நகர்ப்புற மனிதர்களைப்போல் தம் குழந்தைகளும் வருங்காலத்தில் காட்டை

அழித்துவிடாமலிருக்க, தென் அமெரிக்காவின் `டுக்குனா’ பழங்குடியினர், தங்கள் குழந்தைகளுக்குச் சொன்ன கதை.

அமேசான் நதியோரத்தில் காட்டின் நடுவே வாழ்ந்துகொண்டிருந்தார்கள் அந்தப் பழங்குடிகள். அந்தக் கிராமத்தில் சிமித்யூ என்ற பெண் வாழ்ந்துகொண்டிருந்தாள். மலாகோ என்ற ஒருவகை வீட்டில் அவள் தன் தாய், தந்தை மற்றும் உறவினர்களோடு குடும்பமாக இருந்தாள். சிமித்யூ ஒரு நாளும் தன்னைச் சுற்றியிருந்த காட்டுக்குள் சென்றதில்லை. அது ஆபத்தான விலங்குகளும் அமானுஷ்யங்களும் நிறைந்தது என்றே அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். ஒரு நாள் வழக்கம்போல் தனது கூடையை எடுத்துக்கொண்டு தனது குடும்பத்துக்குத் தேவையான பழங்களைச் சேகரிக்கச் செல்லும்போது மோர்ஃபோ என்ற பளபளக்கும் நீல நிறப் பெரிய பட்டாம்பூச்சி ஒன்று அவளைச் சுற்றியே பறந்துகொண்டிருந்தது. அதையே பிரமித்துப் பார்த்துக்கொண்டிருந்த சிமித்யூ பட்டாம்பூச்சியை ரசித்துக்கொண்டே அதைப் பின்பற்றி வெகுதூரம் காட்டுக்குள் சென்றுவிட்டாள்.

சிமித்யூ: இந்த உலகிலேயே மிக வசீகரமான ஜீவன் நீ தான்... நானும் உன்னைப் போலவே இருந்திருக்கக் கூடாதா!

(உடனே சிமித்யூ அதிக தூரம் வந்துவிட்டதை உணருகிறாள். கூடையைக் கீழே வைத்துவிட்டு முன்பின் வந்திராத இடத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறாள்)

சிமித்யூ: அம்மா... அப்பா... யாராவது இருக்கீங்களா...?

சிமித்யூ: அய்யோ... வீட்டிற்கு எப்படித் திரும்பிப்போவேன்!

(சில நேரம் அங்கே சுற்றிப் பார்க்கும்போது டக் டக் டக்... என்று ஓசை கேட்கிறது. யாரோ வேலை செய்கிறார்கள் அவர்களைப் பிடித்தால் வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்று நினைத்து ஓசை வந்த திசைநோக்கிப் போகிறாள். அங்கே ஒரு மரங்கொத்தி மரத்தைக் கொத்திக்கொண்டிருக்கிறது)

சிமித்யூ: நீ மனிதராக இருந்திருக்கக் கூடாதா! உன் மூலமாக வீட்டுக்கு வழிகேட்டுச் சென்றிருப்பேன்.

மரங்கொத்தி: நான் எதற்காக மனிதராக இருக்க வேண்டும். நான் மரங்கொத்தியாகவே உனக்கு வழிசொல்லமுடியும்.

சிமித்யூ: (கண்களை அகல விரித்து) அப்படியானால், நீ என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வாயா?

மரங்கொத்தி: நான் வேலையாக இருப்பது உனக்குத் தெரியவில்லையா? மனிதர்களாகிய நீங்கள் தற்பெருமை கொள்பவர்கள். இந்த உலகத்திலிருக்கும் அனைத்துமே உங்களுக்குச் சேவை செய்யத்தான் என்று நினைக்கிறீர்கள். ஆனால், இந்தக் காட்டில் மனிதரைவிட மரங்கொத்தி மிகவும் மேலானது. (பேசிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் அது பறந்துவிட்டது)

சிமித்யூ: நான் எதுவும் தப்பாகச் சொல்லவில்லையே! எனக்கு வீட்டிற்குப் போக வேண்டும். (தனக்குத் தானே சொல்லிக்கொண்டு பயத்தோடு வெகுதூரம் ஊடுருவிச் செல்கிறாள், ஓர் இடத்தில் ஒரு வீடு. அதன் வாசலில் பாட்டி துணியை நெசவு செய்துகொண்டிருக்கிறார். சந்தோஷம் பொங்கிக்கொண்டு வருகிறது.)

சிமித்யூ: பாட்டி...! (அழுகிறாள்) உங்களை இங்கு பார்த்த பிறகுதான் நிம்மதியாக இருக்கிறது. இந்தக் காட்டிலேயே இறந்துவிடுவேனோ என்று பயந்தே விட்டேன்.

(எதுவும் பேசாமல் பாட்டி வீட்டுக்குள் செல்கிறார். வீடு விழத்தொடங்குகிறது. பாட்டி காற்றில் பறக்கிறார். தெற்கு அமெரிக்க டினாமூ பறவையாக மாறி ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிடுகிறார்)

டினாமூ: என் உறவினர்களில் எத்தனை பேரை உன் மக்கள் வேட்டையாடியிருப்பார்கள். என்னிடம் உதவி கேட்க உனக்கு எத்தனை தைரியம் இருக்கவேண்டும்.

(சொல்லிவிட்டுப் பறந்துவிடுகிறது)

சிமித்யூ: காட்டில் யாருக்குமே என்மீது பாசமில்லை. நான் மனித இனத்தில் பிறந்தது என் தவறா?

(மனமுடைந்து கண்ணீர்விட்டு அழுகிறாள்)

வயிற்றைக் கிள்ளியது பசி. விட்டால் அவளது சிறுகுடல் பெருகுடலையே தின்றுவிடும் போலிருந்தது. மிகவும் களைத்துப்போய் ஒரு மரத்தடியில் அமரும்போது சூரியன் மறைந்து கொண்டிருந்தது.
சிமித்யூ: நான் இந்தக் காட்டை வெறுக்கிறேன். இங்கு இருக்கும் எதுவும் புரியவில்லை. யாருக்கும் என்னைப் புடிக்கவுமில்லை.

மார்ஃபோ: நிச்சயமாகவா?

(பின்னாலிருந்து குரல்கேட்டுக் கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்பிப் பார்க்கிறாள். அங்கு மீண்டுமொரு மார்ஃபோ பட்டாம்பூச்சி. இதுவரை பார்க்காத அளவுக்குப் பெரிய சிறகுகளைக் கொண்டது. ஒரே இடத்தில் சிறகடித்துக் கொண்டிருந்தது)

சிமித்யூ: நீங்களா! இங்கிருக்கும் எதுவுமே புரியவில்லை. யாருக்குமே என்னைப் பிடிப்பதில்லை. அவர்கள் என்மீது வெறுப்பு மட்டுமே காட்டுகிறார்கள்.

மார்ஃபோ: அன்பு மகளே! காட்டின் தன்மையே அதுதான். அதை நாம் கண்களால் பார்த்தால் எதுவுமே புரியாது. மனதின் மூலமாகப் பார்க்கவேண்டும். உன் மக்களில் அனைவரும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்களின் உலகம் மிகச் சிறியது. அதற்குக் காரணம் அவர்கள் இப்போது செய்யத் தொடங்கியிருப்பது அனைத்தும் தீங்கு மட்டுமே. அதனால்தான் அனைவரும் உன்னை வெறுக்கிறார்கள்.

சிமித்யூ: மற்றவர்கள் செய்வதற்கு நான் என்ன செய்வது? நான் வெறும் குழந்தை தானே?

மார்ஃபோ: நீயும் நாளை அப்படித் தானே வளருவாய். அதனால்தான் இவர்கள் உன்னை வெறுக்கிறார்கள்.

சிமித்யூ: நான் இவர்களை ஒன்றும் செய்யமாட்டேன். உதவியாக மட்டுமே என்றும் இருப்பேன். என்னைப் போல் தானே இவர்களும்.

(சிமித்யூ சிந்திக்கிறாள்)

சிமித்யூ: என்னால்தான் காட்டைப் புரிந்துகொள்ள முடியவில்லையே! இப்போது எப்படி நான் வீட்டுக்குச் செல்வது?

(கண்ணீர் சுரந்து நின்ற கண்களோடு கேட்கிறாள்)

மார்ஃபோ: நான் உனக்கு வழிகாட்டுகிறேன். ஆனால், எனக்கொரு உறுதியளிக்க வேண்டும்.

சிமித்யூ: நீங்கள் நிச்சயமாக உதவுகிறீர்களா? என்ன உறுதியளிக்க வேண்டும் சொல்லுங்கள்?

மார்ஃபோ: உன் வாழ்வில் நீ எப்போதும் காட்டுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தக் கூடாது.

சிமித்யூ: சத்தியமாகச் சொல்கிறேன் எப்போதுமே காட்டுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டேன்.

மார்ஃபோ: சரி, என்னைப் பின்தொடர்ந்து வா. உனக்கு வழிகாட்டுகிறேன்.

(அதிக தூரமில்லை. விரைவாகவே சிமித்யூ அமேசான் ஆற்றின் நதிக்கரை அருகே வந்துவிட்டாள். ஆனால், ஊருக்குள்ளே போக மனமில்லை)

மார்ஃபோ: காட்டின் எல்லை வந்துவிட்டது.உன்னை இங்கேயே விட்டுவிடுகிறேன்.

சிமித்யூ: அக்கா...! நான் உன்னோடு காட்டிலேயே இருந்துவிடுகிறேனே. நீ எவ்வளவு அன்பாக இருக்கிறாய். அவர்கள் என்னைக் கெட்டவளென்று நினைக்கிறார்கள். நான் அவர்களுக்கு உதவி செய்துகொண்டு நல்லவளாக இருக்க விரும்புகிறேன்.

மார்ஃபோ: அது தவறு மகளே. நீ உன் மக்களோடு வாழவேண்டியவள். அவர்கள் மீது அன்பு செலுத்தி ஆனந்தமாக வாழ். ஒவ்வொருவக்கும் எங்கு வாழவேண்டுமென்று சில விதிகள் உண்டு. காட்டுக்குள் மனிதர்கள் வந்தால் காடழிந்துவிடும். ஊருக்குள் நாங்கள் வந்தால் ஊர் அழிந்துவிடும். நாங்கள் இங்கே இருக்கிறோம். நீ வருங்காலத்தில் உன் மக்கள் எங்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள். இவர்கள் நிச்சயமாக உன்னைப் புரிந்துகொள்வார்கள்.

(சிமித்யூ, பட்டாம்பூச்சிக்கு டா...டா... சொல்லிவிட்டு அதன் இறகைப்போல் இதயம் படபடக்கக் கற்பனையில் பறந்துகொண்டே வீட்டையடைந்தாள்.)