நுங்கம்பேட்டை எக்ஸ் 2 போலீஸ் ஸ்டேஷன். அந்த நாளின் பரபரப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. எட்டரை மணிக்கு காவலர்கள் வந்த பிறகுதான் சத்தம் அதிகரிக்கத் தொடங்கும். ஹெட் கான்ஸ்டபிளின் மேசை மீதிருந்த லேண்ட்லைன் போன் ஒலித்தது. அந்த மேசை, இன்ஸ்பெக்டர் ஜனகராஜ் அறைக்கு வெளியே இருந்தது. எழுந்துபோய் போனை எடுத்து காதில் வைத்த இன்ஸ்பெக்டர் ஜனகராஜ் அதிர்ந்தார். நுங்கம்பேட்டையில் அமையவிருந்த தனியார் அருங்காட்சியகத்தில் திருட்டு நடந்துவிட்டது.

திருட்டைப் பற்றி, போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகார் வருவதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது?

இருக்கிறது... இன்னும் ஒரு வாரத்தில் அந்த அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்பட இருக்கிறது. திறந்துவைக்க வருபவர் மாநிலத்தின் முதலமைச்சர்.

சம்பவ ஸ்தலத்துக்கு விரைந்தார்ஜனகராஜ். அருங்காட்சியகத்தின் கியூரேட்டர் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார். கையை வேறு பிசைந்துகொண்டிருந்தார். பதற்றம் வந்தால் கையைப் பிசைவது எல்லோரையும் போலவே அவருக்கும் வழக்கமாக இருந்தது.

விலை உயர்ந்த, பழங்கால சுடுமண் சிற்பம் ஒன்றும், அபூர்வமான சோழர்கால நாணயங்கள் அடங்கிய பெட்டகம் ஒன்றும் களவு போய்விட்டது. விசாரணையைத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர் ஜனகராஜ். ‘இந்தத் திருட்டு, நள்ளிரவு 12 மணிக்கும் அதிகாலை 1 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்திருக்க வேண்டும்’ என்று தடய அறிவியல் நிபுணர்கள் சொன்னார்கள்.

‘‘இந்த விஷயம் வெளியே தெரியவேண்டாம். ரகசியமாக விசாரணையைத் தொடருங்கள்” என்று சொல்லியிருந்தார் கமிஷனர்.

இன்ஸ்பெக்டர் ஜனகராஜ் தடய அறிவியல் துறை ரிப்போர்ட்டை மீண்டும் ஒருமுறை படித்தார். ‘கட்டடத்தின் மேற்கூரையில் சூரிய ஒளிக்காகப் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியை உடைத்து, உள்ளே நுழைந்திருக்கிறான் திருடன். பொருள்களைக் கொள்ளை அடித்துக்கொண்டு, ஜன்னல் கம்பியை வளைத்து வெளியேறி இருக்கிறான். அருங்காட்சியகத்துக்குள் இருந்த கதவுகளை எல்லாம் கார் ஜாக்கி மூலம் அடித்து நொறுக்கி இருக்கிறான்…’

“சார்” என்றபடியே வந்த கான்ஸ்டபிள் சிவாஜி, தன்னுடன் ஓர் ஆளை அழைத்து வந்திருந்தார். “சார், எதுத்த அபார்ட்மென்ட்ல குடியிருக்கிற இவர் திருடனைப் பார்த்திருக்கார்’’ என்றார்.

அவர் ஆறடி உயரம். பணக்கார அபார்ட்மென்ட்டில் வசிப்பவர். சாதாரண ஆடைகள். முகத்தில் ஆழமான, நீளமான ஒரு வெட்டுத் தழும்பு. கண்களில் பயம் வெளிப்படையாகத் தெரிந்தது.

“என்ன பாத்தீங்க?” என்றார் இன்ஸ்பெக்டர் ஜனகராஜ். குரலில் காட்டம் இருந்தது.

“ஐயா… நேத்து நைட்டு 12 டு 1 மணி ராத்திரியில, கேலரிக்குள்ள டார்ச்லைட் வச்சு யாரோ நடமாடறது ஜன்னல் வழியாத் தெரிஞ்சுச்சுங்க.”

“இதை ஏன் உடனே போலீஸுக்குச் சொல்லலை?” இன்ஸ்பெக்டர் ஜனகராஜ் கனத்த குரலில் கேட்டதும், அந்த நபர் தலையைத் தாழ்த்திக்கொண்டார். பயத்தில் அவரது கை நடுங்கியது.

நுங்கம்பேட்டை எக்ஸ் 2 போலீஸ் ஸ்டேஷன். “முக்கியமான விஷயம், கார் ஜாக்கி வெச்சு கதவை உடைச்சிருக்காங்க. ஜாக்கி ஜம்புதான் இப்படிச் செய்வான். அவனைப் பிடிச்சுட்டு வந்திருக்கேன் சார்” என்றார் கான்ஸ்டபிள் சிவாஜி.
லாக்கப்பில் சிரித்த முகத்தோடு உட்கார்ந்திருந்த ஜாக்கி ஜம்பு, “வேற ஏதும் ஆள் மாட்டலைன்னா, என்னைப் பிடிச்சுட்டு வந்துடறதா? உடம்பு சரியில்லாத என்னை அடிச்சு விசாரிக்க முடியாது தலைவரே, மெடிக்கல் ரிப்போர்ட் வச்சிருக்கேன். நீங்க அடிச்சா நான் செத்துருவேன்” என்றான்.

பெருமூச்சுவிட்டார் இன்ஸ்பெக்டர்.

நகரத்தின் பெரிய தாதாவான அரைபிளேடு அருண், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்தான். வெவ்வேறு ஊர்களிலிருந்து லோக்கல் ரவுடிகள் திரண்டுவந்திருந்தார்கள்.

அப்போது அங்கே வந்து நின்றது போலீஸ் ஜீப். “ஓடாதீங்கடா. ஒத்தை ஜீப்தான் வந்திருக்கு” என்று சகாக்களைக் கையமர்த்திவிட்டு, ஜீப் அருகில் வந்து மீசையை முறுக்கினான் அரை பிளேடு.

“ஒரு விசாரணை, ஐயா வரச்சொன்னாரு” என்றார் கான்ஸ்டபிள் சிவாஜி.

ஜீப்பில் ஏறிக்கொண்டான். ஜீப் ஓட ஓட விசாரணை தொடங்கியது.

“நீதானே அருங்காட்சியகத்துல கை வச்சது?” என்று எடுத்த எடுப்பில் மிரட்டலாகக் கேட்டார் இன்ஸ்பெக்டர் ஜனகராஜ்.

“சும்மா சொல்லாதீங்க. நீங்களே பார்த்தீங்களே, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் மாநிலம் முழுக்க இருந்து என்னைப் பார்க்க மூணு நாளா வந்துக்கிட்டு இருக்காங்க. நேத்து ராத்திரி 12 மணியிலிருந்து 1 மணி வரை என் பர்த் டே பார்ட்டிக்கான ஏற்பாடுகளில் இருந்தேன். அதுக்கு எங்கிட்டே ஆதாரம் இருக்கு” என்றான் அரைபிளேடு அருண்.

நுங்கம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன். பல் குத்திக்கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ஜனகராஜ். விட்ட ஏப்பத்தில் மட்டன் பிரியாணி மணந்தது. “விசாரணையை முடிச்சுக்கலாம்” என்றார்.

“அப்போ குற்றவாளியைக் கண்டுபிடிச்சுட்டீங்க. யார் சார்?” என ஆர்வமானார் கான்ஸ்டபிள் சிவாஜி.

குற்றவாளியின் பெயரையும் அதற்கான ஆதாரத்தையும் சொன்னார் இன்ஸ்பெக்டர் ஜனகராஜ்.

யார் எனத் தெரிகிறதா? யோசிச்சுப் பாருங்க...

உங்கள் யூகம் சரியா,

விடை

ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன், மகள் என நாலு பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் எல்லாம் விசித்திரமாக இருக்கின்றன.
அப்பா பெயர்: சொன்னால் கேட்பார்
அம்மா பெயர்: கேட்டால் சொல்வார்
மகன் பெயர்: சொன்னாலும் கேட்கமாட்டான்
மகள் பெயர் என்னவென்று கண்டுபிடியுங்கள்.

விடை:

‘என்னவென்று கண்டுபிடியுங்கள்’ என்பதுதான் மகள் பெயர்.
மகள் பெயரின் பக்கத்தில் முக்காற்புள்ளி (:) விட்டுப் போய்விட்டது. ஸாரி!