Published:Updated:

அறிமுக இயக்குனர் படத்தில் போலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார் பரத்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அறிமுக இயக்குனர் படத்தில் போலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார் பரத்!
அறிமுக இயக்குனர் படத்தில் போலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார் பரத்!

அறிமுக இயக்குனர் படத்தில் போலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார் பரத்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் இறுதிபோட்டி வரை சென்றவர் ஶ்ரீசெந்தில். இவருடைய சக போட்டியாளராக கலந்துகொண்டவர்கள் தான் ‘ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலனும். தற்போது ஶ்ரீ செந்தில் அறிமுக இயக்குனராக தோன்றவிருக்கும் படத்தில் கதாநாயகனாக பரத் நடிக்கிறார். மேலும், சுரேஷ் மேனன், கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக சுரேஷ் பாலா அறிமுகமாகிறார். இவர் உதவி ஒளிப்பதிவாளராக வேல்ராஜிடம் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முதன்முறையாக பரத் போலீஸ் அதிகாரியாக தோன்ற இருக்கிறார். பரத்திற்கு ஜோடியாக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்  தீபாவளியன்று வெளியாகும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு