‘சென்னை, குன்றத்தூரில் இருக்கிறது, பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி. அங்குள்ள மர நிழலில், சிங்கம், புலி, கரடி, யானை, கோமாளி எனப் பல கதாபாத்திரங்கள் பங்கேற்ற கதை விழா நடந்தது. பொதுவாக, வகுப்புகளை எல்.கே.ஜி, யூ.கே.ஜி என்றுதான் சொல்வார்கள் ஆனால், இங்கே, துளிர், தளிர் என்றுதான் அந்த வகுப்புகளைக் குறிப்பிடுகிறார்கள். துளிர் தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 25 பேர், விதவிதமான கதைகளைச் சொல்லி அசத்தினார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரிஸ்வானா, தனது கதைக்கேற்ற உருவங்களையும் அரண்மனையையும் அட்டையில் வரைந்து வைத்திருந்தாள். அந்தக் கதாபாத்திரங்கள் வரும்போதெல்லாம் உருவ அட்டைகளைக் காண்பித்து, கதை ஒன்றைச் சொல்லி வியக்கவைத்தாள்.

‘இரண்டு நண்பர்களும் ஒரு கரடியும்’ கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே ஃப்ரெண்ட்ஸ்? இந்தக் கதையில், சிலருக்கு மாற்றுக் கருத்தும் உண்டு. விலங்கு இறந்த பின்பும், அதைக் கரடி சாப்பிடும்தானே. இதை மனதில் வைத்து, ‘மரத்தடியில் இருக்கும் நண்பனைச் சாப்பிட வரும் கரடி, ஏற்கெனவே வயிறு நிறைய சாப்பிட்டு வந்திருப்பதால், இவனை விட்டுவிட்டுச் சென்றுவிட்டது’ எனக் கதையை மாற்றி சுவாரஸ்யமாக்கினான் குமார்.

சொல்லப்பட்ட கதைகளின் சிறப்பே, தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியதுதான். மூன்றாம் வகுப்பு சஞ்சய், குரங்குக் கதை ஒன்றைச் சொன்னபோது, ‘கவிழ்ப்பு’ ‘கவிழ்ப்பு’ என்ற வார்த்தையைச் சொன்னான். அது, முதலில் புரியவில்லை. பிறகுதான், கவிழ்ப்பு என்றால் ‘தொப்பி’ என்று புரிந்தது.

விலங்குகள்போலக் குரலை மாற்றியும் கைகளை ஆட்டியும், கதைகளுக்கு, மாணவர்கள் உயிர்தந்தது அட்டகாசம். கதைகளே மாணவர்களின் கற்பனை ஆற்றலை வளர்த்தெடுக்கும். கதை விழாவை ஆண்டுதோறும் நடத்திவருகிறது இந்தப் பள்ளி. வாழ்த்துகள்.