கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

சுட்டி குட்டிக் கதைகள்

சுட்டி குட்டிக் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி குட்டிக் கதைகள்

சுட்டி குட்டிக் கதைகள்

யார்னு தெரியணும்!

சுட்டி குட்டிக் கதைகள்

‘‘உண்மை தெரியும்வரை பாடம் நடத்த மாட்டேன்’’ என்ற லீலா டீச்சர் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றார். 7-ம் வகுப்பின் கண்டிப்பான கணக்கு டீச்சர். கணக்கு ஒன்றை கரும்பலகையில் போட்டவர்,  தலைமை ஆசிரியர் அழைத்ததால்  சென்றார். வந்து பார்த்தால் விடை மட்டும் அழிக்கப்பட்டிருந்தது.

யார் அழித்தது என்று விசாரணை.  மூன்றாம் வரிசையில் உட்கார்ந்திருந்த ஓவியா எழுந்ததும் டீச்சருக்கு ஆச்சர்யம். நன்றாகப் படிக்கும் மாணவி ஓவியா.

‘‘டீச்சர், கணக்கின் விடை ‘9’ என்று வந்திருந்ததைப் பார்த்து, சிலர் கிண்டல் பண்ணிட்டிருந்தாங்க. திருநங்கைன்னு சொல்லணும்னு அழிச்சேன்” என்றாள்.

ஓவியாவைப் பாராட்டிய டீச்சர்,  திருநங்கைகளைப் பற்றியும் விளக்க, கிண்டல் செய்தவர்கள், தவற்றை உணர்ந்தார்கள்.

- விஷ்ணுபுரம் சரவணன்

வானவில்!

சுட்டி குட்டிக் கதைகள்

முன்காலத்தில் வானவில்லே கிடையாதாம். வானவில்லில் இருக்கும் நிறங்கள் எல்லாம் தனித்தனியா வானத்தில் இருக்குமாம். வானவில் பற்றி கதையோ, கவிதையோ யாரும் எழுதலையாம். எல்லாருமே வானம், மேகம், நிலா பற்றித்தான் எழுதுவாங்களாம். அந்த நிறங்களுக்கு ரொம்ப வருத்தமாம். ஒருநாள், எல்லா நிறங்களும் சூரியனைப் பார்த்து, ‘‘எங்களைப் பற்றி யாருமே கதை, கவிதை எழுதமாட்டேங்கிறாங்க. பார்க்கக்கூட மாட்டேங்கிறாங்க’’னு புகார் சொல்லிச்சுங்களாம்.

ஏழு நிறங்களும் ஒன்றாக வரும்போது பார்க்க ரொம்ப அழகா இருந்ததை கவனிச்ச சூரியன், ‘‘இனிமேல் நீங்க சேர்ந்தே இருங்க. மக்கள் உங்கள் அழகை ரசிப்பாங்க’’ன்னு சொல்லிச்சாம். அன்றையிலிருந்து வானவில் நமக்குக் கிடைச்சதாம்.

- சி.சரிதா

டிபன் பாக்ஸ்! 

சுட்டி குட்டிக் கதைகள்

டிபன் பாக்ஸும் ஸ்பூனும் ஸ்கூல் பசங்களைப் பத்தி குறை சொல்லிட்டே இருந்தாங்க. ‘‘வீட்டுக்குப் போனா நம்மை எடுத்து சிங்க்ல கழுவக்கூட போடமாட்டேங்கறாங்க. இனி டிபன் பாக்ஸை கழுவாமல் போனால்,  ரொம்ப கெட்ட வாடை வீசலாம். கிருமிகளைப் பரப்பிவிடலாம்’’ ரெண்டும் முடிவெடுத்துச்சாம்.

அவங்க பேசினது ஆறாம் வகுப்பு அஜய்க்கு கேட்டவுடனே அலறி அடிச்சுட்டு தன் நண்பர்கள்கிட்ட சொன்னானாம். அன்னையிலேருந்து சாப்பிட்டதும் டிபன் பாக்ஸ், ஸ்பூனை கழுவிட்டுதான் வீட்டுக்குக் கொண்டுபோனாங்களாம் பசங்க.

அம்மாவும் ஹேப்பி... நல்லதை செஞ்சதுல டிபன் பாக்ஸ், ஸ்பூனும் ஹேப்பி!

 - அதிதி

 நோ எண்டு கேம்!

சுட்டி குட்டிக் கதைகள்

அயர்ன்மேனும் கேப்டன் அமெரிக்காவும் ரொம்ப சோகமா இருந்தாங்க. ‘‘அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படம் வந்தாச்சு. இனி நாம எப்படி பசங்களை ஒண்ணா தியேட்டர்ல பார்க்குறது?’’னு கவலையானாங்க.

அப்போ அங்கே வந்த தோர், ‘‘கவலைப்படாதீங்க... ஏற்கெனவே நம்மளை எல்லாம் பொம்மைகளா செஞ்சுட்டாங்க. இனி நாம வராட்டியும் நம்மளைவெச்சு பசங்க புதுசு புதுசா கதைகள் உருவாக்குவாங்க. நம்மளை வெச்சு பசங்களே கிரியேட்டர்களா உதவுவோம். வாங்க கிளம்பலாம்’’னு சொன்னார்.

மத்த சூப்பர் ஹீரோக்களும் அவங்களோடு சேர்ந்து சந்தோஷமா கிளம்பினாங்க.

- வ.ஆரவ்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இந்த மாதிரி க்யூட்டான, நச் என்ற கதைகளை நீங்களும் எழுதி அனுப்புங்க. வெளியாகும் கதைகளுக்குப் பரிசு உண்டு.

முகவரி... சுட்டி குட்டிக் கதைகள், சுட்டி விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600 002