Published:Updated:

"பாரதி மணி இறக்கும் தறுவாயில் தன் மகள்களுக்கு இட்ட கட்டளை..." - நெகிழும் எழுத்தாளர் சுகா

பாரதி மணியுடன் சுகா

"'எனக்காக நீங்க உங்க ரொட்டீன் ஒர்க்குகளை விட்டுடாதீங்க. திரும்பிடுங்க'னு தன் மகள்கள்கிட்ட அவர் சொன்னதால மறுநாளே அவரது மகள்களும் பணிகளுக்குத் திரும்பினதா கேள்விப்பட்டேன். அவர் நிஜமாகவே ஒரு பெரிய மனிதர்."

"பாரதி மணி இறக்கும் தறுவாயில் தன் மகள்களுக்கு இட்ட கட்டளை..." - நெகிழும் எழுத்தாளர் சுகா

"'எனக்காக நீங்க உங்க ரொட்டீன் ஒர்க்குகளை விட்டுடாதீங்க. திரும்பிடுங்க'னு தன் மகள்கள்கிட்ட அவர் சொன்னதால மறுநாளே அவரது மகள்களும் பணிகளுக்குத் திரும்பினதா கேள்விப்பட்டேன். அவர் நிஜமாகவே ஒரு பெரிய மனிதர்."

Published:Updated:
பாரதி மணியுடன் சுகா
நடிகர், எழுத்தாளர், நாடக நடிகர் என பன்முகத் திறமையாளர் பாரதி மணி, தனது 84வது வயதில் நேற்று காலமானார். அவருடன் பழகிய நாள்கள் குறித்து இங்கே மனம் திறக்கிறார் இயக்குநர் சுகா.

"வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசிச்சு, ருசிச்சு வாழ்ந்த மனிதர் அவர். ஜவஹர்லால் நேருவில் இருந்து எத்தனையோ பெரிய பெரிய மனிதர்களை சந்திச்சு, பழகினவர். அப்படியொரு ஆளுமைமிக்கவர். ரொம்பவே எளிமையானவரா வாழ்ந்தார். டில்லியில் பல வருஷம் வாழ்ந்தார். அவர் சென்னையில் இருக்கறவரை நானும் அவரும் எப்ப வேணா பார்த்து பேசக்கூடிய அளவுக்கு நெருக்கமா இருந்தோம். அவரும் நானும் சைவப்பிரியர்கள். அவர் பிரமாதமா சமைப்பார். நான் சாப்பிடுவேன். இசையிலும் நாட்டம் உண்டு. காருக்குறிச்சி அருணாசலம் நாதஸ்வரத்தை மணிக்கணக்காக உட்கார்ந்து கேட்போம். ஒரு திரைப்பட விழாவுலதான் முதன்முதலா அவரை பார்த்தேன்.

சுகாவும் பாரதி மணியும்.
சுகாவும் பாரதி மணியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமாவுல வர்ற ஒரு பணக்கார அப்பா லுக்ல அவர் இருந்ததால, அவர்கிட்டப் போய் பேச ஒரு தயக்கம் இருந்துச்சு. அவரை பார்த்து பேசத் தயங்கி, பேசாமல் வந்துட்டேன். மறுநாள் என் வீட்டுக்கு வெளியே அவரை பார்க்கும் போதுதான் அவர் என் பக்கத்து வீட்டுக்காரர்னு தெரிஞ்சது. அப்புறம் பேசிப் பேசி பழக ஆரம்பிச்சிட்டோம். 'வார்த்தை இதழ்'னு அமெரிக்காவில் இருந்து வரும் ஒரு சிற்றிதழ்ல நான் எழுதிட்டிருந்தேன். அந்த இதழின் குழுமத்தினருக்கு இவரை நான் அறிமுகப்படுத்தி வச்சேன். அங்கேதான் அவரை 'பாட்டையா'னு கூப்பிட ஆரம்பிச்சேன். நான் கொடுத்த பெயர் நிலைச்சிடுச்சு. அவரது கடைசி புத்தகத்தையே 'பாட்டையாவின் பழங்கதைகள்' என்கிற தலைப்பில் எழுதினார். அதை வெளியிட்டு பேசியிருக்கேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் இயக்கிய 'படித்துறை' படத்திலும் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருக்கேன். அவர் சென்னையில் இருக்கும் போது ஒருநாள் அவருக்கு உடல்நலமில்லாமல் ஆகிடுச்சு. மருத்துவமனையில் அனுமதிச்சோம். அவரது வேதனைகளை வச்சு, 'வலி'னு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை படிச்சிட்டு சிலாகிச்சார். 'இப்படி ஒரு கட்டுரைக்காகவே நான் மருத்துவமனையில் இன்னொரு முறை அட்மிட் ஆகவும் ரெடியா இருக்கேன்'னு சொன்னார்.

கலை இலக்கிய விமர்சகர் க.நா.சு.வின் மகளைத் திருமணம் பண்ணியிருக்கார். பெங்களூருவில் அவர் குடியேறின பிறகு, அவரை அடிக்கடி பார்க்க முடியாம போச்சு. ஆனாலும் சென்னை வந்துட்டா உடனே போன் செய்திடுவார். நானும் போய் சந்திப்பேன். அவரது கடைசி புத்தக வெளியிட்டு விழாவிலும் நான் பேசியிருக்கேன். அதை குறித்து அவர் எனக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கார். நேற்றும், இன்றும் அந்தக் கடிதத்தை படிச்சு படிச்சு, கண்ணீர் சிந்திட்டிருக்கேன். கிராமங்கள்ல கல்யாண சாவுனு ஒரு சொல்வாங்க. அதுபோல, அவரது இறப்பும் கல்யாண சாவுதான். ஆனாலும், உடல்நிலை சிரமப்பட்டுத்தான் இறந்துபோனார். அதை தாங்கிக்கவே முடியல. இறப்புல எந்த சமய சடங்கும் பண்ணக்கூடாதுனு அவரது மகள்கள்கிட்ட கண்டிப்பா சொன்னதால, எதுவும் பண்ணல. தன் உடலை தானம் செய்திருக்கார்.

பாரதி மணி
பாரதி மணி

அவர் இறந்துபோன நான்கு மணி நேரத்திற்குள் அவரது உடல் மருத்துவமனைக்கு போயிடுச்சு. 'எனக்காக நீங்க உங்க ரொட்டீன் ஒர்க்குகளை விட்டுடாதீங்க. திரும்பிடுங்க'னு தன் மகள்கள்கிட்ட அவர் சொன்னதால மறுநாளே அவரது மகள்களும் பணிகளுக்குத் திரும்பினதா கேள்விப்பட்டேன். அவர் நிஜமாகவே ஒரு பெரிய மனிதர். தன் இறப்பின் மூலமாகவும் அதை நிருபித்திருக்கிறார்" எனக் கண்களில் நீர்த்திரள பேசினார் சுகா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism