கேள்வி!

அந்த சூப்பர் மார்க்கெட்டின் பெயர்ப் பலகையைத் தூரத்தில் பார்த்ததுமே, ‘ஹேய்...’ எனச் சத்தம் போட்டான் 5 வயது சந்தோஷ். தினமும் அப்பாவுடன் வெளியே வருவான். ‘‘நாய்க்கு வால் ஏன் பெரிசா இல்ல?’’ ‘‘இந்தப் பூனைக்கு வீடு இல்லையா?’’ எனக் கேட்டுட்டே வருவான். அப்பாவும் பொறுமையாகப் பதில் சொல்வார்.

இன்றைக்கு அப்படித்தான், எதிரே ஒருவர் பசுவுடன் வந்தார். அவர் கையில் பால் டப்பா. ‘‘இவர் யாருப்பா?’’ எனக் கேட்டான் சந்தோஷ். ‘‘பால்காரர். பசுதான் நமக்குப் பால் கொடுக்கிறது” என்றார் அப்பா. ‘‘அப்படின்னா, நாம ஏன் கடையில வாங்கறோம்?” என்றான் சந்தோஷ். அப்பா திருதிருன்னு முழித்தார்.

- ஆ.சாந்தி கணேஷ்

பற... பற!

மீனு, வழக்கம்போல இன்றும் அப்பாவுடன் பூங்காவுக்குச் சென்றாள். ஊஞ்சலில் ஆடச் சென்றவள், திரும்பிப் பார்த்தால் அப்பாவைக் காணோம். அவளுக்கு அழுகையாக வந்தது. பூங்கா முழுக்கத் தேடியும் அப்பாவைப் பார்க்க முடியவில்லை. ‘‘ஓ’’ என அழ ஆரம்பித்துவிட்டாள். திடீரென அப்பா குரல் கேட்க, ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள். ‘‘பக்கத்துல கடைக்குப் போனேன்டா’’ என்றார் அணைத்தவாறு.

வீட்டுக்கு வந்ததுமே கிளிக்கூண்டைத் திறந்து பறக்கவிட்டாள் மீனு. ஆச்சர்யமாகப் பார்த்த அம்மாவிடம், ‘‘அப்பா கொஞ்ச நேரம் இல்லாதபோதே அழுதேன். இந்தக் கிளி ரொம்ப நாளா இங்கிருக்கு. அது அப்பா, அம்மாகிட்ட போகட்டும்’’ என்றாள்.

- சரிதா

ஒற்றுமை!

வானத்துல இருந்த நட்சத்திரங்கள் ஐந்துக்கு நிலாவில் பாட்டி சுடும் வடையைச் சாப்பிட ஆசையாம். ஆனால், நிலா தரமுடியாதுன்னு சொல்லி, ஐந்து நட்சத்திரங்களையும் பூமியில் தள்ளிவிட்டுருச்சாம். அதனால், வானமே அழகே இல்லாமல் போயிடுச்சாம். வானத்துக்குக் கோபம் வரவே, நிலா பயந்துடுச்சாம்.

பூமிக்கு வந்த நிலா, ‘‘மன்னிச்சிருங்க. மறுபடியும் வாங்க’’ என அந்த நட்சத்திரங்களுக்கு ஆசை தீர வடைகளைத் கொடுத்துச்சாம். நட்சத்திரங்களும் மறுபடியும் வானத்துக்கே போச்சாம். ‘‘எந்த இடமா இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து இருந்தாதான் அழகு’’ என வானம் சொல்லிச்சாம்.

- சரிதா

மேக்கப்!

யாழினிக்கு லிப்ஸ்டிக் என்றால் ரொம்பப் பிடிக்கும். அவள் மேக்கப் கிட்டில் இருப்பவை, அவளுடன் பேசும். அன்று மாலை டான்ஸ் கிளாஸுக்குக் கிளம்பியபோது, லிப்ஸ்டிக்கைக் காணலை. மேக்கப் கிட்டில் உள்ள எல்லாவற்றிடமும் கேட்டுப் பார்த்தாள் யாழினி.

லிப்ஸ்டிக்கின் தோழியான சின்ன பிரஷ், ‘‘யாழினி, லிப்ஸ்டிக்கை நீ நிறைய யூஸ் பண்றதால் அது களைச்சுப்போகுது’’ என்றது சோகமாக. அதைக் கேட்டதும் யாழினி, ‘‘இனிமே, அளவோடு யூஸ் பண்ணி ரெஸ்ட் கொடுப்பேன்’’னு சொல்ல, ஒளிஞ்சிருந்த லிப்ஸ்டிக் சிரிச்சுட்டே வந்துச்சாம்.

- ம.ரமணி

ஓவியங்கள்: ரமணன்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இந்த மாதிரி க்யூட்டான, நச் என்ற கதைகளை நீங்களும் எழுதி அனுப்புங்க. வெளியாகும் கதைகளுக்குப் பரிசு உண்டு.

முகவரி...

சுட்டி குட்டிக் கதைகள்
சுட்டி விகடன்
757, அண்ணா சாலை
சென்னை- 600 002