பெரீய்ய்ய்ய குளத்தின் கரையில் துர்கா நிற்கிறாள். குளத்தைச் சுற்றிலும் மரங்கள். நான்கு படித்துறைகளும் உண்டு. மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கு அழைத்துவர, மேற்கு மூலையில் ஒரு வழியும் இருக்கிறது. ஆனால், தண்ணீர்தான் இல்லை.

குளத்தைச் சுற்றிச்செல்வதைவிட, இறங்கிச்சென்றால் எதிர்ப்புறத்துக்குச் சீக்கிரம் சென்றுவிடலாம் என்பதால், இறங்கி நடந்தாள். குளத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவளுடன் ஆறாம் வகுப்பு படிக்கும் நடேஷ், விக்கெட் கீப்பர். ஊரைத் தாண்டியிருக்கும் அரசமரத்துக்கு அருகிலுள்ள பம்பில் தண்ணீர் பிடித்துவர கையில் பிளாஸ்டிக் குடம் வைத்திருந்தாள் துர்கா. இன்னொரு கையிலிருந்த புளியம்பழத்தைச் சப்பிக்கொண்டே வேகமாக நடந்தாள்.

அந்த ஊரில் மழை எப்போது பெய்தது என்றே எல்லோருக்கும் மறந்துவிட்டது. அதனால், தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். துர்காவின் தோழி தனம், `மண் கொடும்பாவி கட்டினால் மழை வரும்' என்றாள். அதனால், தினமும் இரவில் வீட்டுக்கு முன்பு மண்ணைக் குவித்து, ஒரு மனித உருவத்தைச் செய்தாள். ஒருநாள், நிலாக் கோட்டம் இருந்தது. அதாவது, நிலாவைச் சுற்றிக் கருமையான வட்டம். ம்ஹூம்... மழை வருவதாக இல்லை. 10 நாள்களாகத் தொடர்ந்து துர்கா இப்படிச் செய்ய, தெருவில் கிண்டல் செய்தார்கள். மண் கொடும்பாவி கட்டுவது இன்றுதான் கடைசி. இன்றைக்கும் மழை வராவிட்டால், வானத்துடன் `டூ' விடப்போவதாக, தனத்திடம் சொல்லியிருந்தாள். அதே போல, அன்று இரவு மண் கொடும்பாவியைக் கட்டினாள். மழைக்கான அறிகுறியே இல்லை. சரி, காலையில் எழுந்ததும் முதல் வேலையாக வானத்துக்கு `டூ' விடுவதுதான் எனப் படுத்துவிட்டாள். அவள் தூங்கியதும், வானம் இருண்டு மழை பெய்தது. அதில் ஒரு துளி, குடிசையின் ஓட்டையில் புகுந்து அவளின் உதட்டில் விழுந்தது.

- விஷ்ணுபுரம் சரவணன், ஓவியம் : வேலு