Published:Updated:

`வந்த வேகத்திலேயே போய்விட்டது!'- `மீ டூ' இயக்கம் குறித்து ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே

`மீ-டு பிரச்னை பாலிவுட்டில் இருக்கும் பல்வேறு பிரச்னைகளைப் பற்றிப் பேசவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

`பாலிவுட்டில் `மீ டு' இயக்கம் ஏற்படுத்திய பரபரப்பு வந்த வேகத்திலேயே போய்விட்டது' எனக் கவலை தெரிவித்திருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே. டைம்ஸ் ஊடகம் நடத்திய வருடாந்திர பொருளாதார கான்க்ளேவில் பங்கேற்ற அவர் இதைத் தெரிவித்துள்ளார். 2018-ம் ஆண்டின் இறுதியில் `மீ டு' இயக்கம் இந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நானா படேகர்
நானா படேகர்

நடிகர்கள் அலோக்நாத், நானா படேகர், இயக்குநர் விகாஷ் பஃல், பாடகர்கள் கைலாஷ் கேர், அனுமாலிக் உள்ளிட்ட பல முக்கிய பாலிவுட் பிரமுகர்கள் மீது `மீ டு' குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. ஆனால், `மீ டு' பிரச்னை பாலிவுட்டில் இருக்கும் பல்வேறு பிரச்னைகளைப் பற்றிப் பேசவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ராதிகா ஆப்தே.

அவர் கூறுகையில், ``மீ- டு பிரச்னை பல வந்த வேகத்தில் போய்விட்டன. ஆனால், பாலிவுட்டில் பாலியல் ரீதியாக நிலவும் பல பிரச்னைகளைப் பற்றி அது பேசவே இல்லை. குறிப்பாக இங்கே நிலவும் சம்பள ஏற்றத்தாழ்வுகள் போன்ற பிரச்னைகளை விவாதிக்கவே இல்லை. ஆண் நடிகர்களைவிட, பெண் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்களே அதனால் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஹீரோ ஹீரோயின்களாக நடிப்பவர்களில் மட்டுமே இது சாத்தியம். இதர நடிகர்களில் இந்த ஏற்றத்தாழ்வுகள் பற்றி யாரும் விவாதிப்பதே இல்லை. உதாரணத்துக்கு, அம்மா அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களில் அவர் ஆண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதற்காகவே அவருக்குச் சம்பளம் அதிகமாகத் தரப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்.

பாலிவுட் பெண் இயக்குநர்கள்!
பாலிவுட் பெண் இயக்குநர்கள்!

இந்தப் பிரச்னைகள் ஒருபக்கம் இருந்தாலும் சினிமா ஸ்க்ரீனில் மட்டுமே பெண்கள் அதிகம் இருக்கிறார்கள் என்கிற நிலை தற்போது மாறியிருக்கிறது. திரைக்குப் பின்னணியில் உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் திரைப்படங்களில் கேமராமேன், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் என உழைத்தவர்களில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். இது வரவேற்கத் தக்க மாற்றம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு