Published:Updated:

சினிமா நடிகர்களைவிட தொலைக்காட்சி நடிகர்கள் அதிகம் கஷ்டப்படுகிறார்கள்: அக்‌ஷய் குமார் ஆதங்கம்!

சினிமா நடிகர்களைவிட தொலைக்காட்சி நடிகர்கள் அதிகம் கஷ்டப்படுகிறார்கள்: அக்‌ஷய் குமார் ஆதங்கம்!
சினிமா நடிகர்களைவிட தொலைக்காட்சி நடிகர்கள் அதிகம் கஷ்டப்படுகிறார்கள்: அக்‌ஷய் குமார் ஆதங்கம்!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், சினிமா நடிகர்களைக் காட்டிலும் தொலைக்காட்சி நடிகர்கள்தான் அதிகம் கடினப்பட்டு உழைப்பதாகவும், அவர்களுக்குத்தான் சினிமா நடிகர்களைக் காட்டிலும் கூடுதலான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிக்கும் அதே சமயம், ரியாலிட்டி ஷோ, விளம்பரம் என்று அவ்வப்போது நடித்துவருகிறார் அக்‌ஷய் குமார். அதில் ஏற்பட்ட அனுபவத்தைக்கொண்டுதான் அவர் இவ்வாறு கூறினார். தொலைக்காட்சி நடிகர்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு சினிமா நடிகர்களைக் காட்டிலும் கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தொலைக்காட்சி நடிகர்கள், பெரும்பாலும் சினிமா நடிகர்களுக்குக் கிடைக்கும் எந்த ஓர் அங்கீகாரத்தையும் சலுகையையும் பெறுவதில்லை என்று கூறியுள்ள அவர், 'ஷூட்டிங்கின்போது தொலைக்காட்சி நடிகர்கள் சினிமா நடிகர்களைக் காட்டிலும் அதிகக் கஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள்' என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.