Published:Updated:

சிங்கத்தைப் பரிசாகக் கொடு!

சிங்கத்தைப் பரிசாகக் கொடு!

பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு : பரிசு விகடன்
சிங்கத்தைப் பரிசாகக் கொடு!
சிங்கத்தைப் பரிசாகக் கொடு!
சிங்கத்தைப் பரிசாகக் கொடு!
 
சிங்கத்தைப் பரிசாகக் கொடு!
சிங்கத்தைப் பரிசாகக் கொடு!

''என் லவ்வரோட பர்த்டேவுக்கு ஒரு சிங்கத்தை கிஃப்ட்டாக் கொடுத்தேன்டா!'' என்று உதார்விட ஆசையா? உங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது கிறிஸ்ட்டியன் எய்டு, வேர்ல்டு விஷன், கீகீதி(வேர்ல்டு வைல்டு லைஃப் ஃபண்ட்) ஆகிய அமைப்புகள் ''கிஃப்ட் வாங்கலியோ... கிஃப்ட்'' என்று காட்டுவிலங் குகளை நெட்டில் ஏலம் போடுகின்றன இந்த அமைப்புகள்.

''சிங்கத்தை எப்படிப் பரிசாகக் கொடுப்பது?'' என்று பதறா தீர்கள். சிங்கம் காட்டிலோ, வனவிலங்குக் காப்பகத்திலேயோ பத்திரமாக இருக்கும். அதற்குப் பல் விளக்கும் வேலை எல்லாம் உங்களுக்குக் கிடையாது. அதன் மீதான உரிமைகள் உங்கள் நண்பனுக்கோ, காதலிக்கோ கிடைக்கும். கம்பீரமான சிங்கத்துக்கு 'மணி' என்று செல்லப் பெயர் சூட்டலாம். ஆன்லைனில் அதன் நடமாட்டங்களைக் கண்காணிக்கலாம். அதன் உணவுக்குப் பணம் செலுத்தலாம். ''நாங்கல்லாம் சாஃப்ட் பார்ட்டி'' என்று தொடை நடுங்குபவர்கள் டால்ஃபினைப் பரிசாகத் தரலாம். ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு ரேட். டப்பு பார்ட்டியா இருந்தால், உலக அளவில்

சிங்கத்தைப் பரிசாகக் கொடு!

நல்லது செய்யலாம். பங்களாதேஷில் உள்ள ஏழைக் குடும்பம் ஒன்றுக்கு வாத்துக்களை வாங்கி அன்பளிப்பாகக்கொடுக் கலாம். சூடானின் கரடுமுரடான பகுதியில் வாழும் விவசாயிகளுக்கு கழுதைகளைப் பரிசளிக்கலாம். 'பரிசளிக்கும் விலங்கை கண்ணால் பார்க்க வேண்டும்' என்பவர்கள் வண்டலூர் ஜூவில் விலங்குகளை உங்கள் பெயரிலோ, மற்றவர்கள் பெயரிலோ தத்து எடுக்கலாம். அதன் உணவுக்கு ஸ்பான்சர் செய்யலாம்.

''இவ்வளவு செலவு செய்து நான் தரப்போற பரிசை நானே தொட முடியாதா?'' என்று டென்ஷன் ஆகுபவர்களுக்கு, ''அரிய வகை உயிர் இனங்களைக் காக்கவும், அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் உங்களின் பரிசு உதவுமே!'' என்று பதில் சொல்கிறது கீகீதி.

 
சிங்கத்தைப் பரிசாகக் கொடு!
-இரா.மன்னர்மன்னன்
சிங்கத்தைப் பரிசாகக் கொடு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு