Published:Updated:

அன்டார்ட்டிகாவில் அரை நிமிஷம்!

அன்டார்ட்டிகாவில் அரை நிமிஷம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்டார்ட்டிகாவில் அரை நிமிஷம்!

அன்டார்ட்டிகாவில் அரை நிமிஷம்!

அன்டார்ட்டிகாவில் அரை நிமிஷம்!

ச.வினோத்குமார் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, சேலம்.

சுமேதா குறும்பும் புத்திசாலித்தனமும் கலந்தவள். அவள் தம்பி சஞ்சய், அவளைவிட பெரிய சேட்டைக்காரன். எப்போ பார்த்தாலும் சுமேதாவிடம் ஏதாவது கேள்வி கேட்டுட்டே இருப்பான்.

நம்ம சுமேதாவும் தெரிஞ்சவரைக்கும் பதில் சொல்வாள். தெரியாத விஷயம் பற்றி கேட்டால், பேச்சை மாத்திடுவாள். இல்லைன்னா, ரொம்பவே யோசிக்கிற மாதிரி நடிப்பாள். அதுக்குள்ளே சஞ்சய் அடுத்த விஷயத்துக்குப் போயிடுவான்.

இப்படித்தான் ஒருநாள் டிவியில் ‘ஐஸ் ஏஜ் 4’ பார்த்துட்டிருந்தாங்க. படம் பார்க்கும்போதே, ‘‘வாவ் சூப்பர்! அது என்ன? இது என்ன?” எனக் கேட்டுட்டே இருந்தான் சஞ்சய். படம் பார்க்கிறதா, இவனுக்குப் பதில் சொல்றதானு சுமேதா நொந்துட்டா.

படம் முடிஞ்சதும், ‘அப்பாடா... முடிச்சதுடா சாமி’ என நினைச்சா சுவேதா. ஆனால், தம்பி வெச்சான் பாருங்க ட்விஸ்டு.

அன்டார்ட்டிகாவில் அரை நிமிஷம்!

“அக்கா, இந்தப் படத்துல வரும் இடம் எங்கே இருக்கு?” எனக் கேட்டான். ஒரு மினிட் ஷாக். வழக்கம்போல பேச்சை மாற்றிப் பார்த்தாள். சஞ்சய் விடறதா இல்லே. கடுப்பான சுவேதா, மேப் புக் எடுத்துவந்து, ‘‘இதோ அன்டார்ட்டிகா. இதுதான் படத்துல வந்த இடம்’’ என்றாள்.

உடனே சஞ்சய், “வாவ் இதுதானா?” என்றவன், “இடம் இருக்கு. அனிமல்ஸ் எங்கே?” எனக் கேட்டான்.

பொறுமை இழந்த சுவேதா, “அனிமல்ஸ் பார்க்கணும்ன்னா அதுக்குள்ளே குதி” எனச் சொன்னாள்.

அப்போதான் இன்னொரு ட்விஸ்ட்... “அப்படியா? சூப்பர்” எனச் சொல்லிக்கிட்டே வரைபடத்தின் அன்டார்ட்டிகா பகுதியில் குதிச்சுட்டான். அது உள்ளே இழுத்துக்குச்சு. சுவேதா ஷாக் ஆகிட்டா.

‘ஐய்யப்போ அம்மாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகறது?’ எனப் பதறிகிட்டே பின்னாடியே குதிச்சுட்டாள். இனி, அன்டார்ட்டிகாவில் என்ன ஆச்சுன்னு பார்ப்போம்.

அன்டார்ட்டிகாவில் அரை நிமிஷம்!

அங்கே பனிமலைக்கு நடுவுல ‘வெடவெட’ என நடுங்கிக்கிட்டே நின்னாங்க. பற்கள் டான்ஸ் ஆடறப்பவும், “அ... அ... அக்கா... நி... ஜமாவே இந்...த இடம் சூ... சூ... சூ...ப்பர். ஆனா, அனிமல்ஸ்ஸ்ஸ்ஸ் காணோமே” என்றான்.

‘‘அடேய்... இ... இன்னும்... கொஞ்...சம் நேரம் இங்கே நி...நின்னுட்டிருந்தா... விறைச்சு... சயின்ஸ் லேப்ல இ... இருக்கிற அனிமல் மாதிரி ஆகிடுவோம் வாடா’’ எனச் சொல்லி, தம்பி கையைப் பிடிச்சு இழுத்துட்டு, ஒரு ஜம்ப் பண்ணினாள்.

கையில் ஒரு நாட்டின் எல்லைக்கோடு சிக்கிச்சு. அதைப் பிடிச்சுக்கிட்டு மேலே வந்துட்டாங்க. வரைபடத்தை விட்டு வெளியே வந்ததும், ‘‘போ அக்கா... எந்த அனிமல்ஸையும் பார்க்கவிடாமல் செய்துட்டே. அவ்வளவு தூரம் போனதே வேஸ்ட்’’ என அலுத்துக்கிட்டான் சஞ்சய்.

‘‘அடேய்... ஒரு நிமிஷத்துல என்னைப் பதறவெச்சுட்டு அனிமல்ஸா அனிமஸ்ஸூ’’ என அவனைத் துரத்த ஆரம்பிச்சா சுவேதா.

ஓவியம்: ராமமூர்த்தி