பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

குட்டி `தல'யின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்தான் கடந்த வார ஆன்லைன் வைரல். வேட்டி-சட்டையில் ஆத்விக் வலம்வர, மைக் பிடித்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது, அக்கா அனோஷ்கா. தம்பிக்காக ஸ்பெஷல் கவிதை ஒன்றையும் அனோஷ்கா எழுதி வாசிக்க, `தல' செம ஹேப்பி!

பிட்ஸ் பிரேக்

ஹாலிவுட்டில், சீரியலில் இருந்து சினிமா நடிகையாக புரமோஷன் பெற்றிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. 90-களில் ஹிட் அடித்த `பே வாட்ச்’ சீரியல், இப்போது சினிமா ஆகிறது. இதில் ரெஸ்லிங் புகழ் ‘தி ராக்’ ஜான்சனுடன் இணைந்து நடிக்கிறார் பிரியங்கா. படம் 2017-ல் ரிலீஸ்!

பிட்ஸ் பிரேக்

`ரூம்' படத்துக்காக ஆஸ்கர் வென்றிருக்கும் பிரீ லார்சனின் அடுத்த படம் `பாஸ்மதி புளூஸ்'.சயின்ட்டிஸ்ட்டான  பிரீ, அப்பாவுடன் சேர்ந்து மரபணு மாற்று அரிசியைக் கண்டுபிடிக்கிறார். அந்த அரிசியை இந்தியாவில் உள்ள விவசாயிகளிடம் விற்கச் சொல்லி அனுப்புகிறது பிரீ பணிபுரியும் நிறுவனம். அவர் இந்தியாவில் சந்திக்கும் பிரச்னை களையும், இந்திய விவசாயிகளின் உண்மை நிலையையும் சொல்கிறது படம்!

பிட்ஸ் பிரேக்

ஸ்ரீதேவி, அடுத்த சுற்றுக்கு ரெடி. அம்மணியின் அடுத்த புராஜெக்ட், ‘Mom’. சித்திக்கும் வளர்ப்பு மகளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்தான் கதை. ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகளாக நடிக்கிறார் அக்‌ஷராஹாசன்.

லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு ஆஸ்கர் கிடைத்த பரபரப்பை மிஞ்சியிருக்கிறது, கேரளா மாநில திரைப்பட விருதுகள். சிறந்த நடிகருக்கான விருதை துல்கரும், சிறந்த நடிகைக்கான விருதை பார்வதியும் வென்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் ‘பிரேமம்’ படத்துக்கு ஒரு விருதுகூடக் கிடைக்க வில்லை. ‘இந்த விருதுகளுக்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கிறது’ என `பிரேமம்’ ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொந்தளிக்க, ‘விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்’ என ஸ்மைலியுடன் ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

கோலிவுட் ஃபார்முலா பாலிவுட்டுக்கும் பரவியிருக்கிறது. பெரிய செலவில் தயாரிக்கப்பட்டு, பல ஆயிரம் கோடிகளுக்கு விற்கப்பட்ட `தில்வாலே' பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் அவுட். நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு 50 சதவிகிதம் பணத்தைத் திருப்பிக்கொடுத்திருக்கிறார் ஷாரூக் கான். அதேபோல `தமாஷா' பட நஷ்டத்துக்கும் தங்கள் பங்காக தீபிகா-ரன்பீர் இருவரும் இணைந்து தயாரிப்பாளருக்கு 15 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்களாம்!