Published:Updated:

ரஜினியின் கன்னத்தைக் கிள்ளி திருஷ்டி கழிச்சேன் - டிக்டாக் வைரல் ஸ்டார் மஞ்சு

ரஜினியின் கன்னத்தைக் கிள்ளி திருஷ்டி கழிச்சேன் - டிக்டாக் வைரல் ஸ்டார் மஞ்சு
ரஜினியின் கன்னத்தைக் கிள்ளி திருஷ்டி கழிச்சேன் - டிக்டாக் வைரல் ஸ்டார் மஞ்சு

மஞ்சு க்ளவுடி, 'டிக்டாக்'ன் புதிய வைரல். 'பேட்ட' படத்தின் 'மரண மாஸ்' பாடலுக்கு நடனமாடி, ஓவர் நைட்டில் ஓவியாவைப் போல பிரபலமானார்.

சென்னையில் நேற்று நடந்த 'பேட்ட' ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, ரஜினியை சந்தித்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

ரஜினியின் கன்னத்தைக் கிள்ளி திருஷ்டி கழிச்சேன் - டிக்டாக் வைரல் ஸ்டார் மஞ்சு

``நான் தலைவரோட ரசிகை இல்ல, பக்தை! சின்ன வயசுல இருந்தே அவரை ஒருமுறையாவது நேர்ல பார்த்துடணும்னு பயங்கர ஆசை. 'பேட்ட' சிங்கிள் வெளியானதும் சிலர் 'இவ்ளோ வேகமான பீட்டுக்குத் தலைவர் எப்படி டான்ஸ் ஆடப்போறாரோ'னு கலாய்ச்சாங்க. எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு. அந்த வெறியிலதான் அப்படி டான்ஸ் ஆடுனேன். ஆடி முடிச்சுட்டு டயர்டாகி தூங்கிட்டேன். காலையில எழுந்து பார்த்தால் நான் நினைச்சுப் பார்க்காத அளவுக்கு ரீச். சன் டிவி, அனிருத் எல்லோரும் ரீட்வீட் பண்ணியிருந்தாங்க. அதுக்கு காரணமான தமிழ் டிக்டாக் பேஜுக்கு ரொம்ப நன்றி. அப்புறம், சன் டிவியில் இருந்து இன்ஸ்ட்டாகிராம் மூலமா கான்டாக்ட் பண்ணாங்க. 'பேட்ட' ஆடியோ லான்ச்சுக்கு நீங்க வரணும்னு சொன்னாங்க. எனக்கு தலைகால் புரியல. அங்கே போனா, தலைவருக்கு அடுத்த வரிசையில் என்ன உட்கார வெச்சாங்க. இதுவே போதும் என் பிறவிப்பலனை அடைஞ்சுட்டேன்னு நினைச்சேன். பிறகு, தலைவரைப் பார்த்து கிஃப்ட் கொடுத்தேன். எனக்கு என்ன நடந்து இருக்குன்னே புரியல. அவரை கன்னத்தைக் கிள்ளி திருஷ்ட்டி கழிச்சேன். அவர் என்னை குழந்தையை பார்க்குற மாதிரி பார்த்துட்டு இருந்தாரு. என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணம் அது" என நெகிழ்கிறார்.

இது சோஷியல் மீடியா ரீச்சின் மரண மாஸ்.