காடு

அந்தக் காட்டுக்குள் வேட்டைக்காரன் ஒருவன், தான் வைத்த பொறியில் தெரியாமல் தன் கால்களை வைத்துவிட்டு துடித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஒரு மரவெட்டி, ‘‘நீ வேட்டையாடும் விலங்குகளும் இப்படித்தானே துடிக்கும்'' என்றபடி விடுவித்தான்.

‘‘நீ மட்டும் மரங்களை வெட்டுகிறாயே. அவற்றுக்கும்தானே உயிர் இருக்கிறது'' என்றான் வேட்டைக்காரன்.

‘‘நான் பட்டுப்போன மரங்களை மட்டுமே வெட்டுகிறேன். நீ எப்படி... இறந்த விலங்குகளையே வேட்டையாடுகிறாயா?''

அமைதியாக இருந்த வேட்டைக்காரன், ‘‘நாளை முதல் நானும் உன்னுடன் மரம் வெட்ட வருகிறேன்'' என்றான்.

அதைக் கேட்டு காடு மகிழ்வது போல காற்று அடித்தது.

- ஜெ.சா.யங்கேஷ்வர், குமாரபாளையம்.

முள் பாதை

அது மலை மீது இருக்கும் ஓர் ஊர். அங்கிருந்து 5 கிலோமீட்டர் இறங்கி வந்தால்தான், உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடியும். பேருந்து வசதி கிடையாது. அதனால், நிறைய பிள்ளைகள் ஆரம்பப் பள்ளியுடன் நின்றுவிடுவார்கள். அந்த ஊரிலிருந்து சங்கீதா, ஆறாம் வகுப்புக்குச் செல்கிறாள்.

‘‘பொம்பளை புள்ளையை எதுக்கு இவ்வளவு தூரம் அனுப்பணும்?’’ என்று மற்றவர்கள் பேசியதை சங்கீதாவின் பெற்றோர் பொருட்படுத்தவில்லை.

‘‘நான் போய்ட்டு வரேன்ம்மா’’ என்ற சங்கீதா, புத்தகப் பையில் சிறிய வெட்டுக்கத்தியையும் எடுத்துக்கொண்டாள். ‘‘இது எதுக்கு?’’ என்று அக்கம்பக்கத்தில் கேட்டார்கள்.

‘‘போற பாதையில இருக்கிற முள் செடிகளை வெட்டி விலக்கிட்டே போவேன். என் பின்னாடி வர்றவங்க சிரமம் இல்லாம வரட்டும்’’ என்றாள் சங்கீதா.

- சே.தாசன் பீவி, கீழக்கரை

காற்றின் மொழி

விடுமுறை பரபரப்புகள் முடிந்து ஜூன் முதல் தேதி... காற்றின் வழியே ஊட்டியும் கொடைக்கானலும் பேசிக்கிட்டாங்க. ‘‘என்னப்பா கொடை, உன் இடத்துக்கு வந்த கூட்டமெல்லாம் போயாச்சா?’’

‘‘ஆமாம் ஊட்டி... இப்போதான் நிம்மதியா மூச்சு விட முடியுது. மனுஷங்க நம்மளை ரசிக்க வர்றாங்க, ஓய்வு எடுக்கிறாங்க. எல்லாம் சரி. ஆனா, நம்ம மேலேயே குப்பையைக் கொட்டி, தண்ணீரை வீணாக்கி... படாத பாடு படுத்திடறாங்க’’

‘‘கொஞ்சம் பொறுத்துக்க கொடை. பெரியவங்களோட வந்த குழந்தைகள் இதுபத்தி புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச வருஷத்துல அவங்க நம்மை நல்லபடியா கவனிச்சுப்பாங்க’’ என்றது ஊட்டி.

அந்தக் காற்றின் மொழி, உங்களுக்குக் கேட்டுச்சா ஃப்ரெண்ட்ஸ்!

- வ.ஆரவ், சென்னை

லட்டு எங்கே?

ஹாலுக்கு வந்த அம்மா அங்கே விளையாடிக்கொண்டிருந்த இலக்கியா மற்றும் தமிழழகியைப் பார்த்து, ‘‘கிச்சன்ல லட்டு வெச்சிருந்தேன். யாரு எடுத்தீங்க?’’ என்று கேட்டார்.

‘‘லட்டுவா... எப்போ வாங்கி, எப்போ வெச்சீங்க? விஷயமே தெரியாதே’’ என்றாள் இலக்கியா.

‘‘நான் என்னிக்கு கிச்சன் பக்கம் வந்திருக்கேன்’’ என்றாள் தமிழழகி.

அப்போது தூங்கி எழுந்து வந்த குட்டித் தம்பி இனியன், ‘‘அம்மா, நான் பாக்கெட்ல வெச்சிருந்த லட்டுவை தூங்கி எழுந்து பார்த்தா, யாரோ நசுக்கி இருக்கீங்க. யார் செஞ்சீங்க?’’ என்று முறைப்புடன் கேட்டான்.

- மங்கையர்க்கரசி, திருநெல்வேலி

ஓவியங்கள்: ரமணன்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இந்த மாதிரி க்யூட்டான, நச் என்ற கதைகளை நீங்களும் எழுதி அனுப்புங்க. வெளியாகும் கதைகளுக்குப் பரிசு உண்டு.

முகவரி: சுட்டி குட்டிக் கதைகள்,
சுட்டி விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002