சாகமும் அவனிடம் சேர்ந்திருந்தது. உடற்பயிற்சி ஆசிரியரின் தலைமையில் கிரிக்கெட் டீம் கிளம்பியது. அந்த ரயில், தினேஷ் வசிக்கும் பகுதியைக் கடந்துதான் செல்லும். ஜன்னல் வழியே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்த தினேஷ், ‘`அதான் சார் எங்க வீடு’’ எனக் காண்பித்தான்.

பெங்களூருவில் நடந்த ஒவ்வொரு போட்டியிலும் தினேஷின் டீம் சிறப்பாக விளையாடியது. போட்டிகள் மற்றும் பயிற்சிக்கு இடையில், ‘கப்பன்பார்க்,’ ‘விதான் சௌதா’ என பெங்களூருவின் புகழ்பெற்ற இடங்களுக்கும் சென்றுவந்தார்கள். இறுதிப் போட்டிக்குத் தினேஷின் டீமும் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பள்ளியின் டீமும் தேர்வானது. நாளை இறுதிப் போட்டி.

‘`தினேஷ், இதுவரைக்கும் ஜெயிச்சது பெரிய விஷயம் இல்லே. நாளைக்கு ஜெயிக்கணும். அவங்க லோக்கல் கிரவுண்டில் விளையாடும் தெம்போடு இருப்பாங்க. அந்த பவரைத் தாண்டி நம்ம கெத்தைக் காட்டணும்’’ என்றான் ஒருவன்.

‘`மேன் ஆஃப் த சீரிஸ் எடுக்கிறவங்களுக்கு 25,000 ரூபாய் பரிசாம். இப்போதைக்கு நீதான் அதிகமா இருக்கே. நாளைக்கும் சதம் அடிச்சா, அந்தப் பரிசு கன்ஃபார்மா உனக்குத்தான். அந்தப் பணத்துல நிறைய புது டிரெஸ் எடுத்துக்க. இங்கே டிரெஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்’’ என்றார் ஆசிரியர்.

‘`நிச்சயமா வின் பண்ணுவேன் சார். ஆனால், அந்தப் பணத்துக்கு வேற ஒரு பிளான் வெச்சிருக்கேன்’’ என்றான் தினேஷ்.

அடுத்த நாள் நடந்த இறுதிப் போட்டியில், தினேஷ் மட்டுமே 150 ரன்கள் எடுத்தான். இரண்டாவதாக பேட்டிங் செய்த பெங்களூர் அணி மொத்தமே 145 ரன்கள் எடுத்துத் தோல்வி அடைந்தது. வெற்றியுடன் ரயிலில் திரும்பியபோது. ‘`தினேஷ், இந்தப் பணத்தில் வேற பிளான் இருக்குனு சொன்னியே. என்ன அது?’’ எனக் கேட்டார் ஆசிரியர்.

‘`சார்... எங்க இடத்துல ஆண்களுக்கான கக்கூஸ் சரியா இல்லே சார். இந்தப் பணத்தைக் கொடுத்து அதைச் சரிசெய்யச் சொல்லப்போறேன். எங்க வீட்டுல கக்கூஸ் கட்டினால், நாங்க மட்டுமே பயன்படுத்த முடியும். பொது கக்கூஸைச் சரிசெஞ்சா, அங்கே இருக்கிற எல்லோரும் பயன்படுத்தலாம்’’ என்றான்.

ஆசிரியரும் நண்பர்களும் திகைத்துப் போனார்கள். ‘`25,000 ரூபாயில் புதுப்பிச்சுட முடியுமா தினேஷ்?’’ எனக் கேட்டான் நண்பன் ஒருவன்.

‘`கஷ்டம்தான். ஆனால், இந்தப் பணத்தைக் கொடுத்தால் அதைப் பார்த்து மத்தவங்க கொஞ்சம் கொஞ்சம் பணம் போடுவாங்க இல்லியா?’’ என்றான் தினேஷ்.

‘`சார் எனக்கு ஒரு யோசனை தோணுது. இந்தப் போட்டியில் ஜெயிச்சதுக்கு நம்ம டீமுக்கு ஒரு லட்சம் பரிசு கொடுத்திருக்காங்க. நம்ம ஸ்கூலில் கம்ப்யூட்டர் ரூம் கட்டறதுக்கு அதைப் பயன்படுத்த இருந்தோம். கம்ப்யூட்டரைவிடக் கழிப்பறை முக்கியம் சார்’’ என்றான் இன்னொரு நண்பன்.

‘`சரியாச் சொன்னே! நானும் அதையேதான் நினைச்சேன். ஊருக்குப் போனதும் ஹெட் மாஸ்டர்கிட்டே பேசறேன். அவர் நிச்சயமாச் சம்மதிப்பார்’’ என்றார் ஆசிரியர்.

தினேஷ் முகம் மலர்ந்தது. ‘`எல்லோருக்கும் ரொம்ப தேங்க்ஸ்’’ என்றான்.

ரயில் தினேஷ் வீட்டைக் கடந்தபோது அனைவரும் எட்டிப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார்கள்.