பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
ட்ரோஜன் ஹார்ஸ்!
ட்ரோஜன் ஹார்ஸ்!
ட்ரோஜன் ஹார்ஸ்!
 
ட்ரோஜன் ஹார்ஸ்!
ட்ரோஜன் ஹார்ஸ்!

ரு நாட்டையே நாசமாக்கிய பரிசு இது. ட்ராய் நகரத்துக்கு எதிரே இருந்தது கிரேக்க நகரமான ஸ்பார்ட்டா. இரண்டு நகரங்களுக்கும் ஏழாம் பொருத்தம். ட்ராயைக் கைப்பற்ற சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது ஸ்பார்ட்டா. ட்ராய் மக்கள் ஸ்பார்ட்டா படையைத் தடுப்பதற்காக நகரத்தைச் சுற்றி 20 அடி உயரத்தில்

ட்ரோஜன் ஹார்ஸ்!

பலமான சுற்றுச் சுவர் எழுப்பி இருந்தனர். அந்தச் சுவர் பலம் வாய்ந்தது. மூடி இருக்கும் ஒரே இரும்புக் கதவைத் திறந்தால்தான் ட்ராய் நகரத்துக்குள் நுழைய முடியும். ஸ்பார்ட்டா மன்னன் ஒடிசியஸ் சூழ்ச்சியின் மூலம் ட்ராயைக் கைப்பற்ற நினைத்தான். சும்மா ஒப்புக்கு ஒரு போர் நடத்திவிட்டு, ''உங்களோடு சண்டை போடும் அளவுக்கு எங்களுக்குப் பலம் இல்லை. எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். உங்கள் வீரத்துக்கு ஏதாவது பரிசு கொடுக்க நினைக்கிறோம்'' என்று ட்ராய் மன்னன் ட்ரோஜனுக்குத் தூது அனுப்பினான். ஒடிசியஸின் சூழ்ச்சி தெரியாமல் ட்ரோஜன் பரிசை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டார். ஸ்பார்ட்டா வீரர்கள் மரத்தினால் ஆன பெரிய குதிரை பொம்மையை வடிவமைத்தார்கள். உட்பகுதியில் 30 பலம் வாய்ந்த வீரர்கள் பதுங்கிக்கொண்டார்கள். அதற்கு 'ட்ரோஜன் ஹார்ஸ்' என்று பெயர்வைத்தார்கள்.

ஸ்பார்ட்டா வீரர்கள் குதிரையை இழுத்துக்கொண்டு ட்ராய் கோட்டைக்கு வந்தார்கள். வாசலிலே நிறுத்திவிட்டு மன்னனை வணங்கிவிட்டுச் சென்றுவிட்டார்கள். ட்ராய் மக்கள் உற்சாகமாக பரிசை ஏற்றுக்கொண்டார்கள். இரும்புக் கதவைத் திறந்து குதிரையை உள்ளே இழுத்துச் சென்றார் கள்.

ட்ராய் அமைச்சர்கள் சிலர் இந்தக் குதிரையை எரித்துவிடலாம் என்று ட்ரோஜனுக்கு யோசனை சொன்னார்கள். ஆனால், ''இது நம் வீரத்துக்கான பரிசு. இதை ஆண்டாண்டு காலம் பாதுகாத்துவைக்க வேண்டும்'' என்று மறுத்துவிட்டார் ட்ரோ ஜான்.

அன்று இரவு ட்ராய் நகரமே வெற்றி விருந்தைக் கொண்டாடியது. கேளிக்கைகள் முடிந்ததும் மக்கள், படை வீரர்கள் எல்லோரும் உறங்கச் சென்றுவிட்டனர். குதிரைக்குள் இருந்த ஸ்பார்ட்டா வீரர்கள் குதிரையில் இருந்து வெளியே வந்தார்கள். காவலுக்கு இருந்த சில வீரர்களைக் கொன்றுவிட்டு இரும்புக் கதவைத் திறந்துவிட்டார்கள். வெளியே காத்திருந்த ஸ்பார்ட்டா வீரர்கள் உள்ளே நுழைந்து திடீர் தாக்குதலில் இறங்க, ட்ராய் நகரம் வீழ்ந்தது.

இதில் இருந்துதான் கண்காணிப்பை மீறி கம்யூட்டருக்குள் நுழைந்துவிடும் வைரஸ்களுக்கு 'ட்ரோஜன் வைரஸ்' என்று பெயரிட ஆரம்பித்தார்கள்!

 
ட்ரோஜன் ஹார்ஸ்!
- பா.ஜெயவேல்
ட்ரோஜன் ஹார்ஸ்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு