பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
தந்தை தந்த பரிசு!
தந்தை தந்த பரிசு!
தந்தை தந்த பரிசு!
 
தந்தை தந்த பரிசு!
தந்தை தந்த பரிசு!

ன்னையே பரிசாகத் தந்த தந்தையின் கதை இது!

அமெரிக்காவில் உள்ள நெவாடா மாநிலத்தின் கார்ஸன் நகரைச் சேர்ந்தவர் கேஸி ஹார்லேஸ். அமெரிக்க ராணுவ வீரரான கேஸி, குடும்பத்தைப் பிரிந்து இராக்கில் பல மாதங்களாகப் பாதுகாப்புப் பணியில் இருந்தார். தன் ஆறு வயது மகன் கேப்ரியல் ஹர்லெசுக்கு பிறந்த நாள் வந்தபோது வித்தியாசமான பரிசு தர விரும்பி னார். தான் நாடு திரும்பும் நாளும், கேப்ரியலின் பிறந்த நாளும் ஒரே தினத்தில் வருவது அவரது ஞாபகத் துக்கு வர தன்னையே மகனுக்குப் பரிசளிக்க முடிவு செய்தார். சொந்த ஊருக்குத் திரும்பியதும், நான்கு அடி உயர பரிசுப் பெட்டி யைத் தயாரித்து உள்ளே உட்கார்ந்துகொண்டு, பேக் பண்ணச் சொல்லிவிட்டார். ''இராக்கில் இருக்கும் உன் தந்தை உனக்காகப் பரிசு அனுப்பியிருக்கிறார்'' என்று கேப்ரியலுக்கு பார்சலைக்கொண்டு வந்து கொடுத்தார்கள் கேஸியின் நண்பர்கள். அப்புறம் என்ன நடந்தது?

''பரிசுப் பெட்டியில் மறைந்துஇருப்பது பரவசமான அனுபவமாக இருந்தது. கேப்ரியல் பரிசுப் பெட்டியைப் பிரிக்கும் வரை எனது வயிற்றினுள் பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோல் உணர்ந்தேன். ஆனால், உள்ளே என்னை எதிர்பார்க்காத கேப்ரியல் பயந்துவிட்டான். சாக்லேட் கொடுத்து அவனைச் சமாதானப்படுத்தினேன். கடைசி வரை என்னை மறக்க மாட்டான் என் மகன்'' என்று பூரிக்கிறார் கேஸி!

 
தந்தை தந்த பரிசு!
-இரா.கோகுல் ரமணன்
தந்தை தந்த பரிசு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு