டைம் மிஷின்

எட்டு வயசாகுற ராகுலின் பிடிவாதம் அதிகமாகிடுச்சு. அவனை ‘டைம் மெஷின்’ உள்ளே அனுப்பி, ‘‘போய் நீ இத்தனை வருஷமா எப்படியிருந்தே எனப் பார்த்துட்டு வா’’ன்னு அம்மா அனுப்பினாங்க.

தொட்டிலில் இருந்த அவனை, அழும்போதெல்லாம் அம்மா ஓடிவந்து தூக்கி கவனிச்சுக்கிட்டது, அவனுக்கு உடம்பு சரியில்லாதப்போ வீட்டுல எல்லோருமே பதறி கவனிச்சது, அப்பா மேலே படுத்துக்கிட்டு கதை கேட்டது என எல்லோரின் அன்பையும் அக்கறையையும் பார்த்துட்டு திரும்பினான் ராகுல்.

‘‘ஸாரிம்மா... இனிமே வீணான பிடிவாதத்தை விட்டுருவேன்’’ என்றான்.

- அதிதி

திணறல்

வெளியூரில் வசிக்கும் பாட்டிக்கு மணியார்டர் செய்ய, தபால் அலுவலகத்துக்குச் சென்று செலுத்திவிடுமாறு பத்தாம் வகுப்பு கணேஷிடம் 2,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தனுப்பினார் அப்பா சுந்தர்.

தபால் அலுவலகத்தில் ஃபார்ம் வாங்கியவன், அதில் எப்படி எழுதுவது என்று தெரியாமல் அலுவலரிடம் கேட்டான்.

‘‘இதுகூடத் தெரியாதா தம்பி?’’ என்று வாங்கி விலாசம் கேட்டவரிடம், ‘‘ஆன்லைன் மணி டிரான்ஸ்பர் தெரியும் சார்... இதுல எனக்குப் பழக்கமில்லை’’ என்றான் அப்பாவியாக.

- எஸ்.அபிநயா

உயிர்களிடத்தில் அன்பு

விடுமுறையில் ஓவிய வகுப்புக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தருண், “அம்மா, நேற்று அப்பா வாங்கிட்டு வந்த கேக்ல மீதியை டப்பாவுல போட்டு வெச்சீங்களே...’’

டப்பாவிலிருந்து எடுத்துப் பார்த்த அம்மா, ‘‘கெட்டு போயிருக்குடா... தெரு நாய்க்குப் போட்டுடலாம்” என்றார்.

“நம்ம வீட்டு நாயா இருந்தா அப்படிச் செய்வோமா? வேணாம்மா, குப்பையில போட்டுடலாம்’’ என்றான் தருண்.

‘‘ஸாரிடா!’’ என்ற அம்மா, தருணின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்தார்.

- ஜோஷனா

கூண்டுக்கிளிகள்

ஸ்கூல் அட்மிஷனுக்கான இன்டர்வியூவுக்கு மகன் அபிஷேக்கை தயார் படுத்துகிறார் அப்பா நீலகண்டன்.

‘‘சிங்கப்பூரின் அதிபர் யார்?’’

‘‘ஹலிமா யாகோப்’’

‘‘வெரிகுட்! நீல் ஆம்ஸ்ட்ராங் எந்த வயதில் நிலாவில் இறங்கினார்?’’

‘‘39 வயதில்’’

காலிங்பெல் சிணுங்க, அப்பாவும் பிள்ளையும் சென்று கதவைத் திறந்தனர். வெளியே ஒருவர். ஏழு குடித்தனங்கள் கொண்ட அந்தக் காலனியில், ‘‘ரயில்வேயில் வேலை பார்க்கும் ஏகாம்பரம் வீடு எது?’’ எனக் கேட்டார்.

‘‘தெரியலையே’’ என்று விழித்தனர்.

- அ.யாழினி பர்வதம்

ஓவியங்கள்: ரமணன்

* மணியாடர் முறை 1792ஆம் ஆண்டில் பிரிட்டனில் தொடங்கியது.

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இந்த மாதிரி க்யூட்டான, நச் என்ற கதைகளை நீங்களும் எழுதி அனுப்புங்க. வெளியாகும் கதைகளுக்குப் பரிசு உண்டு.

முகவரி: சுட்டி குட்டிக் கதைகள், சுட்டி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002