Published:Updated:

பிட்ஸ் பிரேக்

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன், ஆ.விஜயானந்த்படங்கள்: கே.ராஜசேகரன், தி.குமரகுருபரன்

பிட்ஸ் பிரேக்

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன், ஆ.விஜயானந்த்படங்கள்: கே.ராஜசேகரன், தி.குமரகுருபரன்

Published:Updated:

செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகை... இந்த வரிசையில் `புதிய தலைமுறை' சரண்யா இப்போது கவிதாயினி. 

பிட்ஸ் பிரேக்

``நான் பக்கா சென்னை பொண்ணு. எத்திராஜ் காலேஜ்ல படிச்சுட்டு இருந்தப்ப கல்லூரி முதல்வர் வரைக்கும் கலகலனு பேசுவேன். கலைஞர் டி.வி., ராஜ் மியூசிக், ஜி தமிழ், புதிய தலைமுறைனு நல்ல பயணம். இங்கதான் நியூஸ்னா என்ன... உலக அரசியல்னா என்னன்னு ஒவ்வொண்ணா கத்துக்கிட்டேன். அப்புறம்தான் `ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' பட ஹீரோயினா நடிக்கும் வாய்ப்பு. படத்தைப் பார்த்த பாரதிராஜா சார் என்னை நிறையப் பாராட்டினார். அடுத்து `சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படம் பாபி சிம்ஹா மூலமா வந்தது. ஃபிலிம் ஃபெஸ்டிவல்ஸுக்கு மட்டும்தான் அனுப்பப் போறோம்னு சொல்லி எடுத்தாங்க. கடைசியில படத்தை ரிலீஸ் பண்ணிட்டாங்க’’ என்று சிரிக்கிறார். ``நீங்க லண்டன்ல செட்டில் ஆகிட்டதா சொன்னாங்களே?’' என்றதும், ``ஆமா. சில மாசத்துக்கு முன்னாடிதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. இப்போ லண்டன்லதான் இருக்கேன். என் செல்ல மாமா பெயர் அமுதன் சந்திரகுமார்; என் ரியல் ஹீரோ. லண்டன்ல `சாரா ஆர்கானிக்'னு ஒரு ஸ்டோர் ஆரம்பிக்கிற ஐடியா இருக்கு. மீண்டும் தொகுப்பாளரா ஆகணும், நடிக்கணும்னு ஆசை. சீக்கிரமே ஸ்கிரீன்ல வருவேன்’’ என்கிற சரண்யா, தான் எழுதிய கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட இருக்கிறாராம் # நீ வா செல்லம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஜய் டி.வி-யில் `ஒல்லி பெல்லி', `ஜூனியர் சூப்பர் சிங்கர்'னு கலகல காம்பியரா இருந்த பிரியங்கா, இப்போ `கலக்கப்போவது யாரு' நடுவர்``ஒரு வகையில் இது முன்னேற்றம்தான்ஜி.  என்ன, இப்போ இந்த ஃபேஸ்புக் பக்கம் போகவே முடியலை. `நீ ஜட்ஜா... ஓ நீயெல்லாம் ஜட்ஜா?’னு ரொம்ப ஓட்டுறாங்கஜி.

பிட்ஸ் பிரேக்

அங்கதான் அப்படினு செட்டுக்கு வந்தா `தாடி' பாலாஜியும் `ஈரோடு' மகேஷும் அதுக்கு மேல ஓட்டுறாங்க. விகடன் மூலமா நான் சொல்லிக்க விரும்புறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். நான் ரொம்ப சின்னப் பொண்ணு; ஸ்மால் பேபி. என்னை ரொம்ப கலாய்க்காதீங்க பிரதர்ஸ்’’ என்றவரிடம், ``வீட்டுல ஏதோ விசேஷம்னு கேள்விப்பட்டோம்?’’ என்றதும், ``யெஸ். எனக்கு கல்யாணம். ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி வீட்டுல பார்த்த மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொல்ல மாட்டேன். நானே மாப்பிள்ளையைப் பார்த்துட்டுதான் வீட்டுல சொன்னேன். ரெண்டு வீட்டுலயும் பச்சைக் கொடி காட்டிட்டாங்க. ஆனா, பையன் யாருன்னு இப்பச் சொல்ல முடியாது. அது மட்டும் சீக்ரெட்’’ என கண்ணடிக்கிறார் பிரியங்கா. # இந்த பொண்ணு ஏன் செங்கல் மேல சாய்ஞ்சு நிற்குது?!

பிட்ஸ் பிரேக்

இப்போதைய டி.வி ஹீரோக்களில் ரசிகைகள் அதிகம் உள்ள ஹீரோ கவின். ‘` `சரவணன் மீனாட்சி' சீரியல் மூலமா நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. செம ஹேப்பியா இருக்கேன். குறும்படங்கள்ல நடிச்சிட்டு இருந்தப்போ, முழு நேர நடிகனாக ஆசைப்படலை. ஆனா, சீரியலுக்கு வந்த அப்புறம் `நல்லா நடிக்கிறீங்க’ன்னு நிறைய காம்ப்ளிமென்ட்ஸ் வர ஆரம்பிச்சுது. `ஓ.கே’னு ஃபுல் டைம் நடிகனா கிட்டேன். அடுத்து சினிமாதான். சீக்கிரமே ஒரு நாயகன் உதயமாகிடுவான்’’ என்ற கவினிடம் ``ரசிகைகள் தொல்லை தாங்க முடியலையாமே..?’' என்றதும், ``ஸ்கூல் படிக்கும்போதே மூணு ப்ரபோசல்ஸ் வந்துச்சு பாஸ்...’’ என குறும்பாகச் சிரிக்கிறார். # நீங்க நடத்துங்க பாஸ்!

பிட்ஸ் பிரேக்

``ஐபோன் எனக்கு ரொம்பப் பிடிக்கும் `விஜய் டி.வி அவார்ட்ஸ்' மூலம் கிடைச்ச பணத்துல போன் வாங்கிட்டேன். வாங்க 6 ப்ளஸ்ல ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்’’ செம ரகளையாகப் பேசுகிறார் ரக்‌ஷிதா. `` `சரவணன் மீனாட்சி’ சீரியல் என்னை ரொம்ப ஃபேமஸ் ஆக்கிடுச்சு. அதுதான் இப்ப என்னை சினிமா வரை கொண்டு வந்திருக்கு. `உப்பு கருவாடு' படம் பார்த்தவங்க எல்லாரும் என்னோட நடிப்பைப் பாராட்டுறாங்க. ரக்‌ஷிதா செம ஹேப்பி பாஸ். அடுத்து பூபதி பாண்டியன் சார் டைரக்‌ஷன்ல ஒரு படம் பண்றேன். ராதா, ராதிகா, ரம்யா கிருஷ்ணன், ரேவதி வரிசையில இடம் பிடிக்கணும்னு ஆசை’’ என்கிறார் ரக்‌ஷிதா. #எங்கே போனாலும் வேட்டையனை விட்டுறாதீங்க!

பிட்ஸ் பிரேக்

`` `ஐ'ம் சன் மியூசிக் ரியோ. `ஐ'ம் வெரி வெரி ஹேப்பி'' - செம உற்சாகத்தில் இருக்கிறார் ரியோ. ``இப்ப என் வாழ்க்கையில `கண்ணா மூணு லட்டு தின்ன ஆசையா?' மொமன்ட். ஒண்ணு என்னோட நீண்டகால ஆசையான `ராயல் என்ஃபீல்டு' பைக் வாங்கிட்டேன். சீக்கிரம் சினிமா நடிகர் ஆகிடுவேன். மூணாவது, இன்னும் ஸ்பெஷல். அஞ்சு வருஷமா நானும் ஒரு பொண்ணும் ரொம்ப சின்சியரா லவ் பண்ணிட்டு இருந்தோம். திடீர்னு ஒருநாள் நான் வீட்ல என் லவ்வை சொல்றதுக்கு முன்னால எங்க அம்மா, `எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறே?'னு கேட்டாங்க. அடுத்த வருஷம் எனக்குக் கல்யாணம். ஆனா, இதுல சின்னதா ஒண்ணு மிஸ் ஆகுது. நான் காதலிக்கும் பொண்ணுகூட `அலைபாயுதே' ஸ்டைலில் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்யணும்னு ஆசை.  ஆனா, அந்த சீனுக்கே இங்க இடம் இல்லை’’ என புல்லட்டில் பட் பட் டிரிப்புக்கு ரெடியாகிறார் ரியோ. #நீங்க கல்யாணம் பண்ணிகிட்டுப் போயிட்டா, தமிழ்நாட்டு கேர்ள்ஸ் நிலைமை?

பிட்ஸ் பிரேக்

`இசையருவி' சுமையா...  `இது புதுசு', `இசைத்தென்றல்' செலிபிரிட்டி பேட்டிகள்... என இசையருவி டி.வி-யின் ஆல்டைம் ஃபேவரிட் விஜே. ``முதல் வகுப்புல இருந்து பத்தாவது வரை கிளாஸ்ல நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க் ஹோல்டர். ஆனா, காலேஜ்ல அரியர்ஸ் வெச்சுதான் டிகிரியே வாங்கினேன். ஏன்னா, காலேஜ்ல ஃபுல்லா டான்ஸ்தான். காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல எப்பவுமே எனக்கு ஒரு பரிசு நிச்சயம். டான்ஸ் ஆடின பொண்ணுக்கு ஐ.டி., பி.பி.ஓ வேலை எப்படி செட் ஆகும்? அதான்... பி.பி.ஓ வேலையை விட்டுட்டு டி.வி-க்கு வந்துட்டேன். எந்நேரமும் வேலை செய்றதைவிட நம்ம மனசுக்குப் பிடிச்ச வேலையை கொஞ்ச நேரம் செஞ்சாக்கூடப் போதும். முதல்ல மக்கள் டி.வி., அடுத்து ஜெயா ப்ளஸ், பொதிகை, மெகா, மூன் சேனல்னு கலந்துகட்டி எல்லா சேனல்லயுமே பரபரப்பு விஜே-வா மாறிட்டேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலயும், ஒரு வித்தியாசம் காட்டி சேனல் ஹெட்ஸ்கிட்ட பாராட்டு வாங்குவேன். ரஜினி சார், கமல் சார், விஜய், அஜித்தை தவிர எல்லாரையுமே பேட்டி எடுத்துட்டேன். சீக்கிரம் இவங்களையும் பிடிச்சுடுவேன்’’ என்று சுமையா சொல்ல, ``ரொம்ப வொர்க்கஹாலிக்கா இருக்கீங்களே... இந்த காதல், கல்யாணம்லாம் எப்போ?'’ என்று கேட்டால் ``கல்யாணம் பண்ணா ஒரு நடிகரையோ, இயக்குநரையோதான் கல்யாணம் பண்ணுவேன்’’ என்கிறார் சுமையா. # உங்க கொள்கையை நான் லைக் பண்றேன்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism