பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
புஷ் 'ஷூ'!
புஷ் 'ஷூ'!
புஷ் 'ஷூ'!
 
புஷ் 'ஷூ'!
புஷ் 'ஷூ'!
புஷ் 'ஷூ'!

''இராக்கில் அநாதைகளாக் கப்பட்ட குழந்தைகள், விதவை களாக்கப்பட்ட பெண்கள் சார் பாக நான் செலுத்தும் பரிசு இது!'' என்றபடி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை நோக்கி தன் ஷூக்களை வீசி எறிந்து உலகைப் பரபரப்பாக்கியவர் முன்டாதர் அல் ஜெய்தி.

ஜார்ஜ் புஷ்ஷின் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பரிசு வழங்கிய முன்டாதர் ஒரு பத்திரிகையாளர். இந்தச் சம்பவத்துக்குப் பின் இஸ்லாமிய நாடுகளின் ஹீரோ ஆகிவிட்டார் அவர். இராக் மக்கள் அவரது தைரியத்தையும் கோபத்தையும் பாராட்டி விதவிதமான பரிசுகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவரின் முன்னாள் பாஸ் ஒருவர் பிரமாண்ட வீடு ஒன்றைப் பரிசாக அறிவித்தார்.

புஷ் 'ஷூ'!

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பல பெண்கள் முன்டாதரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். மொராக்கோவில் வசிக்கும் ஒரு இராக்கியர் தனது மகளையே அவருக்கு பரிசாகக் கொடுக்க முன் வந்தார். அத்துடன் முன்டாதரின் ஷூக்களுக்கு

10 மில்லியன் டாலர் பரிசு தருவதாகவும் அறிவித்தார். இன்னொரு மொராக்கோ கோடீஸ்வரர் தங்க சேனை பூட்டிய குதிரையைப் பரிசாக அறிவித்தார். சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் புஷ் மீது வீசப்பட்ட அந்த ஷூவை 47 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வதாக அறிவித்தார். இப்படி பரிசு அறிவிப்புகள் குவிந்துகொண்டு இருந்தபோதே அமெரிக்க அதிபரைத் தாக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டார் முன்டாதர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று உலகெங்கும் கோரிக்கை வலுத்தது. இராக் அதிபரின் மன்னிப்பைத் தொடர்ந்து விடுதலையானார்.

வெளியே வந்ததும் இந்தப் பரிசு அறிவிப்புகளுக்கு அவர் செவி சாய்க்கவில்லை. ''இனிமேல் பத்திரிகையாளராகப் பணிபுரிய விருப்பம் இல்லை. இராக் குழந்தை களுக்காக அநாதை இல்லம் ஒன்றை தொடங்கப்போகிறேன்'' என்று அறிவித்திருக்கிறார் முன்டாதர்!

 

 
புஷ் 'ஷூ'!
-இரா.கோகுல்ரமணன்
புஷ் 'ஷூ'!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு