Published:Updated:

பிட்ஸ் பிரேக்

கார்க்கிபவா

பிட்ஸ் பிரேக்

கார்க்கிபவா

Published:Updated:
பிட்ஸ் பிரேக்

கலைஞர் கருணாநிதியின் 92-வது பிறந்த நாளில் உருவாக்கப்பட்ட #HBDkalaignar  ட்விட்டர் ஹேஷ்டேக், ட்ரெண்ட் ஹிட் அடித்திருக்கிறது. இதைச் சொன்னதும் உற்சாகமான கலைஞர், அதே மனநிலையிலேயே தன் பிறந்த நாள் விழாவிலும் கலந்துகொண்டார். அங்கு, 'தற்போது கழகப் பொருளாளராக இருக்கும் ஸ்டாலின்...’ எனச் சிறிய சஸ்பென்ஸ் வைத்து, 'கூடிய விரைவில் என்ன பொறுப்புக்கு வருவார் என உங்களுக்கே தெரியும்!’ என முடிக்க, அள்ளியது ஆரவாரம். கனிமொழி, தந்தையை கவிதை மூலம் வாழ்த்த, கலைஞர் வெரி வெரி ஹேப்பி! 

பிட்ஸ் பிரேக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்ஸ் பிரேக்

 மணிரத்னத்தின் 'மன மன மென்டல் மன’தை... தற்போது கொள்ளையடித்திருப்பது, ஆப்பிள் மேக்புக் ஏர் மடிக் கணினி. கண்ணைக் கவரும் டிசைன், அபாரமான துல்லிய ஸ்க்ரீன், மின்னல் வேகம்... எனப் பரபரக்கும் ஆப்பிளை அடிக்கடி சுவைத்துக்கொண்டிருக்கிறார். தனது நண்பர்கள் இருவருக்கும் இதே மாடல் லேப்டாப்களை பரிசளித்திருக்கிறார் மணி!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 'இளவரசி டயானா மரணத்துக்குப் பின்னர், அதலபாதாளத்தில் விழுந்த இங்கிலாந்து அரசக் குடும்ப இமேஜைத் தூக்கி நிறுத்தச் செய்த முயற்சிகள் எல்லாமே ஃபெயில்’ என்கிறது இங்கிலாந்தில் ரகசியமாக நடத்தப்பட்ட சர்வே முடிவுகள். சர்வதேச அளவில் இங்கிலாந்தின் மரியாதைக்கு வேண்டும் என்றால், இவர்கள் குடும்பம் உதவும். மற்றபடி இங்கிலாந்து குடிமகன்களில் சரிபாதியினர் அரசக் குடும்பத்தை நாட்டுக்கு வேண்டா சுமையாகவே நினைக்கிறார்களாம். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த குடும்பச் சந்திப்பில் இந்த ரிப்போர்ட் கொடுக்கப்பட்டபோது, மொத்தப் பேரும் கப்சிப் எனக் கேட்டிருக்கிறார்கள். இந்த முடிவுகளை, மக்கள் பார்வைக்குக் கொண்டுசெல்ல வேண்டாம் என முடிவுசெய்யப்பட்ட நிலையிலும், இங்கிலாந்து மீடியா எப்படியோ மோப்பம் பிடித்து ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டது! 

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 'டூப் போட்டு சண்டை போடுறவங்க எல்லாம் காமெடி ஹீரோதான்’ என அதிரடி ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார் ஆக்ஷன் ஹீரோ ஜேசன் ஸ்டேதம். 'புரூஸ் லீ, ஜாக்கி சான் எல்லாம் ஒருமுறைகூட டூப் போட்டது கிடையாது. ஸ்டுடியோவில் கிரீன்மேட் போட்டு எடுப்பதோ, டூப் வைத்து பறப்பதோ ஆக்‌ஷன் கிடையாது. அப்படி ஒரிஜினலாக நடிப்பவர்களில் எனக்கு சில்வஸ்டர் ஸ்டாலோன், அர்னால்டு பிடிக்கும்’ என்கிறார் 48 வயது தடாலடி நடிகர். இவரது அடுத்த இலக்கு ஜேம்ஸ்பாண்டாக நடிப்பதாம்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 திரைக்கதை ஆசிரியரைத் தேடிக்கொண்டிருக்கிறார் சிம்ரன். ஏன்?  அட்டகாசமான ஒரு கதையை உருவாக்கி யிருக்கிறாராம். அதை நச் சினிமாவாக்க, பிரமாதமான திரைக்கதை வேண்டுமாம்.  பல சேனல்கள் மூலம் 'திரைக்கதை ஆசிரியர்’ தேடுதல் நடக்கிறதாம். மனதுக்குப் பிடித்த மாதிரி ஸ்க்ரிப்ட் தயாராகிவிட்டால், சிம்ரனே இயக்குவாராம்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 'ஓ காதல் கண்மணி’ பட ஸ்டைலில் வாழும் காதல் தம்பதியான பாப் பாடகி ஷகீராவும் கால்பந்து நட்சத்திரம் ஜெரார்டு பீகேவும், அதீத சந்தோஷத்தில் திளைக்கிறார்கள். இவர்களின் நான்கு மாதக் குழந்தை சாஷா, குறும்புச் சேட்டைகளைத் தொடங்கியிருப்பதும், ஜெரார்டின் பார்சிலோனா அணி சமீபத்தில் வென்ற ஸ்பானிஷ் கோப்பையும்தான் டபுள் டிலைட் சந்தோஷத்துக்குக் காரணம்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 ஒபாமா புகழ் 'மவுசு இழக்கிறது’! அமெரிக்கர்கள் இடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று, ஏப்ரலில் இருந்தே ஒபாமாவின் செல்வாக்கு சரிவதாகச் சொல்கிறது. 'தற்போது உயிரோடு இருக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார்?’ என்ற இன்னொரு கேள்விக்கு, பில் கிளிண்டனும் ஜார்ஜ் புஷ் சீனியரும் முன்னணியில் இருக்கிறார்களாம். 'அப்போ அவ்ளோ திட்டினீங்களேப்பா அவரை..?!’ என ஆச்சர்யப்படுகிறாராம் மிஸ்டர் ஒபாமா!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 மோடி அரசின் ஒரு வருடம் முடியும் வேளையில், டெல்லியில் கெஜ்ரிவால் அரசின் 100-வது நாளும் வந்திருக்கிறது. மின்சாரக் கட்டணத்தில் 50 சதவிகித மானியம், வீட்டுக்கு 20,000 லிட்டர் தண்ணீர் என அடித்தட்டு மக்களுக்கு அறிவித்த  சலுகைகளை நிறைவேற்றத் தொடங்கிவிட்டார் கெஜ்ரிவால். அதே சமயம், 'மத்திய அரசு எந்த அதிகாரத்தையும் டெல்லி அரசுக்குத் தராமல் சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிப்பதுதான் நம் முன் இருக்கும் பெரிய சவால்’ எனக் கடுப்படித்தும் இருக்கிறார் கெஜ்ரிவால்!