பிரீமியம் ஸ்டோரி

  எவர்ஆஃப்டர் என்ற பெயரில் இசைக் குழுவைத் தொடங்கியிருக்கிறார் மடோனா செபாஸ்டியன். ஐந்து பேர் கொண்ட இந்த இசைக் குழுவில், மடோனாதான் லீட் பாடகர். `நடிகை என்பதைவிட பாடகர் என்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடிக்கும் படங்களில் நானே பாட வேண்டும் என்பதுதான் என் ஆசை. அது விரைவில் நிறைவேறும்' என்கிறார் மடோனா. பாட்டுன்னாலே மடோனாதான்!

இன்பாக்ஸ்

  `இந்திய சினிமா, ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுக்கப்படவில்லை என்றால், ஹாலிவுட் படங்கள் இந்திய மார்க்கெட்டைக் காலி செய்துவிடும்' என எச்சரித்திருக்கிறார் அமிதாப் பச்சன். `நான் அமெரிக்கா சென்றிருந்தபோது ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளர் என்னைச் சந்தித்து, இந்திய சினிமா மார்க்கெட் பற்றி புள்ளி விவரங்களோடு பேசினார். `நம் ஊர் சினிமா வியாபாரம் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்துவைத்து இருக்கிறார்களே!' என ஆச்சர்யப்பட்டேன். அப்போது அவர் `இந்திய சினிமா மார்க்கெட்டை எதிர்காலத்தில் ஹாலிவுட் படங்கள் ஆக்கிரமிக்கும்' என்றார். அவர் சொன்னது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. முன்னர் எல்லாம் இந்தியப் படங்கள் திரைக்கு வரும்போது ஹாலிவுட் பட வசூல் பாதிக்கும் என அந்தப் படங்களை வெளியிடாமல் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பார்கள். ஆனால் தற்போது, இந்தி படங்களோடு சேர்த்து ஹாலிவுட் படங்களையும் திரைக்குக் கொண்டுவருகிறார்கள். இந்தப் போட்டியைத் தாக்குப்பிடிக்க வேண்டுமானால், இந்தியப் படங்களின் தரம் உலகத்தரத்துக்கு இணையாக இருக்க வேண்டும்' என்கிறார் அமிதாப் பச்சன். தரம் முக்கியம் மக்களே!

எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள்தான் இந்தியாவில் அதிகம். கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்திருக்கிறார்கள். 1 மணி நேரத்துக்கு 17 பேர், ஒரு நாளைக்கு 400 பேர் உயிரிழக்கிறார்கள். நாட்டிலேயே அதிக அளவில் தமிழகத்தில்தான் கடந்த ஆண்டு  69,059 சாலை விபத்துக்கள் நடந்திருக்கின்றன. நகரங்களின்படி டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில்தான் 886 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. மரண சாலைகள்!

இன்பாக்ஸ்

• `பிரேமம்' படத்துக்கு அடுத்து தெலுங்கில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் `அ ஆ' முடித்த கையோடு, `பிரேமம்' தெலுங்கு வெர்ஷனில் நடித்து முடித்திருக்கிறார் அனுபமா பரமேஷ்வரன். தமிழில் தனுஷ் நடிக்கும் `கொடி' படத்தின் ஹீரோயினும் இவர்தான்.   `நிறையப் படங்கள் என்பதைவிட நல்ல படங்களில் நடிக்க மட்டுமே ஆசைப்படுகிறேன். அதனால் நான் நடிக்கும் படங்கள் குறைவாகவே இருக்கும்' என்கிறார் அனுபமா. தெளிவு பொண்ணு!

இன்பாக்ஸ்

• இந்தியாவுக்காக இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமார், 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இல்லை.  74 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து நர்சிங் யாதவ் தகுதிபெற்றார். ஆனால், நர்சிம் வெற்றிபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில், காயம் காரணமாக சுஷில்குமார் கலந்துகொள்ளவில்லை. `நான் மீண்டும் உடல்தகுதி பெற்று விட்டேன். எனக்கும் நர்சிங் யாதவுக்கும் இடையே தகுதிப் போட்டியை நடத்தி, அதில் வெற்றி பெறுபவரையே ஒலிம்பிக்குக்கு அனுப்ப வேண்டும்' என்கிற சுஷில்குமாரின் கோரிக்கையை, மல்யுத்த சம்மேளனும் டெல்லி உயர் நீதிமன்றமும் நிராகரித்துவிட்டன. கடந்த முறை இந்திய அணிக்குத் தலைமை யேற்று சென்ற சுஷில்குமாருக்குப் பதிலாக, இந்த முறை துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமையேற்க இருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

•   `வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நண்பர்களுக்கு, ஒரு லட்சம் கோழிகளை வழங்க இருக்கிறேன்' என்கிறார் உலகின் பெரும்பணக்காரர் பில்கேட்ஸ். `கோழி வளர்ப்பு என்பது, எளிமையானது. இதற்கு பெரிய அளவில் முதலீடு தேவை இல்லை; பராமரிப்புச் செலவும் கிடையாது. பெரும்பாலான கோழிகள் கிடைத்ததைச் சாப்பிட்டு உயிர் வாழ்பவை. ஒரு விவசாயி ஐந்து கோழிகள் வளர்க்கிறார் என்றால், அவற்றை நன்கு பராமரித்தால் அடுத்த மூன்று மாதத்தில் அவை நாற்பது கோழிக்குஞ்சுகளைப் பொரிக்கும். ஒரு கோழிக்குஞ்சின் விலை ஐந்து டாலர் என்று வைத்துக் கொண்டாலும், ஆண்டுக்கு ஆயிரம் டாலர் வரை கிடைக்கும். அதனால் கோழி வளர்ப்புதான் இன்றைய தேதியில் நல்ல லாபம் தரும் தொழில்' என பிசினஸ் டிப்ஸ் கொடுத்திருக்கிறார் கேட்ஸ். சிக்கன் ப்ளான் செம!

இன்பாக்ஸ்

•   கால்பந்து உலகின் எவர்கீரின் ஜாம்பவான் பீலேவின் 2000-க்கும் மேற்பட்ட பொருட்கள், லண்டனில் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. கோல்டன் பூட், உலகக்கோப்பை மாதிரி, பதக்கங்கள், பாஸ்போர்ட் எனக் கிட்டத்தட்ட எல்லா பொருட்களையுமே ஏலம்விட்டிருக்கிறார்கள். இந்திய மதிப்பில் அவர் பயன்படுத்திய ஷூ மட்டும் 6 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. நெருப்புடா!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

• `பாகுபலி-2' படத்துக்காக ஹார்ஸ் ரைடிங் கற்றுவருகிறார் தமன்னா. `பாகுபலி' முதல் பாகத்தில்  போர் வீராங்கனையாக நடித்திருந்தாலும் தமன்னாவுக்கு ரொமான்ஸ் காட்சிகளே அதிகம். ஆனால், இரண்டாவது பாகத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரமெடுக்கிறார் தமன்னா. இதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை என, தீவிர ஆக்‌ஷன் பயிற்சிகளில் இறங்கிவிட்டார் தம்மு.ஆக்‌ஷன் பேபி!

இன்பாக்ஸ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு