வங்கதேசத் தொடரின் தோல்விக்குக் கிளம்பிய விமர்சனங்கள், தோனியை இதுவரையில் இல்லாத மன உளைச்சலில் ஆழ்த்தியிருக்கிறது. அதனால்தான், 'கேப்டன் பொறுப்பில் இருந்து விலகத் தயார்’ என எதையும் எதிர்பார்த்து அறிவித்தாராம். ஆனால், எதிர்பார்க்காதவிதமாக அணியிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பிலும் தோனியை ஆதரித்தே குரல்கள். அதனால் தோனி இப்போ செம ஹேப்பி. மகள் ஷிவாவைத் தன்னுடன் பைக்கில் அமரவைத்து சொந்த ஊர் ராஞ்சியில் ரவுண்டு அடிக்க ஏங்குகிறார் தோனி. ஆனால், 'பாப்பா இன்னும் வளரட்டும்’ என சாக்ஷி அதட்டிவைத்திருக்கிறாராம். கூல்... கேப்டன்!

அமெரிக்காவின் பங்குச் சந்தை கிங் வார்னர் பஃபெட்டும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸும் ஏன் கார்ட்டூன் மூக்கு அணிந்திருக்கிறார்கள்? 'ஐஸ் பக்கெட் சவால் போல நல்ல காரியத்துக்கு நிதி திரட்டும் குறும்புதான். 'ரெட் ரோஸ் டே’ எனக் கொண்டாடப்படும் தினத்தில், கோமாளி மூக்கு மாட்டிக்கொண்டு படம் எடுக்க வேண்டும். அதோடு வறுமையால் வாடுபவர்களுக்கும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் தங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்க வேண்டும் என்பது சவாலின் ஒரே ஒரு நிபந்தனை. லட்ச லட்சமா கொடுங்க!

சமீபத்தில் சமூக வலைதளத்தில் தன்னைச் சீண்டிய நெட்டிசனை நறுக்கெனக் குட்டி, இந்திய அளவில் ட்ரெண்டு அடித்த விசாகா சிங், இப்போது இத்தாலி சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். சமூக வலைதளங்களில் அப்டேட்டிடுவது, தத்துவப் புத்தங்கள் வாசிப்பது, ஊர் சுற்றுவது... இந்த மூன்றும்தான் இப்போது விசாகாவின் ஆல்டைம் பொழுதுபோக்கு. அந்தச் சீண்டல் விவகாரம் குறித்து விசாரித்தால், 'என் திறமையை விமர்சிக்கலாம், என்னை விமர்சிக்கும் உரிமையை யார் கொடுத்தது?’ என, சிம்பிள் பதில் மட்டுமே சொல்கிறார். உலகம் முழுக்க சுற்றிப் பார்ப்பதுதான் விசாகாவின் வாழ்நாள் லட்சியமாம்! மைல்ஸ் டு கோ!

'அட... செல்வராகவனும் சிம்புவும் ஒரே படத்துலயா... 2020-ம் ஆண்டுலயாவது படம் ரிலீஸ் ஆகுமா?’ எனப் பொழியும் மீம்ஸ்களுக்கு, மரண அடி கொடுத்திருக்கிறார்கள் இருவரும். 'கான்’ படத்தின் முதல் டேக் தொடங்கி 21 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தபோது, ஒரு நாள்கூட மிஸ் பண்ணாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார் சிம்பு. காரணம், பட வேலைகள் ஆரம்பிக்கும் முன்னரே, 'நம்ம ரெண்டு பேருக்குமே இப்ப ஒரு பிரேக் தேவை. அதை மனசுல வெச்சுக்கிட்டு உழைப்போம்... ஜெயிப்போம்’ என, செல்வாவும் சிம்புவும் தீர்க்கமாக முடிவெடுத்திருக்கிறார்களாம். சூப்பர் பாலிசி!