Published:Updated:

ஸ்கூல் 2050

ஸ்கூல் 2050
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்கூல் 2050

சுட்டி ஸ்டார் நியூஸ்!ஓவியம்: பாலு

ஸ்கூல் 2050
ஸ்கூல் 2050

இராம.பூர்விதா
சி.எஸ்.ஐ செயின்ட் எப்பாஸ் மெட்ரிக் பள்ளி, சென்னை-4

இடம்:  ஒரு பள்ளியின் 4-ம் வகுப்பு.

காட்சி 1: அறிவியல் வகுப்பில்...

ஆசிரியை: ‘‘கெளஷிக்.. கணினி என்றால் என்ன?’’

கெளஷிக்: ‘‘கணினி ஒரு மின் இயந்திர சாதனம்.’’

ஆசிரியை: ‘‘ம்ம்... மூன்றாம் வகுப்பில் இவ்வளவுதான் படித்தாயா? நான்காம் வகுப்புக்கான பதிலைச் சொல்.’’

கெளஷிக்: ???

ஸ்கூல் 2050

ஆசிரியை: ‘‘என்ன யோசிக்கிறாய்? உன் ‘சிப்’ புரோகிராம் செய்யப்பட்டிருக்குமே!’’

கெளஷிக்: ‘‘அது... வந்து... நான் இன்னும் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை. அதனால், 4-ம் வகுப்பு பாடத்தை என் ‘சிப்’பில் ஏற்றக்கூடாது என்று, பள்ளி அலுவலர் ‘சிப்’பில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளதாம். நான் கட்டணம் செலுத்த 5 நாள்கள் ஆகும் என்று என் அப்பாவின் புரோகிராம் சொல்கிறது. இப்போது நான் என்ன செய்வது?’’

ஆசிரியை: ‘‘சரி... சரி... உனக்குக் கேள்வி கேட்க ஒதுக்கிய 5 நிமிடங்கள் முடிந்தது என எனது சிப் புரோகிராமும் சொல்கிறது. நாளை கேட்கிறேன்.’’

(அடுத்த மாணவன் பக்கம் திரும்பி, கேட்க ஆரம்பித்தார் அந்த ஆசிரியர்)

இடம்: பள்ளி மைதானம்.

காட்சி 2

உடற்பயிற்சி ஆசிரியர்: ‘‘ஏன் தாமதம்?’’

சந்தோஷ்: ‘‘என் சிப்பில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. சார்ஜ் ஏற்றிவர நேரம் ஆகிவிட்டது.’’

ஆசிரியர்: ‘‘கொஞ்சம் சார்ஜ் இருக்கும்போதே செய்யவேண்டியதுதானே. உன்னை விளையாட அனுமதிக்க முடியாது!’’

சந்தோஷ்: ‘‘ஒரு நிமிடம் 10 விநாடிகள்தானே தாமதமாக வந்திருக்கிறேன்.’’

ஸ்கூல் 2050

ஆசிரியர்: ‘‘எனக்குள் உள்ள புரோகிராம்படி தண்டனையைக் கொடுத்தாக வேண்டும். ம்...ம்... 5 நிமிடத்துக்குள் தாமதமாக வந்தால், மைதானத்தை 100 முறை சுற்றிவர வேண்டும்.’’

சந்தோஷ்: ‘‘துல்லியமாக 27 நிமிடங்களாகும் இந்தத் தண்டனையை முடிக்க. அதற்குள் விளையாட்டு வகுப்பு முடிந்துவிடுமே. கொஞ்சம் கருணை காட்டலாமே சார்!’’


ஆசிரியர்: ‘‘கருணையா... அப்படியென்றால்? என் புரோகிராமில் அப்படி எதுவுமில்லையே. எதற்கும் தேடிப் பார்க்கட்டுமா?’’

சந்தோஷ்: ‘‘அது சரி... நான் மைதானத்தையே சுற்றி வந்துவிடுகிறேன்!’’

(என்றவாறு சுற்ற ஆரம்பித்தான் அந்த மாணவன்)

ஓவியம்: பாலு