Published:Updated:

'மாநாடு' படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுக்கிறாரா சிம்பு

எம்.குணா

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் மாநாடு ஷூட்டிங் அப்டேட்

சிம்பு!
சிம்பு!

சினிமா உலகில் சொன்ன நேரத்துக்கு சரியாக படப்பிடிப்புக்கு வந்துவிடும் தொழில் பக்தி சிலபேருக்கு மட்டுமே இருக்கும். முன்பு சிவாஜி கணேசன், இப்போது ரஜினிகாந்த். புதுப்படத்தின் ஷூட்டிங் நேரத்தை முன்கூட்டியே சொல்லியும் ஆஜராகாமல் டிமிக்கி கொடுப்பது பலபேருக்கு இருக்கிறது அப்போது கார்த்திக், இப்போது சிம்பு.

சிம்பு
சிம்பு

மைக்கேல் ராயப்பன் தயாரித்த 'அன்பானவன், அசராதவன், அடங்காதவன்' படப்பிடிப்பு வராமல் டிமிக்கிக் கொடுத்த சிம்பு, மணிரத்னம் இயக்கிய ' செக்கச் சிவந்த வானம்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சொன்ன நேரத்துக்கு ஆஜரானதைப் பார்த்து சினிமா உலகமே அண்ணாந்து பார்த்தது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் திரைப்படம் ' 'மாநாடு' படத்தின் ஷூட்டிங்கை பலமுறை திட்டமிட்டு தயாரித்தனர். அப்போது எல்லாம் சிம்பு அந்தந்த தேதிகளில் வர இயலாது என்று சொல்லிவிட்டார். இறுதியாக ' நான் நிச்சயம் ஷூட்டிங் வந்துவிடுவேன்' என்று சூடத்தில் சத்தியம் செய்யாத குறையாக சூளூரத்தார் அதன்பிறகே ஜூன் 23-ம்தேதி மலேசியாவில் ' மாநாடு' படப்பிடிப்பு துவங்கும் வேலையில் பரபரப்பாக இறங்கினர்.

சுரேஷ் காமாட்சி
சுரேஷ் காமாட்சி

'இப்போ மத்த ஆர்டிஸ்டுகளை வெச்சு ஷூட்டிங் நடத்துங்க அப்புறமா நான் கலந்துக்கறேன்' என்று சிம்பு தடாலடி பல்டி அடிக்க தயாரிப்பாளரும் டைரக்டரும் செய்வதறியாது திகைத்துபோய் நிற்பதாக வந்த செய்தியை கேள்விப்பட்டு 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பேசினோம்.

'' மலேசியாவுல ஷூட்டிங் நடக்கப்போறது உண்மை, சிம்பு வரமாட்டார்னு சொல்றது பொய். எப்போ ' மாநாடு' பட அறிவிப்பை வெளியிட்டோமோ அப்போது இருந்தே தப்புத்தப்பா செய்தியை ஏன்தான் கிளப்பிவிடறாங்கன்னே தெரியலை. சிம்புவோடு பாரதிராஜா சார், எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார், கல்யாணி, கருணாகரன்னு ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கறாங்க,' என்றார்.

எம்.குணா