Published:Updated:

பாகிஸ்தான் ராணுவத்தின் பாடலை காப்பியடித்தாரா பா.ஜ.க எம்.எல்.ஏ?

தெ.சு.கவுதமன்

பாகிஸ்தான் ராணுவத்திற்காக, கடந்த மார்ச் 23ல் நடந்த பாகிஸ்தான் தினக் கொண்டாட்டத்தின்போது வெளியிடப்பட்ட 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற தொடக்க வரியில், பாகிஸ்தான் என்பதற்குப் பதிலாக 'ஹிந்துஸ்தான்' என்ற வார்த்தையை மட்டும் சேர்த்து, அந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியது.

பாகிஸ்தான் ராணுவத்தின் பாடலை காப்பியடித்தாரா பா.ஜ.க எம்.எல்.ஏ?
பாகிஸ்தான் ராணுவத்தின் பாடலை காப்பியடித்தாரா பா.ஜ.க எம்.எல்.ஏ?

தெலுங்கானாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் சொந்தமாகப் பாடி வெளியிட்ட தேச பக்திப்பாடல், பாகிஸ்தான் ராணுவத்தின் பாடலை காப்பியடித்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. நேற்று (14.4.19) ஞாயிற்றுக்கிழமை, ராம நவமியன்று காலை 11.45 மணிக்கு, தனது தேச பக்திப்பாடலை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணிப்பதாக தெலுங்கானாவைச்சேர்ந்த எம்.எல்.ஏ ராஜா சிங் என்பவர் ட்விட்டரில் அறிவித்திருந்தார். அதன்படி, 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்' என்ற பெயரில் அவர் வெளியிட்ட பாடல்குறித்து பாகிஸ்தானியர்கள், ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்பினார்கள். 

பாகிஸ்தான் ராணுவத்தின் பாடலை காப்பியடித்தாரா பா.ஜ.க எம்.எல்.ஏ?

அந்தப் பாடலைக் கேட்ட பலரும், அது பாகிஸ்தான் ராணுவத்தின் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற வீடியோ பாடலைக் காப்பியடித்து உருவாக்கப்பட்டிருப்பதாக ட்வீட் செய்தனர். இரண்டு வீடியோ பாடலையும் ஒப்பிட்டு, பா.ஜ.க எம்.எல்.ஏ காப்பியடித்திருப்பதைக் கிண்டலடித்திருந்தனர். பாகிஸ்தான் ராணுவத்திற்காகக் கடந்த மார்ச் 23ல் பாகிஸ்தான் தினக் கொண்டாட்டத்தின்போது வெளியிடப்பட்ட 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற தொடக்க வரியில், பாகிஸ்தான் என்பதற்குப் பதிலாக ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை மட்டும் சேர்த்து, அந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவமும் குற்றம்சாட்டியது. 

பாகிஸ்தான் ராணுவத்தின் பாடலை காப்பியடித்தாரா பா.ஜ.க எம்.எல்.ஏ?

இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ, எனது பாடல் பாகிஸ்தான் மீடியா அளவிற்கு பிரபலமாகியிருப்பது மகிழ்ச்சியென்றும், தனது பாடலைத்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் காப்பியடித்திருக்கக்கூடும் என்றும் கூறினார்.

அவருக்குப் பதிலளித்த பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஆசிப் கஃபூர், ''நீங்கள் காப்பியடித்தது குறித்து மகிழ்ச்சி. அதேவேளை, பேசும்போது உண்மையையும் காப்பியடிக்க வேண்டும்'' என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், பாகிஸ்தான் மீடியா இதனைக் கவனிக்கவில்லை, மற்றவர்கள்தான் இதுகுறித்து சந்தேகத்தை எழுப்பினார்கள். உங்களுடைய பொய் ஒன்றும் ஆச்சர்யமளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் பாடலை காப்பியடித்தாரா பா.ஜ.க எம்.எல்.ஏ?

இந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு சர்ச்சை ஒன்றும் புதிதில்லை. கடந்த பிப்ரவரியில்தான், பாகிஸ்தானின் மருமகளான சானியா மிர்சாவை தெலுங்கானாவின் பிராண்ட் அம்பாசிடராக நியமித்தது தவறென்று கூறி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். தற்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் பாடலை காப்பியடித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்!