Published:Updated:

கதை கேளு கதை கேளு: மனக் கதவைத் திறந்துதான் பார்ப்போமே!

கதை கேளு கதை கேளு: மனக் கதவைத் திறந்துதான் பார்ப்போமே!
பிரீமியம் ஸ்டோரி
கதை கேளு கதை கேளு: மனக் கதவைத் திறந்துதான் பார்ப்போமே!

தீபா கிரண்

கதை கேளு கதை கேளு: மனக் கதவைத் திறந்துதான் பார்ப்போமே!

தீபா கிரண்

Published:Updated:
கதை கேளு கதை கேளு: மனக் கதவைத் திறந்துதான் பார்ப்போமே!
பிரீமியம் ஸ்டோரி
கதை கேளு கதை கேளு: மனக் கதவைத் திறந்துதான் பார்ப்போமே!
கதை கேளு கதை கேளு: மனக் கதவைத் திறந்துதான் பார்ப்போமே!

மாதவனின் தேர்வு!

`குற்றத்துக்கு, சரியான தண்டனை தரப்பட வேண்டும்’ என்று சொல்லப்படுவதுண்டு. தவறு செய்தவர்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மக்கள் மற்றும் அவர்களின் கலாசாரத்தைப் பொறுத்து இந்தத் தண்டனைகள் மாறும். சேதிப்பேட்டை என்ற நாட்டில், கொடும் குற்றம் இழைத்தவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.

தப்பிப்பது எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை என்பதாலோ, நாட்டின் பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாலோ, மாதவன் என்கிற கொள்ளைக்காரன் சேதிப்பேட்டையில் பிடிபட்டான். நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட மாதவனுக்கு, இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ``நீ தூக்குத் தண்டனையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறாயா அல்லது இந்தப் பெரிய, துருப்பிடித்த, இரட்டைத்தாழ் கொண்ட, கிறீச்சிடும் இரும்புக் கதவுக்குப் பின்னால் இருப்பதைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறாயா?” என்று அவனிடம் கேட்கப்பட்டது.

`தூக்கே சிறந்தது' என யோசித்த மாதவன், தன்னைத் தூக்கிலிடும்படி கேட்டுக்கொண்டான். கழுத்தில் கயிறு ஏறுவதற்கு ஒரு நொடி முன் தன்னைத் தூக்கிலிட வந்தவனிடம், ``பொறு, அந்தப் பெரிய, துருப்பிடித்த, இரட்டைத் தாழ்கொண்ட கிறீச்சிடும் இரும்புக் கதவுக்குப் பின்னால் என்ன இருக்கிறதெனச் சொல்” என்றான்.

கதை கேளு கதை கேளு: மனக் கதவைத் திறந்துதான் பார்ப்போமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஹாஹா… நல்ல கேள்வி. எல்லோரும் தூக்குமேடையையே தேர்ந்தெடுக்கின்றனர். அந்தக் கதவுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கேட்கக்கூட விரும்புவதில்லை. ஆனால், உன்னிடம் நான் அதைச் சொல்வதற்கில்லை. அந்தக் கதவுக்கு அப்பால் இருப்பதை, நாங்கள் யாருக்கும் சொன்னதில்லை” என்றான் தூக்கிலிட வந்தவன்.

``அட... இனிமேல் என்னிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது? என்னிடம் நீ தாராளமாகச் சொல்லலாம்” என்றான் மாதவன்.

``ஹ்ம்ம்ம்ம்… நீ சொல்வது சரிதான். எப்படியும் நீ சாகப்போகிறாய், வேறு யாரிடமும் இந்த ரகசியத்தைச் சொல்லப்போவதில்லை. அந்தக் கதவுக்கு அப்பால் விடுதலை இருக்கிறது. ஆனால், தெரியாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் பயத்தில் எல்லோரும் தூக்கு மேடையையே தேர்ந்தெடுக்கின்றனர்” என்றான்.

கழுத்தில் கயிறு இறுக்க இறுக்க, கதவுக்கு அப்பாலான சொர்க்கத்தைப் பற்றிய கனவுகள் மாதவனின் நெஞ்சில் நிறைந்திருந்தன.

தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசே சிறந்தது என முடிவெடுப்பது, எப்போதும் சரியல்ல. கதவுக்கு அப்பால் என்னதான் இருக்கிறது எனத் திறந்துதான் பார்ப்போமே!

கர்ணன் கொடுத்து முடித்த தங்கம்!

ழகிய காலையில் அர்ஜுனனைப் பார்த்த கிருஷ்ணர், அவனுக்கு ஒரு வேலையைத் தந்தார். தன் கைகளால் கிருஷ்ணர் சொடுக்குப்போட, அவர்கள் நடந்துகொண்டிருந்த பாதையின் இருபுறமும் இரு தங்க மலைகள் தோன்றின. ``இன்று மாலைப்பொழுது சாய்வதற்குள் இந்தத் தங்கம் அத்தனையையும் ஊர் மக்களுக்கு தானமாகத் தந்துவிட வேண்டும் அர்ஜுனா” என்று உத்தரவு பிறப்பித்தார் கிருஷ்ணர்.

அர்ஜுனன், உடனடியாக வேலையில் இறங்கினான். கிராமத்தில் உள்ள அனைவருக் கும் தங்கத்தை இனாமாக வழங்கப்போவதாக அவன் அறிவிக்க, மக்கள் வரிசைகட்டத் தொடங்கினர். அர்ஜுனன், மக்களுக்குத் தங்கத்தைப் பிரித்துத் தரத் தொடங்கினான். ஆனால், வரிசையோ கொஞ்சமும் குறைவதாக இல்லை. `எல்லோருக்கும் மாலைக்குள் கொடுத்து முடிக்க முடியுமா?’ எனக் கவலைகொள்ளத் தொடங்கினான். மாலை, மங்கத் தொடங்கியது. அவன் காணுமட்டும் மக்கள் சாரிசாரியாக அணிவகுத்துக் காத்து நின்றனர்.

கதை கேளு கதை கேளு: மனக் கதவைத் திறந்துதான் பார்ப்போமே!

தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இல்லாத அர்ஜுனன், ``எனக்குச் சற்றே ஓய்வு தேவை” என்றபடி, கிருஷ்ணரை நோக்கினான். புன்னகைத்த கிருஷ்ணர், அர்ஜுனன் ஓய்வெடுக்கும் நேரத்தில் கர்ணனை தங்கத்தை வழங்குமாறு அழைத்தான். சிறிது நேரத்தில் வரிசையும் தங்கமும் தீர்ந்தன. மாலை வருவதற்குள் தங்கம் மொத்தமும் மக்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

``ஹ்ம்ம்ம்... எப்படி குறித்த நேரத்துக்குள் கர்ணனால் அனைவருக்கும் தங்கத்தைக் கொடுக்க முடிந்தது?” என்று கிருஷ்ணரை நோக்கிக் கேள்வி எழுப்பினான் அர்ஜுனன்.

``கர்ணனுக்கு இந்தத் தங்கத்தை மாலைக்குள் கொடுக்கும் அவசரமில்லை. அதை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்கிற பதற்றமும் இல்லை” என்று பதில் சொன்னார் கிருஷ்ணர். `கொடுக்க வேண்டும்’ என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே கர்ணனிடம் இருந்தது. நேரம் குறித்தோ, யாருக்குத் தர வேண்டும் என்பது குறித்தோ அவன் கவலை கொள்ளவில்லை.

தர வேண்டும் என்ற மனமே பெரிது. எப்படி, யாருக்கு என்கிற கவலை எதற்கு?

  ஓவியம் : பிரேம் டாவின்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism