Published:Updated:

இந்த நாள்

இந்த நாள்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த நாள்

ஆதலையூர் த.சூர்யகுமார்

இந்த நாள்

பூலித் தேவன் பிறந்த நாள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டும் செவ்வல் பகுதியின் பாளையக்காரராக இருந்தவர் பூலித்தேவன். ஆங்கிலேயருக்கு வரி செலுத்த மறுத்து கலகக்குரல் எழுப்பியவர். 1766-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேப்டன் பௌட்சன் தலைமையிலான ஆங்கிலப்படை, வாசுதேவ நல்லூர் கோட்டையைத் தாக்கியது. இதில் ஐந்து ஆங்கிலத் தளபதிகள் இறந்தனர். இந்த வெற்றி, பூலித் தேவன் பெற்ற வெற்றிகளில் முக்கியமானது. தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவ்வல் பகுதியில் பூலித்தேவன் நினைவு மாளிகை அமைந்துள்ளது.

இந்த நாள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் (ஆசிரியர் தினம்)

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவை மட்டுமல்லாமல், சிறந்த தத்துவஞானி. இந்தியா சுதந்திரம் மற்றும் இந்தியக் கல்வி ஆகியவற்றில் தீவிர அக்கறைகொண்டிருந்தவர். ``கல்வி என்பது, மனித மனத்தில் ஒளி பாய்ச்சி அவனுக்குள்ளே இருக்கும் குரங்குத்தன்மையை நீக்கி, இதயத்தில் அன்பை வளர்த்து அனைத்துக்கும் மேலாக உயிரோட்டமுள்ள கற்பனைத்திறனை உருவாக்குவதாகும்’’ என்று கூறியவர். ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, பேராசிரியர், துணைவேந்தர், குடியரசு துணைத் தலைவர், குடியரசுத் தலைவர் என உயர்ந்தவர். இவருடைய பிறந்த நாளை, ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்த நாள்

உலக எழுத்தறிவு தினம்

அனைத்து எழுத்தறிவு நாள் உலகம் முழுவதும் செப்டம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் இந்த நாளை உலக எழுத்தறிவு தினமாக 1965-ம் ஆண்டு அறிவித்தது. இது, 1966-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. கல்வி அறிவின் முக்கியத்துவத்தை, தனிப்பட்ட மக்களுக்கும் சமூகத்துக்கும் அறியவைப்பதே இந்த நாளின் முக்கிய நோக்கம்.

இந்த நாள்

உலக முதல் உதவி தினம்

செப்டம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை உலக முதல் உதவி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினம், 2000-மாவது வருடத்தில் சர்வதேச செஞ்சிலுவைக் கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களால் உருவாக்கப்பட்டது. முதல் உதவியின் நோக்கம் என்பது, உயிர்களைக் காப்பாற்ற வேண்டும், நிலைமை மோசமாவதைத் தவிர்க்க வேண்டும். குணமாகும் நிலைமையைத் தொடங்குதல் ஆகிய மூன்று நோக்கங்களை உள்ளடக்கியது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, உலக முதல் உதவி தினம்.

இந்த நாள்

மகாகவி பாரதியார் நினைவு நாள்

`தேசிய கவி’ என்ற புகழுக்குச் சொந்தக்காரர். உணர்ச்சித் ததும்பும் கவிதைகளால் சுதந்திரப் போராட்ட உணர்வைத் தூண்டியவர். தமிழ், தேச நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு போன்ற பல்வேறு சமூகப் பார்வையோடு படைப்புகளைப் படைத்தவர். 1949-ம் ஆண்டு இவருடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதுதான்.

இந்த நாள்

தெரியுமா?

* தமிழ்நாட்டில் முதன்முதலாக அனல் மின்சாரம் தயாரிக்க தொடங்கிய இடம் நெய்வேலி.