Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

சாய்னா நேவாலின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அதில் சாய்னா பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் ஷ்ரத்தா கபூர். இதற்காகக் கடந்த சில மாதங்களாக கோபிசந்த் மற்றும் சாய்னாவுடன் தீவிர பாட்மின்டன் பயிற்சியில் ஈடுபட்டுவந்தார். ஷ்ரத்தா பயிற்சியை முடித்துத் தயாரானால்தான் ஷூட்டிங்கைத் தொடங்க முடியும் எனத் தயாரிப்பாளர் தரப்பு காத்திருக்க, இன்னும் ஒரு மாசம்... இன்னும் இன்னும் என இழுத்தடிக்கிறார் ஷ்ரத்தா. அடுத்த மாதத்திற்குள் பயிற்சியை முடித்தால் ஷூட்டிங், இல்லையென்றால் வேற ஆளைப் பாத்துக்குவோம் எனக் கூறிவிட்டதாம் தயாரிப்பாளர் தரப்பு. ஆர்வக்கோளாறு பரிதாபங்கள்!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிநாட்டில் தைராய்டு சிகிச்சை, பேச்சுப் பயிற்சி என கேப்டன் அடுத்த இன்னிங்ஸுக்குத்  தயாராகிக்கொண்டிருக்கிறார். அப்பாவை அல்ட்ரா மாடர்னாக, பழைய பொலிவோடு மாற்றிக் காட்டுவேன் எனத் தன் அம்மாவிடம் வாக்குக் கொடுத்திருக்கிறார் விஜயகாந்தின் மகன் ஷண்முகப் பாண்டியன். இருவரும் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ படத்தில் மாறுபட்ட கேப்டனை நீங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டிருக்கிறார் ஷம்மு. பழைய பன்னீர்செல்வமா வரணும் கேப்டன்!

இன்பாக்ஸ்

மீபத்தில் டெக்ஸாஸ் பகுதியில் உள்ள அகதிகள் முகாமுக்கு விசிட் அடித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனைவி மெலானியா. அங்கு சென்றபோது பச்சை நிற கோட் ஒன்றை அணிந்திருந்தார். அதில் `நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை... நீங்கள்?’ என்று எழுதப்பட்டிருக்க, அடுத்த 24மணிநேரத்திற்கு நியூஸ் சேனல்கள் அதை பிரேக்கிங் நியூஸாகப் போட்டு அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மெலானியா தரப்பில் `ஒரு விளக்கமும் இல்லை, அது ஒரு சாதாரண கோட் அவ்வளவுதான்’ என விளக்கினார்கள். குசும்பு அதிபர் ட்ரம்ப் தன் பங்குக்கு ‘அது போலி செய்தி ஊடகங்களை தான் குறிக்கிறது. மெலானியா அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதைத்தான் உணர்த்தியிருக்கிறார்’ என ஒரே போடாகப் போட்டுவிட்டார்!  ட்ரம்பிஸ்தானு! 

இன்பாக்ஸ்

பிரபல பின்னணிப் பாடகர் ஏக்கான் ஆப்பிரிக்க நாடுகளில் பல சமூக சேவைகளைச் செய்துவருகிறார். செனகல் நாட்டு அதிபர் மேக்கி சால் 2000 ஏக்கர் நிலத்தை ஏக்கானுக்குப் பரிசளித்தார். அதை அந்நாட்டு மக்களுக்கே அளித்து, ஸ்மார்ட் சிட்டி ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஏக்கான். இந்த நகரில் டிஜிட்டல் கிரிப்டோ கரன்சி மூலமாக வர்த்தகம் நடைபெறும். இந்த நகரத்தில் உபயோகிக்கப்படும் டிஜிட்டல் கரன்சிக்கு ‘ஏக்காயின்’ (Akoin) எனப் பெயரிடப்படவிருக்கிறது. நைஸ் ப்ரோ!

இன்பாக்ஸ்

தோனியின் மனைவி சாக்‌ஷி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். எதிரிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பிஸ்டல் அல்லது 0.32 துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையைக் கேட்டிருக்கிறார். 2009லேயே தோனி இதுபோல துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மறுக்கப்பட்டு, பிறகு போராடி அனுமதி பெற்றார். டெரர் ஃபேமிலி

இன்பாக்ஸ்

பாலிவுட்டில் ‘நடிப்பு ராட்சஷன்’ என வர்ணிக்கப் படும் நவாஜுதீன் சித்திக் இப்போது தமிழ் கற்று வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவரோடு மோத விஜய் சேதுபதியும், நவாஜுதீனும் கைகோக்கப் போகிறார்களாம்! வா தல வா

இன்பாக்ஸ்

திரைப்பட நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் வீரர்கள் கிசுகிசுக்கப் படுவது இயல்பாகிவிட்டது. இந்த லிஸ்டில் தற்போது சேர்ந்திருப்பவர் கே.எல்.ராகுல். இந்தி நடிகை நிதி அகர்வாலுடன் சேர்ந்து டேட்டிங் போகிறார் எனக் கிசுகிசுக்கிறார்கள்.  ‘நாங்க கல்லூரி கால நண்பர்கள்!’ என எஸ்கேப் ஆகிறார், ராகுல்.  கிரிக்கெட்டை விட்ராதீங்க!

இன்பாக்ஸ்

ள்ளிப்படிப்பை முடித்து கனடாவுக்கு ‘ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ்’ படிக்கப் போயிருக்கிறார் விஜய் மகன் ஜாசன் சஞ்சய். அப்பாவைப்போல நடிப்பில் ஆர்வம் இல்லையாம் சஞ்சய்க்கு. சினிமாவில் இயக்கம்தான் அவர் சாய்ஸ். படிப்பை முடித்து வந்ததும் தளபதியே மகன் இயக்கத்தில் நடிப்பார் எனக் காத்திருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.  சோட்டா சர்கார்!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது உயிரிழந்தவர் நர்ஸ் லினி. இப்போது அவர் வேலை செய்த பரம்புரா தாலுகா அரசு மருத்துவமனைக்கு ‘ஏஞ்சல் லினி நினைவு மருத்துவமனை’ என்று பெயரிட்டுக் கௌரவித்துள்ளது கேரள அரசு. சலாம் சேட்டன்மாரே!