Published:Updated:

மிஸ்ஸியம்மா மீனலோசனி ஆன கதை! #MyVikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மிஸ்ஸியம்மாவும் மீனலோசனியும்!
மிஸ்ஸியம்மாவும் மீனலோசனியும்!

நம் ஊரில் பார்ட்டி கலாசாரத்தை கொண்டுவந்தது என்னவோ மிஸ்ஸி அம்மாக்கள்தாம்!

20 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்த புதிதில் அயனாவரத்தில் தங்கியிருந்தேன். என் வீட்டுக்கு அருகில் இருந்த தேவாலயத்துக்கு ஆங்கிலோ இந்தியர்கள் வருவார்கள். ஆண்கள் கோட் சூட்டிலும் பெண்கள் கவுன்களிலும் நேர்த்தியான உடைகளில் ஆங்கிலம் பேசி வலம் வருவார்கள். ஆங்கிலோ இந்தியப் பெண் யாராக இருந்தாலும் மிஸ்ஸி அம்மா என்றே அழைப்பாள் என் வீட்டில் வேலை செய்த சாந்தி.

தேவாலயம்
தேவாலயம்

எனக்கு டேவிட் பழக்கமான பின் அவன் வீட்டுக்குப் போய் வருவேன். வரவேற்பு அப்படி இருக்கும்! சிறிய அலங்காரங்களோடு வீடு சுத்தமாக இருக்கும். பீங்கான் கோப்பையில் நல்ல டீ தருவார், கவுன் போட்ட அவன் அம்மா. அவன் அப்பா எப்போதும் வாயில் சிகரெட் தொங்கவிட்டபடி, `என்னா மேன் ஹவ் டூ யு டூ' என்பார்; சரக்கு போட்டிருந்தால் ஐசிஎஃப் கதைகள் சொல்வார். டேவிட்டின் அழகான அக்கா கிடார் வாசிப்பார்.

நான் முதன்முதலில் ஒயின் குடித்தது அப்போதுதான். நம் ஊரில் பார்ட்டி கலாசாரத்தைக் கொண்டுவந்தது என்னவோ மிஸ்ஸி அம்மாக்கள்தாம்! விடியல்வரை நீளும் அந்த பார்ட்டிகள் இன்றும் நினைவில் நிற்கும் வசந்தம்.

மிஸ்ஸியம்மாவும் மீனலோசனியும்!
மிஸ்ஸியம்மாவும் மீனலோசனியும்!

ஆண்கள் கோட் சூட் அணிந்து, ஹோட்டல்களில் வேலைபார்த்தனர். பெண்கள் எல்லா அலுவலகங்களிலும் லிப்ஸ்டிக் அணிந்து ஆங்கிலம் பேசினார்கள். அவ்வப்போது பாலுமகேந்திரா படங்களில் இருட்டு நடனங்களில், கையில் சாராயத்தோடு வந்து போவார்கள். ஒரு காலத்தில் திருச்சி, சென்னை, பெங்களூரில் ரயில்வே வேலைகளை ஆக்கிரமித்து இருந்த அந்த மக்கள் இப்போது அருகிவிட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓர் அழகான சமூகம் தன் அடையாளங்களை இழந்து, குறைந்து வருகிறது. காலச் சூழலில் இளைய தலைமுறை வெளிநாடுகளுக்குப் போய்விட்டது. வயதான மிஸ்ஸி அம்மாக்கள் பெரம்பூர் மார்க்கெட்டில் மாமிசம் வாங்கி, ஒயின் குடித்துக் கழிக்கிறார்கள். நிறைய பெண்கள் மற்ற சமூகத்தினரை திருமணம் செய்து, பெயர் மாற்றி, கவுன் மறந்து, நெற்றியில் குங்குமம் வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆண்கள் மெல்லவே தமிழ் பேசி நம் சமூகங்களோடு மொத்தமாகக் கலந்துவிட்டனர்... `டேய் ... மாமா... மெய்யாலுமா...'

திருமணம்
திருமணம்
Representational Image

சென்ற வாரம் என் அலுவலகத்துக்கு தன் கணவர் விஜயரங்கனோடு வந்த மீனாவின் ஆங்கிலத்தில் கவரப்பட்டு, தயக்கத்தோடு கேட்டேன். மெட்டில்டா, மீனலோசனி ஆன காதல் கதை சொன்னார். நெற்றியின் குங்குமமும் தலையில் பூவும் நேர்த்தியாக இருந்தது!

- சஞ்சனவேதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு