Published:Updated:

நம்பிக்கை கதை கேளு! - மாமலையும் கடுகாகும்! - கதைசொல்லி தீபா கிரண்

நம்பிக்கை கதை கேளு! - மாமலையும் கடுகாகும்! - கதைசொல்லி தீபா கிரண்
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கை கதை கேளு! - மாமலையும் கடுகாகும்! - கதைசொல்லி தீபா கிரண்

ஓவியங்கள்: ராஜே

நம்பிக்கை கதை கேளு! - மாமலையும் கடுகாகும்! - கதைசொல்லி தீபா கிரண்

ஓவியங்கள்: ராஜே

Published:Updated:
நம்பிக்கை கதை கேளு! - மாமலையும் கடுகாகும்! - கதைசொல்லி தீபா கிரண்
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கை கதை கேளு! - மாமலையும் கடுகாகும்! - கதைசொல்லி தீபா கிரண்

அரக்கன்

தோ வேலையாக வெளியே சென்ற கிருஷ்ணனும் பலராமனும் தாமதமானதால், இருளில் காட்டு வழியே திரும்ப நேர்ந்தது. இரவில், ஒரு மரத்தின் மேல் தங்க நினைத்தனர். பாதுகாப்புக்காக இருவரில் யாராவது ஒருவர் மாறி மாறி விழித்திருக்க முடிவுசெய்தனர்.

``இந்த நொடி முதல் நள்ளிரவு வரை நீ காவல் இரு பலராமா. நள்ளிரவு முதல் விடியற்காலை வரை நான் காவல் இருக்கிறேன்” என்று சொன்னான் கிருஷ்ணன். பலராமனும் அதற்கு ஒப்புக்கொண்டான். கிருஷ்ணன் மரத்தின் மேல் உறங்க, கீழே விலங்குகள் ஏதாவது தென்படுகின்றனவா எனப் பார்த்துக்கொண்டிருந்தான் பலராமன். திடீரென குருவி அளவே உள்ள சிறு விலங்கு ஒன்று சிரிக்கும் விநோத ஒலியைக் கேட்டான். புதர் ஒன்றின் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தது அந்த விலங்கு. பலராமனுக்கோ அதிர்ச்சி. ``விலங்குகள் காட்டுக்குள் திரிவது சகஜம்தான். ஆனால், இது என்ன விலங்கு?” என்று சத்தமாகக் கேட்டேவிட்டான். பயத்தில் சற்றே பின்னால் நகர்ந்து, ``யார் நீ?” என்று கேட்டான் பலராமன்.

நம்பிக்கை கதை கேளு! - மாமலையும் கடுகாகும்! - கதைசொல்லி தீபா கிரண்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஹா ஹா ஹா…” என்று பெருத்த சிரிப்பொலி யுடன் அந்த விலங்கு, ஓநாய் அளவுக்குப் பெரிதானது. அதைக்கண்ட பலராமனுக்கு அது நிச்சயம் ஓர் அரக்கன்தான் எனத் தெரிந்தது. மஞ்சள் நிறக் கண்கள், சிவப்புக் கொம்புகள், உடல் முழுவதையும் ஆக்கிரமித்த பெரிய வயிறு என பயங்கரமாகத் தோன்றியது. பலராமனுக்கு, பேச நா எழவில்லை.

``என்... என்... என்ன செய்கிறாய் நீ? ய... யா... யா... யார் நீ?” என்று அச்சத்தில் முனகினான்.

``ஹா ஹா ஹா…” என முன்பைவிட அதிக ஓசையுடன் சிரிப்புச் சத்தம் கேட்க, விலங்கு இன்னும் பெரிதானது. பலராமனைவிட உயரமாக, ஒரு தென்னைமரத்தின் அளவுக்குப் பெரிதாகத் தெரிந்த விலங்கின் சிரிப்பு, பலராமனின் செவியை அடைத்தது. ``ஆஆஆஆஆஆ…’’ என்று அலறியபடியே மயங்கி, தடால் என்ற ஓசையுடன் சரிந்தான் பலராமன்.

பலத்த ஓசை கேட்டு எழுந்தான் கிருஷ்ணன். மரத்தில் இருந்தவன் கண்களுக்கு அரக்கன் புலப்பட்டான்.

``ஏய்… யார் நீ, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்... பதில் சொல்” என்று கேட்டான். பயந்துபோன அரக்கன், உருவம் குன்றி ஓநாய் அளவுக்கு மாறினான். அரக்கனது குரல் கம்மியது. ``உன்னைத்தான்… யார் நீ?” என்று மீண்டும் கிருஷ்ணன் கேட்க, பழைய குருவி அளவுக்கே மாறிப்போனான் அரக்கன். அவனிடமிருந்து கீச்சொலிதான் கேட்டது. மரத்திலிருந்து இறங்கிய கிருஷ்ணன், அவன் அருகில் சென்றபோது, கைவிரல் நக அளவுக்குச் சிறியதாக மாறிவிட்டிருந்தான் அரக்கன். குரலே வெளியில் வரவில்லை. அவனைத் தூக்கிக்கொண்ட கிருஷ்ணன், தன் ஆடையின் மடிப்புகளுக்குள் பதுக்கிக் கொண்டான்.

ஓடிச்சென்று பலராமனை எழுப்பினான். ``எப்படி இருக்கிறாய்?” என்று கிருஷ்ணன் கேட்க, பயந்துவிட்டிருந்த பலராமன் நடுங்கியபடி, ``அரக்கன்... அரக்கன்! பெரிய கொடிய அரக்கன் அவன். ஜாக்கிரதை கிருஷ்ணா” என்று அலறியபடி, கைகளை விடுவித்துக்கொண்டு ஓட முயன்றான். அவனை அமைதிப்படுத்தி உட்கார வைத்த கிருஷ்ணன், தன் ஆடைக்குள் இருந்த நகக்கண் அளவான அரக்கனைக் காட்டி, ``இவனையா சொல்கிறாய்?” என்று பலராமனிடம் கேட்டான்.

``ஆமாம்... ஆமாம்... இவனே தான். ஆனால், இவனுக்கு என்ன ஆனது?” என்று குழம்பியபடி கேட்டான் பலராமன்.

அரக்கனுக்கு ஏன் அப்படி ஆனது என்று உங்களுக்குப் புரிகிறதா வாசகர்களே?

பலராமனின் அச்சம், அரக்கனுக்கு பலத்தைக் கொடுத்தது. கிருஷ்ணனின் துணிவு, அரக்கனின் முழு பலத்தையும் அவனிடம் இருந்து பிடுங்கிவிட்டது!

துணிவுகொண்டவனுக்கு மலையும் கடுகுதான்... பயந்த வனுக்கு கடுகும் மலைதான்!

எது கொல்லும்?

`யாரோதூரு’ என்ற கடற்கரைக் கிராமத்தில், ஒவ்வொரு மழைக்காலமும் வரும் விருந்தாளிகளாக மூன்று நண்பர்கள் உண்டு. நண்பர்களின் பெயர்கள் மலேரியா, மரணம் மற்றும் பயம். ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் கிராமத்துக்கு ஒன்றாக வந்து உயிர்களைக் களவாடிச் செல்வார்கள். பயத்திலேயே வாழ்ந்துவந்த கிராமத்தினர், ஊரின் நுழைவு வாயிலில் காவல் காக்க ஒரு காவலனை நியமித்தார்கள்.

நண்பர்கள் மூவரும் ஒன்றாக வரும் பாதையில் நிற்கும் காவலன், அவர்களிடம் எத்தனை உயிர்களை அவர்கள் எடுப்பார்கள் என்று கேட்டு உறுதிசெய்த பிறகே அவர்களை ஊருக்குள் அனுப்புவான். ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 100 உயிர்களை நண்பர்கள் எடுத்துச் சென்றார்கள். இதைத் தடுக்கவே முடியவில்லை.

நம்பிக்கை கதை கேளு! - மாமலையும் கடுகாகும்! - கதைசொல்லி தீபா கிரண்

ஒருமுறை மலேரியா மற்றும் மரணம் இருவருக்கும் முன்பே பயம் வந்துவிட்டான். கிராமத்தின் நுழைவுவாயிலை அடைந்தவன், ஒளிந்திருந்து வாயில்காப்போனைக் கவனித்தான். காவல்காரன் அசந்திருந்த தருணம் பார்த்து ஊருக்குள் நுழைந்துவிட்டான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு மலேரியாவும் மரணமும் வாயில் முன் வந்தனர். காவலன், ``நில்லுங்கள். மரணமே, நீ எத்தனை உயிர்களை எடுக்கப்போகிறாய்?” என்று கேட்டான்.

``என் கொள்கைப்படி மலேரியா எத்தனை உயிர்களை என்னிடம் ஒப்படைக்கிறதோ, அதை மட்டுமே நான் எடுப்பேன்” என்று பதில் சொன்னான் மரணம்.

``நீ எத்தனை உயிர்களை எடுக்கப்போகிறாய் மலேரியா?” என்று காவலன் கேட்க, ``ஒவ்வோர் ஆண்டும் 100 உயிர்கள்” என்று பதில் சொன்னான் மலேரியா.

காவலன், இருவரையும் உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்வையிட்டுவிட்டு, நீண்ட அமைதிக்குப் பிறகு சொன்னான், ``சரி, 100 உயிர்கள் மட்டும்தான். அதற்குமேல் இல்லை. இப்போது நீங்கள் போகலாம்” என்று அனுமதித்தான். மரணமும் மலேரியாவும் ஊருக்குள் நுழைந்தார்கள். பயமோ ஊருக்குள் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி விட்டான். சில நாள்கள் கழித்து, மரணமும் மலேரியாவும் கிராமத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர்.

காவலன் இருவரையும் நிறுத்தி, ``மலேரியா, எத்தனை உயிர்களை நீ எடுத்தாய்?” என்று கேட்டான்.

``உன்னிடம் ஏற்கெனவே வாக்குக் கொடுத்தது போல 100” என்று சொன்னான் மலேரியா.

``மரணம்... நீ?

``ஹ்ம்ம்ம்ம்ம்… 150” - என்று பதில் சொன்னான் மரணம்.

``என்ன... மலேரியா தரும் உயிர்களை மட்டும்தானே எடுக்கப்போவதாகச் சொன்னாய்?” என்று கோபத்தில் கத்தினான் காவலன்.

``உண்மைதான்” என்று சொன்ன மரணம், ``நானும் மலேரியாவும் வரும் முன்பே பயம் யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்து 50 உயிர்களைக் கொண்டுசென்றுவிட்டான்” என்றான்!

பயம் இல்லாவிட்டால் எதையும் கடந்துவிடலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism