Published:Updated:

“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”

“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”
பிரீமியம் ஸ்டோரி
“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”

“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”

“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”

“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”

Published:Updated:
“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”
பிரீமியம் ஸ்டோரி
“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”

“பால்யத்தின் கைவிடலுக்கும்
மூப்பின் களைப்பிற்கும்
இடைப்பட்ட வாழ்வின் சோர்விற்கு நடுவே
நம் படுக்கையின் கதகதப்பில்
இவ்விருளினூடே எங்கோ தூரத்தில்
இரைச்சல்கள் அனைத்தையும் கடந்து
நாம் செவிடாக்கப்படுகிறோம்
நம் குரலின் அமைதியால்.”


- கல்கி கோச்சலினின் `இரைச்சல்’ (Noise) பாடல் தொகுப்பிலிருந்து...

டிகை, மேடை நாடகக் கலைஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் கல்கி கோச்சலின். பால் சமத்துவம், தன்பாலின ஈர்ப்பு என, சமூகச் சிக்கல்களின்போதும் குரல் கொடுப்பவர். ‘எம்மா அண்டு ஏஞ்சல்’ படத்தின் படப்பிடிப்புக்காகக் கோவளம் கடற்கரையில் நடித்துக்கொண்டிருந்தவரிடம் உரையாடினோம்.

நடிகையாக  உங்களுடைய  பயணம் பற்றிச் சொல்லுங்கள்?

“நடிகர்களுக்கு மேடை நாடகங்களிலிருந்து தங்கள் பயணம் தொடங்குவது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. எனக்கு அது கிடைத்தது. நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை அங்கு  கண்டடையலாம். திரைப்படம் முற்றிலும் வேறு வகையான களம். அது இயக்குநர்களின் மீடியம். இரண்டிற்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுதல் அவசியம். எனக்குப் பிடித்த, அதே சமயம் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக நம்புகிறேன்.” 

“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘That Girl With Yellow Boots’ படத்தில் கதாசிரியராகப் பணிபுரிந்திருக்கிறீர்கள். கவிதை எழுதுகிறீர்கள். எழுத்தின் மீதான ஆர்வம் எப்போது தொடங்கியது?

“சிறுவயதில் என் அம்மா எனக்கு நிறைய கதைப்புத்தகங்களை வாசிக்கக் கொடுப்பார். அப்போதிருந்தே எழுத்தின் மீது ஈர்ப்புண்டு.  That Girl With Yellow Boots  படத்திற்குப் பிறகு மேடை நாடகம், ராப் பாடல், சில குறுங்கவிதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றின் வீடியோக்கள்  யூடியூபில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து எழுதும் எண்ணம் உள்ளது. பார்ப்போம்.”

சந்திரமுகி, மின்மினி, லைலா, ரூத் எட்ஸ்கேர் என உங்கள் கதாபாத்திரங்கள் அனைத்திலும் பிரச்னைகளைக் கடந்த ஒரு சுதந்திரத்தன்மை, நம்பகத்தன்மை உள்ளது. கதாபாத்திரத்திற்கு எப்படித் தயார்படுத்திக்கொள்கிறீர்கள்?

“திரைப்படங்களில் நடிப்பதில் ஒரு இலகுதன்மை இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அந்தக் கதையை முழுமையாகப் படித்து உள்வாங்கி, அந்தக் கதாபாத்திரம் குறிப்பிட்ட சூழலுக்கு என்ன ரியாக்ட் செய்யும் என்பதை உணர்வதே போதுமானது. சிலவற்றுக்கு  நீங்கள் பயிற்சி எடுக்கவேண்டிய அவசியம் இருக்கும். எனது லைலா கதாபாத்திரத்துக்காக ஒரு இன்ஸ்ட்டிட்யூட்டில் பயிற்சி எடுத்துக் கொண்டேன். நான் நடிக்கும் கதாபாத்திரங்களில் வசனம் குறைவாக இருக்க வேண்டும் என விரும்புவேன். உணர்வுகள்தான் உலக மனிதர்களின் பொதுமொழி. அனைத்துக் கதாபாத்திரங்களும் சமூகத்தில் வாழ்கிறார்கள். நம் கேமராக்கள் அவர்கள் முகங்களைப் பதிவு செய்வதில்லை. உண்மையில் மின்மினி, சந்திரமுகி அனைவரும் இங்குள்ளவர்கள்தாம்.”

“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”

பெரிய திரை, குறும்படம், தற்சார்புப் படம், மேடை நாடகங்கள்...  வெவ்வேறு தளங்களில் இயங்குவது எப்படி சாத்தியப்படுகிறது?

“என் வேலையும், எனக்குப் பிடித்ததும் நடிப்பதுதான்.  அதற்கான சூழலும், சவாலான, விருப்பமான பாத்திரங்கள் அமையும்போதும் நடிக்கிறேன். நான் பங்களிக்கவும் கற்றுக்கொள்ளவும் உள்ள சாத்தியங்களை மட்டுமே நான் கவனத்தில் கொள்வேன். பலதரப்பட்ட படைப்பு வெளிகள்தாம் புதிய முயற்சிகளுக்கு வழிவகை செய்யும்.”

‘எம்மா அண்டு ஏஞ்சல் படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...

“ ‘எம்மா அண்டு ஏஞ்சல்’ திரைப்படம் ஒரு தற்சார்புத் திரைப்படம். ஒருவகையான பரிசோதனை முயற்சி என்றுகூடச் சொல்லலாம். ஒரு பெண்ணிற்கும் அவளது செல்ல நாய்க்கும் இடையே நடக்கும் கதை. தனித்துவமான திரைமொழியுடன் இப்படம் உருவாகியுள்ளது.  படம் நல்லபடியாக வந்துள்ளது.”

நீண்டநாள்களுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?   

“தமிழ்நாடும், தமிழ்நாட்டு உணவும் என் விருப்பத்துக்குரியவை.  என் சிறுவயதை நான் தமிழ்நாட்டில்தான் கழித்தேன். அப்போது  ஊட்டியில் வசித்தபோது என் தெரு மக்கள் என்னை ‘கண்மணி’ எனக் கொஞ்சுவார்கள். அந்தக் கண்மணி என்ற பெயர் இப்போதுவரை எனக்கு நெருக்கமான ஒன்று. சூழல் அமையும் பட்சத்தில் தமிழ்ப்படங்களில் நடிப்பேன்.”

தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பதுண்டா, உங்களுக்குப் பிடித்த தமிழ்ப்படங்கள் எவை?

“சிறுவயதில் ஊட்டி அசெம்பிளி ஹாலில் ‘அஞ்சலி’ படம் பார்த்த ஞாபகமிருக்கிறது.  நிறைய ஹாலிவுட் படங்கள் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகும். அவற்றை ரசித்துப் பார்த்திருக்கிறேன். ‘காக்க காக்க’ படம் அங்குதான் பார்த்தேன். கௌதம் மேனனின் படங்கள் மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாமீது எப்போதுமே ஆச்சர்யம் உண்டு. சமீபத்தில், வெற்றிமாறனின் ‘வடசென்னை’ வெகுவாகக் கவர்ந்தது. அவர் தமிழ்மண்ணின் கதைகளைப் படமாக்குகிறார். வெற்றிமாறன் தன் படங்களில் கதாநாயகிகளைக் கதைக்கு ஏற்றபடி தேர்வு செய்கிறார்.”

“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”

வெள்ளையானவர்கள்தாம் அழகு என்ற பிம்பத்தை உருவாக்கியதில் சினிமாவுக்குப் பங்கு உண்டுதானே?  நிறம் சார்ந்த தேர்வு முறை சினிமாவில் உண்டா?

“நிச்சயமாக உண்டு. வேலை காரணமாக வெளியில் சுற்றுபவர்கள் கறுப்பாகத்தான் இருப்பார்கள். வீட்டிற்குள் இருப்பவர்கள் வெள்ளையாக இருப்பார்கள். வெள்ளையாக இருப்பவர்கள் மட்டுமே தேவதைகள் கிடையாது. அதேபோல சருமத்தை வெள்ளை நிறமாக்கும் க்ரீம்களும் தேவையற்றது. நான் அப்படியான விளம்பரங்களில் நடிக்க ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. நிறம் மட்டுமல்ல, குறைந்த வயதுடையவர்கள்தாம் கதாநாயகியாக வேண்டும் என்ற பிற்போக்குத்தனமும் சினிமாவில் உண்டு. நிறம், வயது இவை அழகைத் தீர்மானிப்பவை அல்ல. எனக்குக் கறுப்பான கதாநாயகிகளைத்தான் பிடிக்கும். நான் பாண்டிச்சேரியில் பிறந்து ஊட்டியில் வளர்ந்தேன். நானும் தமிழ்ப்பெண்தான். என் மனதின் நிறம் கறுப்புதான்.”

இது வெப் சீரிஸ் காலம். எதிர்கால சினிமா எப்படி இருக்கும்?

“இதை ஆரோக்கியமான ஒன்றாகத்தான் நான்  பார்க்கிறேன். நந்திதாதாஸின் ‘மன்டோ’ திரையரங்கில் ஒரு வாரம்தான் ஓடியது. ஆனால் நெட்ப்ளிக்ஸ் மூலமாக அந்தப் படம் பலரால் கண்டுகளிக்கப்பட்டது. இவையெல்லாம் சினிமாவுக்கான கருவியாகுமே தவிர சினிமா என்றும் அழியாது. திரையரங்குகளில் சென்று பலருடன் அமர்ந்து பார்க்கும் ‘கம்யூனல் பீல்’ நிச்சயம் வேறு எதிலும் கிடைக்காது.”

உங்களுக்குப் பிடித்த சினிமா கதாபாத்திரம்?

“சேகர் கபூரின் இயக்கத்தில் வெளியான ‘பண்டிட் குயின்’ படத்தின் பூலான் தேவி கதாபாத்திரம் மிகப் பிடித்த ஒன்று. பிரெஞ்ச் திரைப்படமான ‘சில்ட்ரன் ஆப் பாரடைஸ்’ படத்தின் ‘ Caire Raine’ கதாபாத்திரம்தான் எனது இன்ஸ்பிரேசன்.”

‘காதல், ரிலேசன்ஷிப்  என்பது உங்கள் பார்வையில் என்ன?’’

“நாம் காதல் பற்றிய சிந்தனையில்தான் வளர்கிறோம். தேவதை, பேரழகி, ஆணழகன் போன்ற வார்த்தைகள் மட்டுமல்ல காதல். ரிலேஷன்ஷிப்பில்  ஒருவர் மற்றொருவரை எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும்.   நாம் எப்போதும் நமக்கான உந்து சக்தியாக இணையரைப் பார்க்கிறோம். அது அவர்களின் வேலையும் கிடையாது. நம்மை காக்கும் ஆபத்பாந்தவனாக காதலிப்பவரை எதிர்பார்த்தல் தவறு. அது தேவையுமற்றது. நாம் இன்னொருவரைக் காதலிக்கும் முன் நம்மை நாமே புரிந்துகொள்ள வேண்டும் . நம்மை நாமே அதிகமாக  காதலிக்க வேண்டும் . தேவைகள் சார்ந்த ஒன்றாக இல்லாமல் விரும்பம் சார்ந்த ஒன்றாக இருப்பதே காதல், உறவு.’’

சக்தி தமிழ்ச்செல்வன், படங்கள்: க.பாலாஜி

“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!”

பரபரப்பின்றி அமைதியாக படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்த படத்தின் இயக்குநர் ஆர்.அர்விந்திடம் படம் குறித்துப் பேசினோம்.

“ஆன்லைனில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் என்னுடைய ‘கர்மா’ படம்தான். அனுராக் காஷ்யப் அதை வெளியிட்டார். ‘எம்மா அண்டு ஏஞ்சல்’ படத்தின் திரைக்கதை  ‘ஈரோபியன் இண்டிபெண்டன்ட் பிலிம் பெஸ்டிவலில்’ விருது வாங்கியது. அவர்களும் இணைந்து இப்படத்தைத் தயாரிப்பது சிறப்பம்சம். ‘எம்மா அண்டு ஏஞ்சல்’ இண்டிபென்டன்ட் படம் எனச் சொல்ல மாட்டேன். எக்ஸ்பரிமென்டல் படம் என்றே சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு இண்டிபென்டன்ட் திரைப்படங்கள் அனைத்தும் கருத்துச் சொல்லும் படங்களாக வருகின்றன. எனக்கு அந்த மாதிரியான படமெடுப்பதில் உடன்பாடில்லை. அவை தாண்டி நிறைய கதைகள், ஜானர்கள் இருப்பதாகப் பார்க்கிறேன். எனக்குத் தோன்றிய ஒரு கதையை என்னுடைய பார்வையில் நேர்மையாக பதிவு செய்திருக்கிறேன். கல்கி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.  படம் முடிந்ததும் திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதுதான் இப்போதைய திட்டம். திரைப்பட விழாக்கள் , நெட்ப்ளிக்ஸ் போன்றவை தைரியமான, புதிய முயற்சிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன. தற்போது இணையத்தின் வசதியால் நிறைய மக்களும்  ஆன்லைன் பக்கம் வரத் தொடங்கியிருக்கிறார்கள். தியேட்டரில் ரிலீஸாகும் படங்களைப் போலவே, திரைப்பட விழாக்களில் ரிலீசாகும் படங்களுக்கும் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.”

ஆல் தி பெஸ்ட் பாஸ்...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism