Published:Updated:

நில[லா]ப் பத்திரம்!

நில[லா]ப் பத்திரம்!

பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
நில[லா]ப் பத்திரம்!
நில[லா]ப் பத்திரம்!
நில[லா]ப் பத்திரம்!
 
நில[லா]ப் பத்திரம்!
நில[லா]ப் பத்திரம்!

பூமியைப் புரட்டி எடுக்கும் ரியல் எஸ்டேட் பார்ட்டிகள் நிலாவை மட்டும் விட்டுவைப்பார்களா?

நில[லா]ப் பத்திரம்!

நிலாவையும் ப்ளாட் போட்டு விற்கிறது பிரிட்டனில் உள்ள இன்டர்நேஷனல் லூனார் எம்பஸி என்ற அமைப்பு. நிலாவில் இடம் வாங்க வேண்டுமானால், 1,650 ரூபாயை (24 பவுண்டுகள்) இணையம் மூலமாகச் செலுத்த வேண்டும். யார் பெயருக்கு நிலாப் பத்திரம் வேண்டும் என்கிற தகவல் அவசியம். அவ்வளவுதான். கலை வேலைப்பாடு நிறைந்த பெட்டியில் நில(£)ப் பத்திரம் வந்து சேரும். கூடவே ஐ.நா. பொதுச் சபை, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிகாரப்பூர்வ அனுமதிக் கடிதங்களின் நகல்களும் இருக்கும். நிலவில் இடம் தெரியாமல் நீங்கள் அல்லாடக் கூடாதே? அதனால், நிலவில் உங்கள் நிலம் இருக்கும் இடத்தின் வரைபடத்தையும் அனுப்புவார்கள். நிலாவின் சட்ட விதிகள், விதிமுறைகள், உரிமைகள் அடங்கிய தொகுப்புப் புத்தகமும் உண்டு. நாளை நிலாவில் வாய்க்கால் வரப்பு தகராறு ஏற்பட்டால், இந்தத் தொகுப்புப் புத்தகத்தின் தீர்ப்பே இறுதியானது. நிலத்தை மட்டும்தான் விற்பார்கள். போக்குவரத்து வசதிகளை நீங்கள்தான் செய்துகொள்ள வேண்டும்.

நீங்கள் கொஞ்சம் பசையுள்ள பார்ட்டியா? செவ்வாய், வெள¢ளி, புதன் கிரகங்களிலும் ப்ளாட்கள் வாங்கி காதலிகளுக்குப் பரிசளிக்கலாம். முதலில் வருபவருக்கே முன்னுரிமையாம். சட்டுபுட்டுனு கௌம்புங்க தலைவா!

 
நில[லா]ப் பத்திரம்!
-பா.முருகானந்தம்
நில[லா]ப் பத்திரம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு