Published:Updated:

பழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்! -

பழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்! -
பிரீமியம் ஸ்டோரி
பழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்! -

கே.சுபகுணம்

பழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்! -

கே.சுபகுணம்

Published:Updated:
பழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்! -
பிரீமியம் ஸ்டோரி
பழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்! -

க்களையும் மற்ற உயிர்களையும் எப்பேற்பட்ட சூழலிலும் பிழைக்க வைக்க மருத்துவரால் முடியும் என்பதைச் சொல்வதற்காக வட அமெரிக்கப் பழங்குடிகளான அரபாஹோ மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கூறிய கதை.

ரபாஹோ. பூர்வீக அமெரிக்கக் குடிகளில் ஓர் இனம் தான் இவர்கள். இன்றைய மின்னஸோடாவின் தெற்கே இருக்கும் சிவப்பு நதியோரத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். விவசாயம் செய்தும், குளிர்காலங்களில் காட்டெருமைகளை வேட்டையாடியும் அவர்களுக்கான உணவைத் தேடிக்கொண்டு மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அது ஒரு குளிர்காலம். வழக்கம்போல அந்த வருடத்தில் அவர்கள் வாழும் பகுதியில் காட்டெருமைகள் எதுவும் தென்படவில்லை. அதனால் அந்த மக்கள் உணவின்றிப் பசியில் வாடினார்கள். அவர்களின் மருத்துவரான ரோப் (Robe) அவர்களின் புனித மரமான கேதுரு மரத்திடம் வேண்டி நிற்கிறார்.

ரோப்: கேதுரு தாயே...! உன் மக்கள் பசியால் வாடுகிறார்கள். நமது வேட்டை எல்லைக்குள் நீ தான் காட்டெருமைகளை ஓட்டிக்கொண்டு வரவேண்டும்.

பழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்! -

(நீண்ட நேரம் அங்கேயே பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் ரோப். ஓர் அரபாஹோன் காட்டிற்குள் சுற்றிக்கொண்டிருக்கும்போது அவர்களது பகுதியில் சிறிது தொலைவில் கறுப்பாகச் சில உருவங்கள் இருப்பதுபோல் அவருக்குத் தெரிந்தன.)

அரபாஹோன்: அது காட்டெருமைகளாக இருக்குமா? நாம் உடனடியாகச் சென்று மருத்துவரிடம் இதுபற்றித் தெரிவிப்போம்.

(அவருக்கு நம்பிக்கை குறைவாகவே இருந்தது. வேகமாக ஓடிவந்து மருத்துவர் ரோப் அருகே வந்து விஷயத்தைச் சொல்லுகிறார்)

ரோப்: உண்மையாகவா! நீ சந்தேகப்படாதே அது நிச்சயமாக எருமைகள்தாம். நம்பிக்கை வை. வா போய்ப் பார்ப்போம்.

(இருவரும் சேர்ந்து அந்த இடத்திற்குச் செல்கிறார்கள். அதே கறுப்பு உருவங்களை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டே அருகே செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கறுப்பு உருவங்கள் காற்றில் பறக்கின்றன. அருகே சென்றபோதுதான் அது ரேவன் எனப்படும் ஒரு காக்கை இனம் என்று தெரிந்தது. அது அளவில் கொஞ்சம் பெரியது. அதனால்தான் அவர்கள் தொலைவிலிருந்து பார்க்கும்போது தவறாகப் புரிந்துகொண்டார்கள். ரோப் அந்த மனிதரைக் கடுமையாகத் திட்டுகிறார்)

ரோப்: உன்னை யார் சந்தேகத்தோடு வரச்சொன்னது. பார் நீ நம்பிக்கை வைக்காததால் அனைத்துக் காட்டெருமைகளும் ரேவன்களாக மாறிவிட்டன.

அரபாஹோன்: என்ன காட்டெருமைகள் காக்கைகளாக மாறிவிட்டனவா! (தனக்குத் தானே குழப்பத்தோடு சொல்லிக்கொள்கிறான்)

(அரபாஹோ மக்கள் பசியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களில் கொசேட்டா என்ற பெண் தன்னிடமிருந்த பதப்படுத்தப்பட்ட கோவேறுக் கழுதையின் கால்களை சூப் செய்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள்.)

கோசேட்டா: மாமா எங்கே செல்கிறீர்கள்?

கோசேட்டாவின் மாமா: நேற்று இரவு உன் சூப்பினால் ஓரளவுக்குத் தப்பித்தோம். இன்று அப்படியெதுவும் இல்லையே. கரடியாவது கிடைத்தால் வேட்டையாடி வருகிறேன்.

கொசேட்டா: ஆயுதங்கள் எதுவும் இல்லாமலா?

கோசேட்டாவின் மாமா: போகும் வழியில் ஏதாவது செய்துகொள்கிறேன் கொசேட்டா...

(கோசேட்டாவின் மாமா வழியில் மருத்துவர் ரோப்பைச் சந்திக்கிறார்.)

ரோப்: எங்கே செல்கிறீர்கள்?

கோசேட்டாவின் மாமா: வேட்டைக்கு. கரடியாவது கிடைத்தால் வேட்டையாடி வருகிறேன்.

பழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்! -

ரோப்: ஆயுதங்களே இல்லாமலா! சரி, எனது வில்லையும் அம்பையும் எடுத்துக்கொள்ளுங்கள். இறந்து கொஞ்சநேரமே ஆன காட்டெருமையாவது கிடைத்தால்கூட எடுத்துவாருங்கள். நமது உணவுக்கு அதுவே புனிதமானது.

(நீண்டநேரம் தேடியும் கரடி தென்படவில்லை. இளைப்பாற ஓர் இடத்தில் அமர்ந்தபோது அங்கே ஒரு காட்டெருமை இறந்துகிடப்பதைக் கவனித்தார். ரோப் சொன்னது நினைவுக்கு வந்தது. உடனடியாக அதைத் தெரியப்படுத்த ஊருக்குள் ஓடி வருகிறார். விஷயம் தெரிந்தவுடன் ரோப் கழுதைமேல் சடலத்தைத் தூக்கிவைக்கிறார்.)

ரோப்: கரடியைத் தேடியவனே! வா, குடியிருப்புக்குப் போகலாம்.

கொசேட்டாவின் மாமா: இந்தச் சடலத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்!

(குடியிருப்புக்கு வந்ததும், ரோப் காட்டெருமையை இறக்கிக் கீழே வைத்துவிட்டுத் தன் வீட்டுக்குள்ளே செல்கிறார். தனது தலையில் எப்போதும் வைத்திருக்கும் கழுகு இறகை எடுத்துக் காட்டெருமையின் மீது போட்டார். உடனடியாக அது எழுந்து ஓடத் தொடங்கிவிட்டது.)

ரோப்: கரடியைத் தேடியவனே அதன்மீது அம்பெய்து. வேட்டையாடு. (ரோப் இரைஞ்சுகிறார்)

(கொச்சேட்டாவின் மாமா அதைக் கொல்லுகிறார்.)

ரோப்: அதன் தோலை உறித்துச் சாப்பிட முடிந்த அனைத்தையும் பிரித்தெடு. மக்களுக்குப் பகிர்ந்தளிப்போம்.

(நீண்ட நாளைய பசியைப் போக்குவதற்கான விருந்திற்கு ஏற்பாடுகள் நடந்தன. அனைவரும் ஆனந்தமாகச் சாப்பிடத் தொடங்கினர்.)