ஒருமுறை கடவுளைச் சந்திக்க சென்ற சில காய்கறிகள், வரம் கேட்டன.

தக்காளி, “நான் மட்டுமே பலசாலியாக இருக்க வேண்டும்’’ என்றது.

கத்தரிக்காய், “நான் மட்டுமே நோய் இல்லாமல், அழுகிப் போகாமல் இருக்க வேண்டும்’’ என்றது.

பாவக்காய், “நான்தான் உலகிலேயே இனிப்பான அழகான காயாக இருக்க வேண்டும்’’ என்றது.

இறுதியாக வெங்காயம், “நான் எல்லோருக்கும் உபயோகமாக இருந்தால் போதும்’’ என்றது.

புன்னகைத்த கடவுள், “வெங்காயமே, நான் உன்னை நினைத்து மகிழ்கிறேன். நீ சுயநலம் கருதாமல் மற்றவர்கள் பற்றி யோசித்தாய். உன் ஆசையை நிறைவேற்றுகிறேன். உனது இந்தக் குணத்துக்காக, ‘ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்’ போல உன்னை வெட்டுபவர்கள் கண்ணீர் சிந்தும் வரம் அளிக்கிறேன்’’ என்றார்.

பிறகு மற்ற காய்கறிகளைப் பார்த்து, “நீங்கள் சுயநலவாதிகள். நீங்கள் கேட்ட வரத்துக்கு எதிரான வரத்தை அளிக்கிறேன். தக்காளியே, நீ பலவீனமாக இருப்பாய். கத்திரிக்காயை எளிதாகப் புழுக்கள் பிடிக்கும். பாவக்காயே, கசப்பாக இருப்பாய்’’ என்றார் கடவுள்.

அந்தக் காய்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டதும், ‘‘சரி, நீங்கள் அப்படி இருந்தாலும், உண்பவர்களுக்குப் பல்வேறு சத்துகளை அளிப்பீர்கள்’’ என்றார்.

அனைத்தும் அவரை வணங்கின.