Published:Updated:

பெண்கள் மீதான வன்முறைகளைப் பேசும் `கோமாளிகள்' - அனுபவங்களை பகிரும் இயக்குனர் வெற்றி!  

கோமாளிகள் ( VIGNESHWARAN BUPATHY )

சமூகத்தோட முக்கியமான பிரச்னையை நாடகம்ங்கிற கலை வடிவம் மூலமா பார்வையாளர்களுக்குக் கடத்துற முயற்சிதான் இந்த 'கோமாளிகள்' நாடகம். இதுவரையில் இந்த நாடகத்தை பள்ளி, கல்லூரிகள் மற்றும் நாடக அரங்குகள்ல 11 முறை அரங்கேற்றியிருக்கோம்.

பெண்கள் மீதான வன்முறைகளைப் பேசும் `கோமாளிகள்' - அனுபவங்களை பகிரும் இயக்குனர் வெற்றி!  

சமூகத்தோட முக்கியமான பிரச்னையை நாடகம்ங்கிற கலை வடிவம் மூலமா பார்வையாளர்களுக்குக் கடத்துற முயற்சிதான் இந்த 'கோமாளிகள்' நாடகம். இதுவரையில் இந்த நாடகத்தை பள்ளி, கல்லூரிகள் மற்றும் நாடக அரங்குகள்ல 11 முறை அரங்கேற்றியிருக்கோம்.

Published:Updated:
கோமாளிகள் ( VIGNESHWARAN BUPATHY )

குடும்பம், கல்வி நிலையம், பணியிடம், பொது இடம் என பல வெளிகளிலும் பெண்கள் பல்வேறு விதமான வன்முறைகளைச் சந்திக்கின்றனர் என்கிற கருத்தை அடிப்படையாக வைத்து 'கோமாளிகள்' எனும் நாடகத்தினை இயக்கியிருக்கிறார் வெற்றி. தியேட்டர் அக்கு மூலம் உருவாகியிருக்கும் இந்நாடகம், இதுவரையிலும் 11 முறை அரங்கேற்றப்பட்டிருக்கிறது. `கோமாளிகள்' நாடகம் பற்றி இயக்குநர் வெற்றியிடம் பேசினோம்... 

நாடக இயக்குநர் வெற்றி
நாடக இயக்குநர் வெற்றி

``விஜய் டிவியில வெளியான `கனா காணும் காலங்கள், கல்லூரியின் கதை' சீரியல்ல நடிச்சிருக்கேன். நாடகத்துறை மேல ஈடுபாடு வந்து புதுச்சேரியில இருக்குற இந்தியன் ஆஸ்ரம் தியேட்டர்ல, ரெண்டு வருஷம் நடிப்பு மற்றும் இயக்கம் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் 'அடவு'ங்குற தெருக்கூத்தை அடிப்படையா கொண்ட நாடகத்தை இயக்கினேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் அடவு நாடகம் அரங்கேற்றப்பட்டது. குறிப்பா, ஆனைகட்டியில் பழங்குடி மக்கள் மத்தியிலும், கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் இந்த நாடகத்தை அரங்கேற்றினோம்" என்றவர் 'கோமாளிகள்' நாடகம் உருவான விதம் குறித்துக் கூறுகிறார்...

கோமாளிகள்
கோமாளிகள்

"சமூகத்துக்குத் தேவையான கருத்தையும் சொல்லணும், அதே நேரம் அது நாடகம்ங்கிற கலை வடிவத்துக்குள்ளயும் இருக்கணும். எல்லாத் தரப்பினரும் ரசிச்சுப் பார்க்குற அளவுக்கு பண்ணனும்ங்கிறதுதான் என்னோட எண்ணம். எங்களோட அக்கு நாடகக்குழுவின் மூலமா, பெண்கள் பல்வேறு தளங்களில் எதிர்கொள்ற அடக்குமுறை, வன்முறை சார்ந்து இந்த நாடகத்தை இயக்கணும்னு முடிவு பண்ணோம்.   

கொரோனா சூழலால மக்கள் நாடகம் பார்க்க வருவாங்களாங்குற கேள்வி இருந்ததால சின்னதா ஒரு நாடகம் பண்ணுவோம்னுதான் தொடங்கினோம். கிருஷ்ணா, விராஜி, சத்ரியன், ப்ரவீன் ஆகிய நாலு பேர்தான் இந்த நாடகத்தோட கதாசிரியர்கள். செட் எல்லாம் போடாம நான்கு நடிகர்களை வெச்சு பண்ணாலே போதும்னுதான் நினைச்சோம். நாடகத்துக்கான கதையை எழுத எழுத, அது விரிவடைஞ்சுகிட்டே போச்சு.

கோமாளிகள்
கோமாளிகள்
VIGNESHWARAN BUPATHY

ஒண்ணைப் பேசிட்டு இன்னொன்றைப் பேசாம விட்டா நல்லாருக்காதேன்னு நினைச்சதால நாடகம் பெருசாச்சு. நான்கு பெண்கள் எதிர்கொள்ற வன்முறையைப் பேசுற நாடகம் இது. உண்மையாக நடந்த சம்பவங்களில் இருந்து இந்தக் கதையை எழுதினாங்க.

இந்த நாடகத்துல நடிச்சிருக்க அபிநயா, சுகம்யா, சிவா, ரோஹித், ஹரிஹரன், பிரசன்னா ஆகிய 6 பேருமே புதுமுக நடிகர்கள்தான். கேரளத்தோட களரி , தமிழ் பாரம்பர்ய தேவராட்டம் உள்ளிட்ட ஆட்டக்கலைகள் மற்றும் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டுதான் நடிக்க வந்தாங்க. 6 மாத காலம் இதுக்கான ஒத்திகை பார்த்தோம். கதையோட சூழலை மட்டும் வெச்சு ஒத்திகை பண்றப்பவே அதிலிருந்து கதை விரிவடையும். இப்படி ஒத்திகை பண்ணபோதே கதை எழுதி மெருகேற்ற முடிஞ்சுது.

கோமாளிகள்
கோமாளிகள்
VIGNESHWARAN BUPATHY

பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் சிறுமி, பணியடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் நெருக்கடி, சாதி ரீதியான தாக்குதல், பெண்ணின் காதலுக்கு எதிரான குடும்ப மனநிலைன்னு நான்கு விதமான களங்களை எடுத்துக்கிட்டுப் பண்ணியிருக்கோம். இந்தக் கதையினூடாகவே தூக்கிலிடுபவர்களின் மனநிலையையும் இந்த நாடகத்துல காட்டியிருக்கோம். சமூகத்தோட முக்கியமான பிரச்னையை நாடகம்ங்கிற கலை வடிவம் மூலமா பார்வையாளர்களுக்குக் கடத்துற முயற்சிதான் இந்த 'கோமாளிகள்' நாடகம். இதுவரையில் இந்த நாடகத்தை பள்ளி, கல்லூரிகள் மற்றும் நாடக அரங்குகள்ல 11 முறை அரங்கேற்றியிருக்கோம். இனியும் பல இடங்களில் அரங்கேற்றவிருக்கோம்" என்கிறார் வெற்றி.