பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
பண மாலை!
பண மாலை!
பண மாலை!
 
பண மாலை!
பண மாலை!
பண மாலை!

ரசியலில் பரிசு என்றால் கலெக்ஷன் என்று அர்த்தம். அப்படி அடிக்கடி 'பரிசு' வாங்குபவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி. உ.பி-யின் முதல் அமைச்சரான மாயாவதி மீது வருமானத் துக்கு மீறிச் சொத்து சேர்த்ததாக வழக்குகள் பதிவு செய்தபோது மாயாவதி கொடுத்த பதில்... ''இவை அத்தனையும் எனக்கு கட்சித் தொண்டர்கள் அன்பாகக் கொடுத்த பரிசுகள்'' என்றார்.

சென்ற மாதம் லக்னோவில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் 25-ம் ஆண்டு விழா. அப்போது சுமார் பத்து பேர் ஒரு பிரமாண்டமான மாலையை தூக்கி வந்து மாயாவதிக்கு பரிசளித்து அணிவித்தார்கள். அந்த மாலை 1,000 ரூபாய் நோட்டுகளால் ஆனது. ஆயிரக்கணக்கான 1,000 ரூபாய் சலவை நோட்டுகளை அழகாக மடித்து, நெருக்கிக் கட்டப்பட்ட ராட்சஸ மாலை.

நாடாளுமன்றத்தில் மாலை விவகாரம் எழுப்பப்பட, அரசியல் சூடு கிளம்பியது. அந்த நோட்டு மாலையின் மதிப்பு 15 கோடி ரூபாய் இருக்கும் என்று விவாதம் கிளம்பியது. 'ரூபாய் நோட்டுகளை அவமரியாதை செய்ததற்காக வழக்குப் போட வேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. 'இந்த பரிசுப் பணத்துக்கு வருமான வரித் துறை கணக்கு கேட்க வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சி கொந்தளித்தது. மாயாவதி அசரவில்லை. ''இனிமேல் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் கட்சிக்காரர்கள் இந்த மாதிரி பண மாலையை மட்டுமே அன்பளிப்பாகத் தர வேண்டும்'' என்று அன்பு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார்!

 
பண மாலை!
-ஆர்.ஷஃபி முன்னா, ழிபவண்குமார்
பண மாலை!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு