Published:Updated:

“மன அழுத்தம் விரட்ட இளையராஜாவும் வடிவேலுவும் போதும்!” பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
பாரதி பாஸ்கர்

மனசே மனசே...

“மன அழுத்தம் விரட்ட இளையராஜாவும் வடிவேலுவும் போதும்!” பாரதி பாஸ்கர்

மனசே மனசே...

Published:Updated:
பாரதி பாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
பாரதி பாஸ்கர்

ட்டிமன்றப் பேச்சாளர் என்பதையும் தாண்டி, தமிழகத்தின் சமகாலப் பெண் ஆளுமைகளில் மிகவும் முக்கியமானவர் பாரதி பாஸ்கர். முன்னணி வங்கி ஒன்றில் பணியாற்றிக்கொண்டே குடும்பம், பட்டிமன்றம், எழுத்து, வாசிப்பு எனச் சுற்றிச் சுழன்றுவருபவர். அவரின் சொற்பொழிவுகளில் முத்தாய்ப்பான உரைவீச்சுகள் பல வாட்ஸ்அப்பில் அவ்வப்போது வைரலாவதுண்டு. சமூகம், குடும்ப உறவுகள், பெண்கள்நலம் எனப் பலவற்றிலும் தனித்துவமான பார்வைகொண்டவர். ``மன அழுத்தம் ஏற்படும்போது அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?’’ என்று அவரிடம் கேட்டோம்.


 “மன அழுத்தம் விரட்ட இளையராஜாவும் வடிவேலுவும் போதும்!”
பாரதி பாஸ்கர்

``ஒரு முக்கியமான கூட்டத்துக்கு வர்றேன்னு வாக்குக் கொடுத்திருப்பேன். ஆனா, அந்த நாள்ல வேற ஏதாவது வேலை வந்திருக்கும். குழந்தைங்களோட ஸ்கூல்ல பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு வெச்சிருப்பாங்க; இல்லைன்னா ஆபீஸ்ல ஏதாவது முக்கியமான மீட்டிங் இருக்கும். அந்த நேரத்துல நமக்கு கண்டிப்பா ஸ்ட்ரெஸ் வரத்தானே செய்யும்... அப்போ, ஏதாவது ஒண்ணை நாம விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். எது ரொம்ப முக்கியமோ, அதைத் தேர்வு செய்யறதுதான் புத்திசாலித்தனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜாலியான மூடுல இருந்தா ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் சீரியஸான எழுத்துகளை வாசிப்பேன். ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா லைட் ரீடிங்கா இருக்குற சுஜாதா, தேவன் போன்றவர்களின் எழுத்துகளை வாசிப்பேன். சுஜாதா சார் பால்யகாலத்துல பத்து ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து, வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டக் கத்துக்கிட்ட அனுபவத்தைச் சொல்லியிருப்பார். அவ்வளவு நகைச்சுவையா இருக்கும். வாழ்க்கை பலவிதமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும், சிக்கல்களையும் கொண்டதா இருக்கு. அதை நாம எப்படி அணுகுறோம்கிறதுலதான் வெற்றியே அடங்கியிருக்கு.

`போருக்கு நின்றிடும் போதும் - உளம்

பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்’னு மகாகவி பாரதி இதை அழகாகச் சொல்லியிருக்கார். `சண்டைக்கு நிற்கும்போதும் எந்தவித மனக்குழப்பமும் சஞ்சலமும் இல்லாம நிற்கும் அமைதியான மனம் வேண்டும்’ என்கிறார். இது ஒரு மந்திரம் மாதிரி. இதை நான் அடிக்கடி சொல்லிப்பேன். பொதுவா எனக்கு ஆபீஸ்ல அடிக்கடி ஸ்ட்ரெஸ் உண்டாகும். நான் சில விஷயங்களை முன்னேற்பாட்டோட செய்வேன். ஆனா, அதுக்கு நேர்மாறா வேற ஒரு பணியை மேற்கொள்ள வேண்டி வரும்.

முன்பெல்லாம் எனக்கு, `எல்லாமே நம்ம கையில இருக்கு’ங்கிற எண்ணம் இருந்தது. ஆனா நடுத்தர வயசுல, ‘அடடே... நாம எல்லாத்தையும் சரியாத்தானே செஞ்சோம். ஆனா, வேற ஒண்ணு நடக்குதே... அப்போ, எங்கேயோ நாம தப்பு பண்ணியிருக்கோமோ’னு தோண ஆரம்பிச்சது. `நம்மை மீறிய ஒரு சக்திதான் நம்மை வழி நடத்துது’னு காலப்போக்குல புரிய ஆரம்பிச்சது. `நமக்கு என்ன விதிச்சதோ, அது நிச்சயம் நமக்குக் கிடைக்கும். நம்ம கடமையை நாம சரியாகச் செய்வோம். முடிவாக இறைவன் என்ன கொடுக்கிறானோ அதை ஏத்துக்குவோம்’னு ஒரு நிம்மதியான இடத்துக்கு மனசு வந்துடுச்சு. அதனால இப்போ பரபரப்புக்கும் பதற்றத்துக்கும் இடமில்லை. என்னோட மனமே ஒரு ஸ்டூல் போட்டு உட்கார்ந்துக்கிட்டு என்னோட புத்தியை, என்னோட செயல்களை நான் சரியா செய்றேனாங்கிறதை கவனிக்க ஆரம்பிச்சிடுச்சு.

இப்போ நான் ரெகுலரா யோகாசனம் செய்றேன். அது உடம்புக்கும் மனசுக்கும், உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தருது. ஓர் எண்ணத்துக்கும் இன்னோர் எண்ணத்துக்கும் இடைவெளியே இல்லாம பயணிக்கும் நமக்கு யோகா ஒரு பிரேக்கைக் கொடுக்குது. அந்த அமைதியை என்னால நல்லாவே உணர முடியுது. ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து மீள தமிழ் மக்களுக்கு இரண்டு வரங்கள் இருக்கு. ஒண்ணு, இளையராஜா பாடல்கள். அடுத்தது வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள். ராஜாவோட இசையில் எந்தப் பாடலாக இருந்தாலும் அது நம்மை ஒரு பரவசநிலைக்குக் கொண்டு போயிடும். அதுவும் நமக்குப் பிடிச்ச பாடல்களோட தொகுப்பா இருந்தா, இன்னும் சிறப்பு. அதே மாதிரிதான் வடிவேலுவின் நகைச்சுவை. சமீபத்துல ட்ரெண்டான `ஃப்ரெண்ட்ஸ்’ பட நேசமணி காமெடி சீனை நானும், என் பொண்ணுங்க ரெண்டு பேரும் பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சோம். தலைமுறை இடைவெளி இருந்தும், ஒரு காட்சியை ரசிக்க முடியுதுன்னா அதுதான் நல்ல நகைச்சுவை. யோகாசனம், இளையராஜா, வடிவேலு... இந்த மூணுதான் என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டர்’’ என்கிறார் பாரதி பாஸ்கர்.